பதிப்புகளில்

மனதளவில் வலுவடைந்து வாழ்க்கைப் பாதை அமைத்துக் கொண்ட ஆசிட் அட்டாக் பெண்கள்!

ஆசிட் வீச்சிற்குப் பிறகு உயிர்பிழைத்தவர்களான மது மற்றும் லஷ்மியின் கதை சமூகத்தின் குறைபாடுகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக் குறித்தும் சுட்டிக்காட்டுகிறது!

YS TEAM TAMIL
14th Sep 2017
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

மது காஷ்யப்பிற்கு 17 வயதானபோது திருமணம் வேண்டாமென்று மறுத்துவிட்டார். அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. 1997-ம் ஆண்டு அவர் தனது சொந்த பகுதியான ஆக்ராவில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்த அந்த நபர் அவரை தாக்கினார். பல நாட்களாகவே அந்த நபர் மதுவிற்கு தொல்லை அளித்து வந்தபோதும் இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வார் என்று மது எதிர்பார்க்கவில்லை.

ஷீரோஸ் ஹேங்அவுட்டின் கதவுகளை திறந்து மது என்னை உள்ளே அனுமதித்தார். இது ஆக்ராவின் ஃபதேஹாபாத் ரோட்டில் உள்ளது. இதை Chhanv ஃபவுண்டேஷன் நடத்தி வந்தனர். இதை நடத்துபவர் ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர். அவ்வாறு ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

image


2013-ம் ஆண்டு முதல் ஆசிட் தாக்குதல்கள் இபிகோ 326A மற்றும் 326B பிரிவுகளின் கீழ் அதிகாரப்பூர்வமாக தனிப்பட்ட குற்றமாக பதிவுசெய்யப்படத் துவங்கியது. 2015-ம் ஆண்டு 294 வழக்குகளும் 2014-ம் ஆண்டு 225 வழக்குகளும் பதிவானது.

பங்களாதேஷ், இந்தியா, கம்போடியா ஆகிய பகுதிகளில் உலகிலேயே அதிகமான ஆசிட் தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாக கார்னெல் லா ஸ்கூல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஆசிட் மலிவான விலையில் எளிதாக கிடைப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். இன்று ஆசிட் மிகவும் குறைவான விலையில் 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஹைட்ரோக்ளோரிக் ஆசிட் 5 லிட்டர் பாட்டில் 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. 2002 முதல் 2010 வரை நடத்தப்பட்ட அதே ஆய்வு இந்தியாவில் ஆசிட் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 88 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவீதம் பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கிறது.

வாழக்கையே பிளவுபட்டது

தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை நினைவுகூர்ந்து மது,

“என் முகத்துல ஆசிட்டை வீசிய தருணம் எரிச்சல் உணர்வு ஏற்பட்டது. அருகில் யாரும் இல்லை. அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தேன்,” என்றார் அவர். 

அறிமுகமில்லாத நபர் ஒருவர் மதுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவரது அம்மா மதுவிற்கு சிகிச்சையளித்தார். மதுவின் அம்மா எஃப்ஐஆர் பதிவு செய்ய நினைத்தார். ஆனால் ஆசிட் வீசி தாக்கிய அந்த நபர் அவரை பயமுறுத்தினார். அவர் அவ்வாறு எஃப்ஐஆர் பதிவு செய்தால் அவரது ஒரே மகனை கொன்று விடுவதாக பயமுறுத்தினார். மது அந்த நபரை மற்றொரு முறை பார்க்கவே இல்லை.

மதுவிற்கு எட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேற்கொண்டு சிகிச்சை பெற அவருக்கு பயமாக இருந்தது. 

“முதலில் அறுவை சிகிச்சையினால் ஏற்படும் உடல் சார்ந்த வலி. அடுத்தது அவர்கள் என்னுடைய உடலின் மற்றொரு பகுதியிலிருந்து தோலை பிரித்தெடுக்கும்போது ஏற்படும் வலி. அந்த வலி மிகவும் மோசமாக இருந்தது,” என்று நினைவுகூர்ந்தார்.

அறுவை சிகிச்சைக்கான கட்டணம் சுமார் 2 லட்ச ரூபாய். செலவுகளை சமாளிக்க அவரது அம்மா கடுமையாக உழைத்ததை பகிர்ந்தார். அதில் ஒரு பகுதி மறைந்த மதுவின் அப்பாவின் காப்பீட்டிலிருந்து கிடைத்தது.

image


தாக்குதல் நடந்து பல நாட்கள் வரை மது வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மக்களை எப்படி எதிர்கொள்வது என்று பயந்தார். விரைவில் அவரது திருமணம் முடிந்தது. பணி தேடி வந்தார். பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் நேர்காணலுக்குச் சென்றார். அனைவரும் திரும்ப அழைப்பதாக உறுதியளித்தனர். ஆனால் அழைப்பு எதுவும் வரவில்லை. சில வேலைகள் செய்து அங்கிருந்து மாறிய பிறகு ஷீரோஸில் 2016-ம் ஆண்டு இணைந்தார்.

”இதற்கு முன்னால் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு பதிலாக இறந்துவிடுவதே மேல் என்று எண்ணினேன். ஆனால் தற்போது என் எண்ணங்கள் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன்,” என்றார் மது. 

தற்போது ஷீரோஸிலிருந்து 8,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். தினமும் பணிக்கு பாதுகாப்பு குறித்த அச்சமில்லாமல் பயணம் செய்கிறார். “நான் நினைத்த அளவு மோசமாக இல்லை,” என்றார் உறுதியாக.

மதுவை தாக்கியவர் அந்த சம்பவம் நடந்து நான்காண்டுகள் கழித்து ஆக்ராவை விட்டுச் சென்று சுதந்திரமாக திரிந்துகொண்டிருக்கிறார். கோபம், மனவருத்தம், நம்பிக்கை என அனைத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் மது கூறுகையில், “ஆசிட் தாக்குதலில் ஈடுபட்டவருக்கு மோசமான விஷயங்கள் நடக்கவேண்டும். அவரது கைகளும் கால்களும் துண்டிக்கப்படவேண்டும். அப்போதுதான் அவர் வலியால் நெளிவார். அவருக்கு யாரும் தண்ணீர்கூட தரக்கூடாது. என்னை தாக்கியவர் என் முன்னால் வந்தால் அவரது நடவடிக்கை என்னை பலவீனப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நான் பலவீனமடைவதற்கு பதிலாக நான் அதிக வலுவடைந்துள்ளேன்.” என்றார்.

மதுவிற்கு வடிவமைப்பில் அதிக ஆர்வம் உள்ளது. விகாஸ் மலனியின் பாடி கேன்வாஸ் வொர்க்ஷாப்பில் இணைந்தால் அவரது விருப்பத்தில் தொடர்ந்து ஈடுபட உதவும் என்று நினைத்தார். பாடி கேன்வாஸிற்கு பல்வேறு டாட்டூ ஸ்டூடியோக்கள் உள்ளன. இவர்கள் Chhanv-உடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வொர்க்ஷாப்களை நடத்துகிறது.

அவரது முழங்கையில் ஓம் என்கிற டாட்டூவை காண்பித்தார். “சிறியதுதான் ஆனால் அதிக அர்த்தம் கொண்டது,” என்று கூறி சிரித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக குரலழுப்பப்பட்டது

இந்தியாவில் ஆசிட் தாக்குதலுக்குப் பிறகு உயிர்பிழைத்தவர்களுக்கு தற்போது ’குறைபாடுள்ள நபர்களின் உரிமை சட்டம், 2016’-ன் கீழ் உரிமை வழங்கப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு உயிர்பிழைத்த லஷ்மி அகர்வால் 2006-ம் ஆண்டு கொடுத்த பேராணை மனுவைத் தொடர்ந்து உச்சநீதி மன்றம் ஜூலை மாதம் 2013-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவினால் ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, உயிர்பிழைத்தவர்களுக்கு பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. 

லஷ்மி போன்ற ஆசிட் தாக்குதலுக்குப் பிறகு உயிர்பிழைத்தவர்கள் விடாமுயற்சியுடன் உரிமைக்க்காக போராடாமல் இருந்திருந்தால் அரசாங்கத்தின் சார்பில் வரையறுக்கப்பட்ட இழப்பீடு, கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு மற்றும் வேலையை எளிதாக அணுகுதல் போன்றவை சார்ந்த சட்டங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கும் கடுமையானதாகவே இருந்திருக்கும்.

image


லஷ்மி சர்வதேச அளவில் தைரியமான பெண்கள் என்கிற விருதினை 2014-ம் ஆண்டு பெற்றார். 2005-ம் ஆண்டு டெல்லியின் கான் மார்கெட்டில் லஷ்மி தாக்கப்பட்டார். அவரை தாக்கியவர்கள் குட்டு மற்றும் ராக்கி. குட்டு; லஷ்மியின் நண்பரின் சகோதரர். அவரை மணந்துகொள்ள லஷ்மி மறுத்துவிட்டதால் அவரை பழிவாங்குவதற்காகவே இந்த செயல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது லஷ்மியின் வயது 15.

2009-ம் ஆண்டு லஷ்மி தனது முகத்தை மறைக்காமல் வெளியில் சென்று சவால்களை எதிர்கொண்டார். 

“இதுதான் மிகப்பெரிய சவால். மக்கள் எங்களை எதிர்கொண்ட விதம் மோசமாகவும் அந்நியமாகவும் இருந்தது.” என்றார். 

லஷ்மியின் பெற்றோர் முழுவதும் ஆதரவளித்த நிலையில் அவரது நண்பர்களும் உறவினர்களும் தொடர்பை துண்டித்துக்கொண்டனர். ஆண்களைக் காட்டிலும் பெண்களே அவர் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட உணர்வை ஏற்படுத்தியதை கவனித்தார். ”அந்த பெண்ணைப் பாருங்களேன்” என்று அவரைக் கடந்து செல்பவர்கள் கருத்து கூறுவதையும் சுட்டிக்காட்டினார்.

லஷ்மிக்கு ஏழாண்டுகளில் ஏழு அறுவை சிகிச்சைகள் நடந்தது. இதற்கான செலவு 20 லட்ச ரூபாய். அவரது அப்பாவின் சேமிப்பும் அவரது முதலாளியின் உதவியும் செலவை எதிர்கொள்ள கைகொடுத்தது.

உரிமைக்கான போராட்டம்

லஷ்மி இந்த வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல தீர்மானித்தார். நான்காண்டுகள் விசாரணை நடந்தது. குட்டுவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ராக்கிக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது.

அலோக் தீக்ஷித் மற்றும் ஆசிஷ் சுக்லா ஆகியோர் ’ஸ்டாப் ஆசிட் அட்டாக்ஸ்’ பிரச்சாரத்தை துவங்கினர். இது 2014-ம் ஆண்டு Chaanv ஃபவுண்டேஷனை அடைந்தது. அதற்கு ஒரு மாதத்திற்கு பின்னர் 2013-ம் ஆண்டு லஷ்மி ஆசிட் அட்டாக் இயக்கத்தில் இணைந்தார். அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து நாட்டில் நடைபெறும் ஆசிட் வன்முறை குறித்த விவாதத்தையும் துவங்கினர். இன்று லஷ்மி ஃபவுண்டேஷனின் நிறுவனர். அலோக் தீக்ஷித் பிரச்சாரத் தலைவர். ஆசிட் தாக்குதலுக்கு பிறகு உயிர்பிழைத்தவர்களில் ஒன்றிரண்டு பேர் Chaanv-ன் டெல்லியிலுள்ள இரண்டு படுக்கையறை மையத்திற்கு வருவார்கள். அவர்களது முயற்சிக்கான முக்கியக் காரணம் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோரை சென்றடையவேண்டும் என்பது. இதனால் முறையான சிகிச்சையும் பராமரிப்பும் வழங்கப்படும் என்பதே நோக்கமாகும்.

image


ஆலோக் தீக்‌ஷித் மற்றும் ஆசிஷ் ஆகியோர் Chhanv ஃபவுண்டேஷனை நிறுவியபோதுதான் ஆசிட் தாக்குதல் குறித்து அதிகம் பேசப்பட்டது. இன்று இந்த ஃபவுண்டேஷன் பாதிக்கப்பட்டவர்கள் 100 பேருக்கு சிகிச்சை, சட்ட உதவி, மறுவாழ்வு போன்ற உதவிகளை வழங்குகிறது. நோயாளிகள் டெல்லி மையத்தில் தங்கவைக்கப்படுகின்றனர். அங்கு ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப்பட்டு மறுவாழ்விற்காக தயார்படுத்தப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்காவது டாட்டூவில் விருப்பம் ஏற்படும் என்று நம்புகிறார் லஷ்மி. விகாஸ் மலானியை சந்தித்தபோது அவருக்கு டாட்டூ வரைந்துவிட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட பயம் குறித்து அவர் விவரிக்கையில், 

“துணியில் ஒரு துண்டை நீங்கள் தவறாக தைத்துவிட்டால் அதை மாற்றியமைத்துவிடலாம். ஆனால் ஒருவரது தோலை நீங்கள் திருப்பியளிக்கமுடியாது என்று சொல்லுவார்கள்,” என்றார்.

உடலளவிலும் உணர்வு ரீதியாகவும் வடுவை ஏற்படுத்திய உலகில் இந்த பெண்கள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் எந்த சூழலையும் தவிர்க்காமல் வெளிச்சத்துக்கு வருகின்றனர். உலகம் அவர்களது வலியைக் காணவேண்டும். அதிலிருந்து கற்கவேண்டும். தவறுகளுக்குரிய பரிகாரம் செய்யவேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர் : மெஹர் கில்

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக