பதிப்புகளில்

Wisdom Jobs: பணியிலமர்த்துவோர்க்கு தகுதியான ஊழியரை தேர்ந்தெடுக்க உதவும் வேலைவாய்ப்பு தளம்!

11th Mar 2017
Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share

இந்த கட்டுரை Wisdom Jobs ஸ்பான்சர் செய்யப்பட்டது.

பணியிலமர்த்துவோரும் வேலைதேடுவோரும் சரியாக இணைய உதவும் 'விஸ்டம்ஜாப்ஸ்' Wisdom Jobs. 

பணியிலமர்த்துவதிலும் வேலையில் சேருவதிலும் இருக்கும் சாவல்களுக்காக தீர்வுகாண உருவான ஸ்டார்ட்-அப் Wisdom Jobs. இது குறித்து நிறுவனத்தின் நிறுவனர் அஜய்கொல்லா விவரிக்கிறார்.

image


தேவையையும் திறமையையும் மிகச்சரியாக பொருத்தி வேலை தேடுவோரும் பணியிலமர்த்துவோரும் முறையாக இணைய உதவுகிறது Wisdom Jobs. பணியிலமர்த்துவோரின் கவனத்தை ஈர்ப்பதைத் தாண்டி உங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருப்பதும், போட்டி நிறைந்த உலகில் சிறக்க புதுமையான சிந்தனைகள் மூலம் செயல்படுத்தும் திறனும் தேவை என்பதை வேலை தேடும் ஒருவராக நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள்.

ஒரு ஸ்டார்ட்-அப்பில் பணியிலமர்த்தும் முறையில் முக்கிய முடிவெடுக்கும் நபராக நீங்கள் இருந்தால் உங்களிடம் கிடைக்கும் விண்ணப்பங்களிலிருந்து முறையான பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய சவால்.

பல காலங்களாக இருந்துவரும் பணியிலமர்த்தும் துறையிலிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உருவானதுதான் Wisdom Jobs. ஒரு குழுவாக இணைந்த மக்கள் அவர்களது நெட்வொர்க்கில் இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து பகிர்ந்துகொண்டு அதன் மூலம் உருவானது தான் இந்த நிறுவனம்.

வேலைதேடுதல், திறனாய்வு, திறன்மேம்பாடு, ரெஸ்யூம் எழுதும் சேவை உள்ளிட்ட பணியிலமர்த்துவோர் மற்றும் வேலைதேடுவோர் இருவரது தேவைக்குமான தீர்வுக்காக செயல்படுகிறது WisdomJobs இந்தியாவின் மிக்சிறந்த வேலை தேடல் தளங்களில் ஒன்றாக ஏன் விளங்குகிறது என்பதை நீங்கள் www.wisdomjobs.com என்று டைப் செய்தால் வரும் ஸ்க்ரீன் உங்களுக்கு எடுத்துரைக்கும். ஆறு வருடங்களில் 30 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் சென்றடைந்துள்ளனர். இதில் 14 மில்லியன் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது.

சரியான நபரை கண்டறிதல்

இன்று WisdomJobs பணியிலமர்த்துவோர் மற்றும் வேலை தேடுவோரின் தேவைகளுக்கு தீர்வுகாண அதன் சேவைகளை பன்மடங்கு பெருக்கியுள்ளது. உதாரணமாக இவர்களுக்கு சொந்தமான Pragnya Meter என்கிற டூல் Platform as a Service (PaaS) மாடலில் வழங்கப்படுகிறது. இதை நிறுவனத்தின் பணியிலமர்த்தும் என்ஜினில் எளிதாக இணைத்துவிடலாம்.

கோர் ஸ்கில், மொழி மற்றும் தகவல் பரிமாற்றதிறன், உளச்சார்பு, ப்ரோக்ராமிங் திறன் உள்ளிட்ட 6000-க்கும் மேற்பட்ட திறன்களை ஆய்வுசெய்ய இந்த டூல் உதவும். பணியிலமர்த்துபவர்கள் தங்களது வினாத்தாளை தயாரித்து அவர்களே பதிவேற்றம் செய்யலாம். அல்லது 5 கோடிக்கும் மேற்பட்ட கேள்விகள் கொண்ட டேட்டாபேஸை பயன்படுத்திக் கொள்ளலாம். வெப்கேம் ரெக்கார்டிங், ஸ்க்ரீன் மானிட்டரிங், ப்ரௌசர் டாலரன்ஸ் கண்ட்ரோல் மற்றும் IP ரெஸ்ட்ரிக்ஷன் போன்ற அம்சங்கள் டெஸ்டிங்கின் பாதுகாப்பையும் முழுமையையும் நிர்வகிக்கும். டேஷ்போர்ட் முடிவடைந்த, நடந்துகொண்டிருக்கின்ற மற்றும் நடக்கவிருக்கும் மதிப்பீடுகள் குறித்த விரிவான அறிக்கையை பணியிலமர்த்துவோருக்கு வழங்கும்.

”பணியிலமர்த்துவோர் எங்களது தளத்தின் வாயிலாக ரெஸ்யூம்களை பார்வையிடும்போது, விண்ணப்பதாரரின் தேர்ச்சி நிலையை உணர்த்தும் விதத்தில் அவரது திறன் மதிப்பெண்ணையும் காட்டுவோம். பணியிலமர்த்துவோர் வேறொரு இடத்திலிருந்து ரெஸ்யூம்களை பெற்றிருக்கும் பட்சத்தில் நாங்கள் Pragnya Meter தள சேவையை அளிக்கிறோம். இதில் ஆன்லைன் மதிப்பீடுகளை உருவாக்கி நேர்காணலுக்கு முன்பாகவே முதல்கட்ட ஸ்க்ரீனிங்கை மேற்கொள்ளலாம்.”

இதன் மூலம் இரண்டு நிலையிலும் ஒரு குறிப்பிட்ட பணிக்கான சரியான நபரை தேர்ந்தெடுக்க உதவுகிறோம், என்று விவரித்தார் WisdomJobs நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ அஜய்கொல்லா.

போர்டலில் லாக்இன் செய்த பிறகு அவர்களது டேஷ்பொர்ட் வாயிலாக Pragnya Meter மதிப்பீடுகளை வேலைதேடுபவர்கள் பார்க்கலாம். வேலை தேடுபவர்களில் அதிக திறமை கொண்ட தகுதிமிக்க நபர்களை Pragnya Meter எவ்வாறு எளிதாக கவனிக்கபடவைக்கும் என்பதையும் அஜய் விளக்கினார். 

”கோர் மற்றும் அதன் தொடர்புடைய திறனை அவர்களாகவே ஆய்வு செய்வதால் வேலை தேடுபவர்கள் தங்களது திறமையை புரிந்துகொள்ள உதவுகிறது. ஆய்வில் பங்கேற்ற மற்ற நபர்களின் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு ஒரு குறிப்பிட்ட திறனுக்கான மதிப்புகள் வெளியிடப்படும். மேலும் வேலை தேடுபவர்கள் இந்த மதிப்பீட்டை எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இது அவர்களது மதிப்பெண்ணை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும்.”

தேர்ந்தெடுக்கப்படும் முறையில் இருக்கும் பல நிலைகளில் WisdomJobs.com வேலைதேடுவோருக்கு உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணிக்கு மட்டுமே தகவல்கள் பயன்படுத்தப்படவேண்டுமா என்று விசாரித்தல், நேர்காணல் திட்டமிடப்படும்போது அவர்களது தெரியப்படுத்துதல், நேர்காணலுக்குத் தேவையான தகுதியை மேம்படுத்த எடுத்துக்கொள்ளவேண்டிய மதிப்பீடுகள் குறித்து நினைவுப்படுத்துதல், நேர்காணலுக்கு எடுத்துச் செல்லவேண்டிய முக்கிய டாக்குமெண்ட்ஸ் குறித்த சரிபார்க்கும் அட்டவணையை வழங்குதல் போன்ற அனைத்தையும் தேர்வாளர்கள் செய்து முடிக்க VConnect உதவும். 

குரல்சார்ந்த இந்த ப்ராட்காஸ்டிங் டூல் நேரத்தையும் முயற்சியையும் குறைப்பதோடு மட்டுமல்லாமல் பதிலளிப்பவர்களின் அளவையும் அதிகரிக்கிறது. Pragnya Meter மற்றும் VConnect நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களுக்கு ஊழியரின் மீளாய்வு மற்றும் ஊழியரின் முழுத்திறனையும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு முறையே உதவுகிறது என்கிறார் அஜய்.

சரியான வேலையைக் கண்டறிவதற்கு மேல் உள்ள பயன்கள்

“வேலைக்கு விண்ணப்பிப்பவரது கண்ணோட்டத்தில் பார்க்கும் போது வேலை தேடல் முறையில் இருக்கும் தேவையின் இடைவெளியைப் பார்க்கத் தொடங்கினோம். தங்களது திறமைகளை தேர்வு செய்வோருக்கு காட்ட உதவும் விதத்தில் இலவச திறன் மதிப்பீடுகளை அளிக்க எங்களுக்குத் தூண்டுதல் ஏற்பட்டது.” என்கிறார் அஜய்.

இ-யூனிவர்சிட்டி ஆஃபரிங் வாயிலாக வேலை தேடுவோர் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் நேர்காணலுக்குத் தயாராகவும் உதவுகிறது. WisdomJobs-ல் பதிவு செய்து வேலை தேடும் அனைவரும் இந்த இ-யூனிவர்சிட்டியை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

தற்போது இவர்களின் ஆன்லைன் டுடோரியல்ஸ் (online tutorials) மூலமாக வேலை தேடுவோர் தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவும், நேர்காணலுக்கு தயாராகவும் முடியும். இதில் உள்ளடக்கம், நேர்காணலில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பதில்கள், 4000 க்கும் மேற்பட்ட பயிற்சி தேர்வுகள் போன்றவை இடம் பெற்றிருக்கும். டொமைன் நிபுணர்கள் மற்றும் சிறந்த எழுத்தாளர்களால் இந்த ஆன்லைன் பயிற்சிகள் அடங்கிய டேட்டாபேஸ் உருவாக்கப்பட்டு தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை, வணிக திறன் மற்றும் தொடர்பு போன்ற கற்றல் தொடர்பான தேவைகளுக்கு WisdomJobs அதிகரித்துவரும் பயிற்சிகள் வாயிலாக தீர்வளிக்கிறது. அஜய் கூறுகையில், 

“இ-யூனிவர்சிட்டி பணிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. புதிய கோர்ஸ்களை சேர்த்துக்கொண்டும் தற்போது இருக்கும் கோர்ஸ்களை தொடர்ந்து அப்டேட் செய்துகொண்டும் இருக்கிறோம். சந்தையின் போக்கை மனதில் கொண்டும் பயன்படுத்துவோரின் தேவைகளை மனதில் கொண்டும் கோர்ஸ்கள் இணைக்கப்படுகிறது. ஒவ்வொரு டொமைனிலும் கணிசமான எண்ணிக்கையிலான கோர்ஸ்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம்.” 

இ-யூனிவர்சிட்டி பக்கங்களின் ட்ராஃபிக் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் நபர்களைக் கொண்டுள்ளது. இதைத் தவிர, WisdomJobs; துறைகள் அடிப்படையில் பணிகளை பட்டியலிடுகிறது. அதாவது விவசாயம் முதல் கல்வித்துறை மற்றும் அரசு வேலைகள் Govt. Jobs  என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் அம்சமாக சர்காரி ரிசல்ட் Sarkari Result என்ற தனி பிரிவும் தற்போது இதில் சேர்க்கப்பட்டுள்ளது. 

பலருக்கு இடம் முக்கிய அம்சமாக இருப்பதால் WisdomJobs இடம் சார்ந்தும் வேலைகளை வகைப்படுத்தியுள்ளது. வேலை தேடுவோர் இந்தியாவின் மிகப்பெரிய வேலை வாய்ப்பு மையங்களிலுள்ள வாய்ப்புகளையும் அறியலாம். சந்தையிலிருக்கும் சுவாரஸ்யமான வாய்ப்புகளை பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இலவச ஜாப் அலெர்ட் (free Job Alert) சேவை மூலமாக அளிக்கிறது.

ரெக்ரூட்மெண்ட் என்னும் வார்த்தையிலிருக்கும் ‘T’

தொழில்நுட்பம் பணியிலமர்த்துவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் கடந்த சில வருடங்களாக முன்னேறி வருகிறது என்றும் நம்புகிறார் அஜய். நிறுவனங்கள் க்ளௌட் டெக்னாலஜிஸ் மற்றும் விண்ணப்பதாரர் கண்காணிக்கும் முறை ஆகியவற்றை பயன்படுத்தி பணியிலமர்த்தும் முறையை எளிமைப்படுத்துவதால் டேட்டா அனாலிடிக்ஸ் பங்கு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

மேலும் வேலை தேடுவோரில் பலர் தேடல் முறையை மொபைல் வாயிலாக பின்பற்றுவதாலும் நிறுவனங்களும் சிறந்த பயனாளி அனுபவத்திற்காக மொபைல் பயன்பாட்டிற்கு மாறிக்கொண்டிருப்பதாலும் ரெஸ்பான்சிவ் கேரியர் வலைதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் போன்ற மொபைல் சார்ந்த இண்டர்ஃபேஸ்கள் முக்கியமானதாக விளங்குகிறது. 

”பணியிலமர்த்தும் முறையில் பிக் டேட்டா முதல் ஆட்டோமேஷன் வரை பணியிலமர்த்துவோர் கையாளும் விதத்தை இந்த தொழில்நுட்பங்கள் எளிமைப்படுத்துகிறது. உதாரணத்திற்கு WisdomJobs.com -இல் Hadoop/Big Data பயன்படுத்துவதால் விரைவாகவும் துல்லியமாகவும் தேடல்களை வகைப்படுத்தமுடியும். இதனால் பணியிலமர்த்துவோர் சரியான திறமையையும் வேலை தேடுவோர் சரியான வேலையையும் கண்டறிய முடியும்.”

_________________________________________________________________________________________________________ Looking for an interesting opportunity in your city? Looking to explore opportunities in a new city? Check out the job opportunities on Wisdom Jobs.     

|Jobs in Delhi | Jobs in Mumbai |Jobs in Pune| Jobs in Bengaluru |Jobs in Chennai |Jobs in Hyderabad |        ___________________________________________________________________________________________________________                                                                             

Pragnya Meter மற்றும் VConnect ஆகிய தொழில்நுட்பங்களை இணைப்பதால் அன்றாட பணியிலமர்த்தும் நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுகிறது. ”பணியிலர்த்தும் முறையில் மாறி வரும் தேவைகளுக்கேற்றவாறு WisdomJobs தொடர்ந்து தன்னை மெருகேற்றி வருகிறது. எங்களது சமீபத்திய தொழில்நுட்பங்களை இணைத்தே இதைச் செய்கிறோம்.

அதாவது தேடல் சார்ந்த நடவடிக்கைகளில் பிக்டேட்டா, டேட்டா அனாலிடிக்ஸ் போன்றவற்றையும் புதிய அம்சங்களைக் கொண்ட சமீபத்திய மொபைல் செயலியையும் அளிப்பதால் வேலை தேடுவோர் குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிப்பது, மதிப்பீடுகளை மேற்கொள்வது போன்றவற்றை பயணிக்கும் நேரத்தில் கூட எளிதாக மேற்கொள்ளலாம். 

எங்களது தீர்வுகள் அவர்களது செயலியில் எளிதாகவும் சரியாக பொருந்துமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் மற்றும் அதில் பணியிலமர்த்துவதில் உள்ள சவால்கள் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் இகோசிஸ்டம்களில் ஒன்றாக இந்தியா விளங்குவதால் ஸ்டார்ட் அப்பிற்கென பிரத்யேகமாக சேவையளிக்கப்படுகிறதா என்று கேட்கையில், 

“ஜாப் போர்டலுக்கு தேவையான நிதித்திறன், மனிதவளம் ஆகியவை இல்லாத ஸ்டார்ட்-அப் மற்றும் சிறு நிறுவனங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்ப்பட்டது தான் QuickSource. அவர்களது குறிப்பிட்ட தேவையின் அடிப்படையில் ஒவ்வொரு ரெஸ்யூம்களுக்கு மட்டுமே தனிப்பட்ட கட்டணம் செலுத்தும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது.” என்றார் அஜய்.

சரியான திறமையை கண்டறிந்து பணியிலமர்த்துதல் என்பது எந்த ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக ஸ்டார்ட் அப்பால் ஊழியர்களை ஊக்குவிக்கும் முறைக்காகவோ அல்லது திறமையை கண்டறியும் முறைக்காக பெரிய அளவில் செலவுகளை எதிர்கொள்ள இயலாது. இந்த சவாலுக்கு எப்படி தீர்வு காண்பது என்று கேட்கையில், 

“ஒரு ஸ்டார்ட் அப்பாக இருக்கும்பொழுது ஊழியர்களின் பங்கை வரையறுப்பதில் மிகவும் கடினமாக இருக்கக்கூடாது. திறமையான ஊழியரெனில் அதிகமான பொறுப்புகளை கொடுத்து அவரது மதிப்பை அங்கீகரிக்க முன்வரவேண்டும். ஒரு குறிப்பிட்ட பொறுப்பை அளித்தால் திறம்பட முடிப்பார் என்று உங்களுக்கு தோன்றினால் வெவ்வேறு துறைகளிலுள்ள பொறுப்புகளை மாற்றியளிக்கலாம். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு மிகப்பெரிய விஷயம் நிறுவனத்தின் கலாச்சாரம். ஒரு நேர்மறையான வரவேற்கத்தக்க கலாச்சாரம் நிறுவனத்தின் ப்ராண்டின் தரத்தை வெளிப்படுத்தும் பிரதிநிதிகளாக ஊழியர்களை மாற்றுவதால் உங்கள் நிறுவனத்தின் ப்ராண்ட் தரம் உயர வழிவகுக்கும்,” என்றார்.

Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share
Report an issue
Authors

Related Tags