பதிப்புகளில்

நிறுவனம் தொடங்கி 7 ஆண்டுகள் வரை இனி ‘ஸ்டார்ட்-அப்’ என்ற அங்கீகாரம் கிடைக்கும்- ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தில் மாற்றம்!

ஸ்டார்ட் அப்பின் விளக்கத்தை அரசாங்கம் திருத்தியமைத்ததால் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் தொழில்முனைவை ஊக்குவிப்பதும் சலுகைகள் பெறுவதும் எளிதாகியுள்ளது!

YS TEAM TAMIL
31st May 2017
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
image


ஒரு நிறுவனம் இணைக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட தேதியிலிருந்து ஏழு வருடங்களுக்கு ஸ்டார்ட்-அப்பாக கருதப்படும் என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது இந்திய ஸ்டார்ட் அப்புகளுக்கான தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (DIPP). ஸ்டார்ட் அப் ஒரு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வளர்ச்சியடைந்து நிலைநிறுத்திக் கொள்ள எடுத்துக்கொள்ளப்படும் அதிகமான நேரத்தை கருத்தில் கொண்டே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்டார்ட் அப்பாக கருதப்படும் காலகட்டம் ஐந்து ஆண்டுகளாக இருந்தது.

எனினும் பயோடெக்னாலஜி துறையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்களுக்கு மட்டும் இணைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 10 ஆண்டுகள் ஸ்டார்ட் அப்பாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் அப் இந்தியாவின் கீழ் வரிச் சலுகைகள் பெற ஸ்டார்ட் அப்கள் சிறிய அளவில் புதிய தொழில் புரிவோரிடமிருந்தோ அல்லது துறையில் இணைந்திருப்போரிடமிருந்தோ பரிந்துரை கடிதம் பெறவேண்டிய அவசியமில்லை என்று DIPP அறிக்கை தெரிவிக்கிறது.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அல்லது வருமானம் அல்லது பிற மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கவேண்டும். இப்படிப்பட்ட வளர்ச்சியை எட்டக்கூடிய வணிக மாதிரியைக் கொண்ட நிறுவனங்கள் என்று ஸ்டார்ட் அப்பின் பொருள் வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

”ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதத்தில் பங்குதாரர்களுடன் தொடர்ந்து விரிவாக ஆலோசனைகளை DIPP மேற்கொண்டு வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் புதிய தொழிலை எளிதாகத் துவங்கவும், ஸ்டார்ட் அப் இகோசிஸ்டத்தை ஊக்குவிக்கவும், வேலை தேடுவோருக்கு பதிலாக வேலை உருவாக்குவோர் நிறைந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சியாகும்.” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் ஸ்டார்ட் அப் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டது. புதுமையை வளர்க்கவும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1. இந்தியாவில் தனியார் வரையறுக்கபட்ட நிறுவனமாக இணைக்கப்பட்டிருக்கும் (2013, கம்பெனி ஆக்ட் விளக்கப்படி), கூட்டு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் (1932, பார்ட்னெர்ஷிப் ஆக்ட் பிரிவு 59-ன் கீழ் பதிவுசெய்தல்) அல்லது வரையறுக்கபட்ட பொறுப்பு கூட்டாக (லிமிடெட் லயாபிளிட்டி பார்ட்னெர்ஷிப் ஆக்ட் 2008) இருக்கும் நிறுவனங்கள்.

2. இணைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை ஆகியிருக்கும் நிறுவனங்கள்; பயோடெக்னாலஜி பிரிவைப் பொறுத்தவரை இணைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து பத்தாண்டுகள் வரை ஆகியிருக்கும் நிறுவனங்கள்.

3. இணைக்கபட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட தேதியிலிருந்து எந்த ஒரு நிதியாண்டின் வருவாயும் 25 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் நிறுவனங்கள்.

4. தயாரிப்பு அல்லது செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, வளர்ச்சி, மேம்படுத்துதல் குறித்த பணிகளில் ஈடுபட்டிருந்தாலோ, அல்லது வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் அல்லது பணம் அல்லது பிற சொத்துக்களை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக சாத்தியக்கூறுகள் நிறைந்த வணிக மாதிரி கொண்ட நிறுவனங்கள்.

ஆகியவை திருத்தியமைக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் விளக்கமாகும் என்று புதிய அரசாங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்திலிருந்து தனியாக பிரிந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கினாலோ அல்லது ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தை மறுகட்டுமானம் செய்தாலோ ஸ்டார்ட் அப்பாக கருதப்பட மாட்டாது.

விளக்கம்

1. ஒரு நிறுவனம் இணைக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட தேதியிலிருந்து ஏழு வருடங்களை நிறைவு செய்திருந்தாலோ, கடந்த ஆண்டிற்கான வருவாய் 25 கோடி ரூபாக்கும் அதிகமாக இருந்தாலோ அந்நிறுவனம் ஸ்டார்ட் அப்பாக கருதப்படாது.

2. வருவாய் என்பது 2013, கம்பெனிஸ் ஆக்ட் விளக்கத்தின்படியாகும்.

அங்கீகரிக்கப்படும் முறை

ஸ்டார்ட் அப்பாக அங்கீகரிக்கப்படுவதற்கு DIPP-ல் அமைக்கப்பட்ட மொபைல் செயலி அல்லது போர்டலில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும். நிறுவனம் இணைக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட சான்றிதழை ஆன்லைன் விண்ணப்பத்துடன் இணைத்து கேட்கப்பட்டுள்ள மற்ற விவரங்களையும் வழங்கவேண்டும்.

ஸ்டார்ட் அப்கள் எவ்வாறு தங்களது தயாரிப்பு அல்லது செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, வளர்ச்சி, மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் அல்லது பணம் அல்லது பிற மதிப்புமிக்க சொத்துக்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்த வணிக மாதிரியாக செயல்படுகிறது என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

வரிச்சலுகைகள்

வரிச்சலுகைகள் பெற ஸ்டார்ட் அப்கள் செய்யவேண்டியவை:

1. தனியார் வரையறுக்கபட்ட நிறுவனமாகவோ (2013, கம்பெனி ஆக்ட் விளக்கப்படி) அல்லது வரையறுக்கபட்ட பொறுப்பு கூட்டணியாகவோ (லிமிடெட் லயாபிளிட்டி பார்ட்னெர்ஷிப் ஆக்ட் 2008) இருத்தல் அவசியம். 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அன்றோ அல்லது அதற்குப் பிறகோ அதே சமயம் 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்குள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. தங்களது தயாரிப்பு அல்லது செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, வளர்ச்சி, மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அல்லது வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அல்லது பணம் அல்லது பிற மதிப்புமிக்க சொத்துக்கள் உருவாக்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்த வணிக மாதிரியாக இருக்கவேண்டும்.

3. தகுந்த வணிகம் என்கிற சான்றிதழை தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையினால் அமைக்கப்பட்ட இண்டெர்-மினிஸ்டீரியல் போர்ட் ஆஃப் செர்டிஃபிகேஷனிடமிருந்துப் பெறவேண்டும்.

இந்தியாவில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான தேவை இருப்பதை உணர்ந்து புதுமை என்பதை உள்நாட்டு நிலைப்பாட்டில் கருதவேண்டும்.

1. வணிகப்படுத்துவதற்கான சாத்தியமற்ற தயாரிப்புகள், சேவை அல்லது செயல்முறை

2. வேறுபாடில்லாத தயாரிப்பு, சேவை அல்லது செயல்முறை; அல்லது

3. வாடிக்கையாளர்களுக்கோ அல்லது பணியின் செயல்முறையிலோ மதிப்பைக் கூட்டாத தயாரிப்பு, சேவை அல்லது செயல்முறை உள்ள ஸ்டார்ட் அப்கள் வரிச் சலுகைகள் பெற தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.

ரத்து செய்தல்

தொடர்புடைய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படாமலோ அல்லது தவறான தகவல்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெறபட்டதைக் கண்டறிந்தாலோ அங்கீகார சான்றிதழ் மற்றும் வரிச் சலுகைகள் பெறுவதற்குத் தகுந்த வணிகம் என்கிற சான்றிதழ் ஆகியவற்றை உடனடியாக எந்தவித முன்னறிவிப்போ அல்லது காரணமோ இன்றி ரத்து செய்வதற்கான அதிகாரம் DIPP-யிடம் உள்ளது.

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக