பதிப்புகளில்

சர்வதேச கணிதத்துறை பரிசான ’ஃபீல்ட்ஸ் மெடல்’ வென்றுள்ள இந்தியர்!

இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலியாவில் கணித நிபுணராக பணிபுரியும் அக்‌ஷய் வெங்கடேஷ் ஃபீல்ட்ஸ் மெடல் கிடைத்திருப்பது, இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும்.

10th Aug 2018
Add to
Shares
131
Comments
Share This
Add to
Shares
131
Comments
Share

ஃபீல்ட்ஸ் மெடல், கணிதத்துறையில் பெரும்பங்கு ஆற்றியவர்களுக்கு கொடுக்கப்படும் உலகிலேயே உயர்ந்த கவுரம் மற்றும் பரிசாகும்.

தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் அளித்த பேட்டியொன்றில் இளம் அக்‌ஷய் சொன்னது, 

“ இயற்பியலிலோ, கணிதத்திலோ எனக்கு ஆய்வு செய்ய வேண்டும். அல்லது, இரண்டிலும்.”

கடின உழைப்பாலும், தீர்க்கமான முயற்சிகளாலும் தனது கனவை மெய்ப்பட செய்திருக்கிறார் அக்‌ஷய் வெங்கடேஷ். இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த 36 வயதான ஆக்‌ஷய் வெங்கடேஷ், இந்த வருடத்தின் ஃபீல்டு விருது பெறும் நான்கு பேரில் ஒருவராக தேர்வாகியிருக்கிறார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த சர்வதேச கணித காங்கிரஸில் அக்‌ஷய் வெங்கடேஷுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், பிரின்ஸ்டன் பல்கலைகழக பட்டதாரியான மஞ்சுல் பார்கவாவிற்கு பிறகு இந்த விருதை வாங்கும் இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த ஒரே நபர் அக்‌ஷய் வெங்கடேஷ் மட்டுமே.

Image courtesy : Twitter

Image courtesy : Twitter


நம்பர் தியரியில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டுபிடிக்க நகரும் பொருட்களின் ஈக்வேஷன்களை ஆய்வு செய்யும் டைனாமிக்ஸ் தியரியை பயன்படுத்தியதுவே அக்‌ஷய்க்கு இந்த அங்கீகாரத்தை பெற்று கொடுத்திருக்கிறது. முழு எண்கள், முதன்மை எண்கள் மற்றும் இண்டிஜர்களை ஆய்வு செய்வதே நம்பர் தியரி.

கணிதத்துறையில் ஆற்றிய பங்கிற்காக பல விருதுகளை பெற்றிருக்கிறார் அக்‌ஷய். 2007 ஆம் ஆண்டில் சலேம் பரிசு, 2008 ஆம் ஆண்டில் சாஷ்ட்ர ராமானுஜன் பரிசு, 2016 ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ் பரிசு மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஆஸ்ட்ரோவோக்சி பரிசு ஆகியவற்றை பெற்றிருக்கிறார்.

தற்போது இவருக்கு கொடுக்கப்பட்டிருக்குல் ஃபீல்டு மெடல் பரிசு என்பது ஒரு தங்க பதக்கமும், பதினைந்தாயிரம் கனடா டாலர்களும் உட்கொண்டது. 1932 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த கணித மேத ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் கேட்டுக் கொண்டதன் பெயரில் இந்த விருது தொடங்கப்பட்டது. ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் 1924 ஆம் ஆண்டு, டோரோண்டோவில் கணித மாநாடு ஒன்றை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

அக்‌ஷய் வெங்கடேஷ், தனக்கு கணிதம் மீது இருக்கும் ஆர்வம் குறித்து அளித்த பேட்டியொன்றில், 

“பெரும்பாலான சமயங்களில் நீங்கள் கணக்கு போடும் போது, விடை வராமல் மாட்டிக் கொண்டு இருப்பதாக உணர்வீர்கள். ஆனால், அதே சமயம் கணக்கை தொடரும் போது பெருமையாகவும் உணர்வீர்கள் - அது ஒரு மகத்தான உணர்வு, ஏதோ ஒரு அர்த்தம் நிறைந்த காரியத்தை செய்தது போல உணர்வீர்கள்,” என்று சொல்லியிருக்கிறார்.
இளம் வயதில் அக்‌ஷய். Image Courtesy : starsunfolded.com

இளம் வயதில் அக்‌ஷய். Image Courtesy : starsunfolded.com


1981 ஆம் ஆண்டு புது தில்லியில் பிறந்த அக்‌ஷய், இளமையிலேயே பெரும் சாதனைகளை செய்தவர். தன்னுடைய பதினோராவது வயதில் சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாடில் வெண்கல பதக்கம் வென்றிருக்கிறார். பிறகு, கணிதத்தை தன்னுடைய பாடமாக மாற்றிக் கொண்ட போது, சர்வதேச கணித ஒலிம்பியாடில் இரண்டு பதக்கங்களை வென்றார்.

அவருக்கு இரண்டு வயது இருக்கும் போது, பெற்றோர்களுடன் பெர்த் நகரில் குடியேறினார். பதின்மூன்றாவது வயதிலேயே உயர்கல்வியை முடித்துவிட்டு, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைகழகத்தில் இணைந்தார். தன்னால் முதலாண்டு பாடங்களின் பரீட்சைகள் எல்லாவற்றையும் எழுத முடியும் என்று நிரூபித்த பிறகு, இரண்டாம் ஆண்டு கணித பாடத்தை பயின்றார்.

1997 ஆம் ஆண்டு, தன்னுடைய பதினாறு வயதில், கணித்தத்தில் ஹானர்ஸ் பட்டம் வாங்கினார். இதுவரை இந்த சாதனை முறியடிக்கப்படாமலேயே இருக்கிறது. தன்னுடைய இருபதாம் வயதில் ப்ரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் இருந்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இதன் பிறகு,மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப இன்ஸ்ட்டிட்யூல் பயிற்றுனர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது - இது ஒரு கௌரவ பதவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு இவர் க்ளே ஆராய்ச்சியாளரான பிறகு, ந்யூ யார்க் பல்கலைகழகத்தின் குராண்ட் இன்ஸ்டிட்யூட்ட் ஆஃப் மேத்தமெட்டில் சயின்ஸில் துணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய 27 ஆம் வயதில் பேராசிரியரான அக்‌ஷய் தற்போது இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடியில் ஆசிரியர் குழுவில் இருக்கிறார். 

கட்டுரை: Think Change India | தமிழில்: ஸ்னேஹா

Add to
Shares
131
Comments
Share This
Add to
Shares
131
Comments
Share
Report an issue
Authors

Related Tags