பதிப்புகளில்

மும்பையிலிருந்து ப்ளூட்டோ வரை: காமாக்‌ஷியின் விண் பயணம்!

YS TEAM TAMIL
19th Nov 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

தென்னிந்திய கலாச்சாரப் பின்னணியில் பிறந்து மும்பையின், சியோன் பகுதியில், வளர்ந்த காமாக்‌ஷி சிவராமகிருஷ்ணனுக்கு, உணவாய் புகட்டப்பட்டது கணிதமும் அறிவியலும் தான். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய தொழில்நுட்பத்துறையில் இன்று சிறப்பான இடத்தை அடைந்திருக்கும் காமாக்‌ஷி இந்த இடத்தை அடைவதற்கு கல்வியால் தன்னைச் செதுக்கிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த வெற்றியின் வாசலை வந்தடைந்தது அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை.

தன் வழியில் ஸ்டான்ஃபோர்டில் உயர்கல்வி, நாசாவின் உயர் ரக விண்கலத்திற்கு வடிவமைப்பு, கூகுளிற்கான சாதனை என அவர் பயணித்த துறைகள் வேறுபட்டு இருந்தாலும், அனைத்து இடங்களிலும், அனுபவம் ஒன்றுதான். பெண்ணாய் பிறந்த குற்றத்திற்காக, போராடியது மட்டும்.

“எப்படி உங்களால் இதை செய்ய முடிந்தது ?” என நாம் வியந்தால், “அது ரொம்ப சுலபம். அதை செய்ய வேண்டாம் என யாரும் சொல்லவில்லையே” என்று ஆச்சரியப்படுத்துகிறார் இந்த மேதாவி.

image


படிப்பும், பணி வாழ்க்கையும்

மும்பையில் இளநிலை பட்டம் பெற்ற பிறகு, காமாக்‌ஷி , ஸ்டான்ஃபோர்டில் ‘தகவல் தத்துவங்கள்’ (Information theory) படிக்கச் சென்றார். உண்மையிலேயே அது முழுக்க முழுக்க தியரிகள் நிறைந்த பாடமாகத் தான் இருந்தது என்கிறார் காமாக்‌ஷி.

“வழக்கமாக, இந்தத் துறையில் இருப்பவர்கள் கல்வி நிறுவனங்களுக்கோ அளவு சார்ந்த வணிகம் மூலமாக வால் ஸ்ட்ரீட்டின் வர்த்தக சந்தைகளை கட்டுப்படுத்தவோ தான் செல்வார்கள். ஆனால், எப்பொழுதுமே, நான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நபராக இருக்க வேண்டும் என விரும்பினேன். வழக்கதிற்கு மாறான ஒரு பாதையைத் தான் நான் தேர்வு செய்தேன்”.

அவர் தேர்ந்தெடுத்த துறையில், பெண் வழிகாட்டிகளுக்கு ஏக பற்றாக்குறை இருந்தது. முதலீடு செய்யும் வங்கியாளர்கள், நம்மால் கற்பனை செய்ய முடியாத வாய்ப்புகள், சலுகைகளோடு காமாக்‌ஷியின் வீட்டின் முன் நின்றனர். ஆனால், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில், பத்தில் ஒருவராக, தான் வேலை செய்யப் போவதில்லை என்பதில் காமாக்‌ஷி உறுதியாக இருந்தார்.

அப்போது அவருக்கு இருந்த உத்வேகமும், நம்பிக்கையும் அவர் ‘அட்மாப்’விற்கு (Admob) கொண்டு சென்றது. அங்கு, அவர் முன்னணி அறிவியலாளராக ‘இயந்திரக் கற்றல் அடுக்கு’ப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அதைப் பற்றிப் பேசுகையில்,

“நான் கல்லூரிப் படிப்பை முடித்த போது, அதிக அளவிலான தரவுகளை, கணக்கிடும் கட்டமைப்பு உடைந்து, ஒரு புதிய தளம், என் துறையை சேர்ந்தவர்களுக்கென உருவானது. அது, எளிதாக, நாங்கள் கற்றதை இணையத்தின் செயலிகளில் புகுத்தும் முறை. நான் முதலில், அட்மாப்பில் சேர்ந்த போது, எனக்கு இணைய விளம்பரங்களும், மொபைல் விளம்பரங்களும் மிகவும் புதிதாக இருந்தது. இப்படி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பரிசோதனையின் , ஒரு முறை குறித்து எடுத்த விபரங்களையும்,புதிதாக ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து, அதன் மூலம் இரண்டாவது முறையின் குறிப்புகளை, முதல் விபரங்களைக் கொண்டு அறிய அந்த தொழில்நுட்பம் உதவுகிறது. அடிப்படை கோட்பாடுகளால் இது முறைபடுத்தப் படலாம், ஆனால், அதை முன்னேற்ற சிக்கலான கணிதமும், வழிமுறைகளும் தேவைப்பட்டது. மற்றும், அதிக அளவிலான முன்கணிப்பு செய்யும் கருவிகளும்.

எங்களுடைய பயனர்களைத் தெரிந்துக் கொண்டு, அவர்கள் ஒரு விளம்பரத்துடன் ஈடுபட விருப்பத்தை உருவாக்குவது தான் என் இலக்காக இருந்தது. புள்ளி விவரங்கள் மற்றும் பயனர் தத்துவங்களைக் கொண்டு, வாடிக்கையாளர் ஒரு க்ளிக் அல்லது ஒரு உரையாடல் மூலமாக எப்படி ஈடுபடுவார்கள் என்று கணிக்க, வழிமுறைகளை கட்டமைக்க வழிகள் இருந்தது.”

காமாக்‌ஷியை வேலைக்கு வைத்திருப்பதில் அட்மாப்பிற்கு இருந்த மகிழ்ச்சி என்னவென்றால், கூகுளும் ஆப்பிளும் உபயோகித்த முறை இல்லாமல், புது அணுகுமுறையை கொண்டு வந்தார். அதைவிட, பெண் என்பதால் மட்டுமே, வளர்ச்சிக்கு எதிராக உண்டாகக்கூடிய சிரமங்கள் அவரைக் உடைத்தது இல்லை.

ஆணாதிக்க சூழல்

“நான் முதலில் சேர்ந்த போது, நான் மட்டும் தான் குழுவில் பெண். ஸ்டார்ட் அப்ஸ் வழக்கமாக இலட்சியவாதிகளையும், மாற்றம் ஏற்படுத்த விரும்புவர்களையும், படைப்பாற்றலோடும், தொழில்முனைவு எண்ணத்தோடும் இருப்பவர்களைத் தான் ஈர்க்கும். இது பொதுவாகவே ஆண்களுக்கு பொருந்துவதாக இருப்பது.”
image


அவருடைய இடம் முற்றிலும் ஆண்களால் நிறைந்திருந்தது. அதிகளவில் ஆண்கள் இருந்தது மட்டுமில்லாமல், அந்த இடத்தின் குணாதிசயங்களும், சமூக மயமாக்குதலும் முற்றிலும் ஆண்களுக்கு வசதியானதாக மட்டுமே இருந்தது.

“அது கிட்டத்தட்ட ஒரு ஆண்கள் தங்கும் விடுதியைப் போல இருந்தது. பல பெண்கள் இதனால் உற்சாகத்தை இழக்கலாம், ஆனால், நான் அதைக் கண்டுகொள்ளவில்லை. நான் எப்போதும் என்னையும், என் இருப்பையும், என் தாக்கத்தையும் பிறர் உணர வழிக் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தேன்”.

மிஷன் ப்ளூட்டோ

காமாக்‌ஷி தன்னுடைய பி.ஹெச்.டி-ஐ செய்துக் கொண்டிருந்த போது தான் அவருடைய தியரி பெரிய அளவிலான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் உருவாக்கிக் கொண்டிருந்த தொழில்நுட்பம், நாசா வடிவமைத்து வந்த, தொலைதூர ப்ளூட்டோவை நோக்கிச் செல்லும் விண்கலத்துக்கு புதிய பரிமாணத்தை தந்தது.

“அந்த சமயம் அது எவ்வளவு பெரிய புராஜெக்ட் என்பதை நான் உணரவில்லை. நாசா கட்டமைத்ததிலேயே மிக விலையுயர்ந்த விண்கலமான அது, ஏழு பரிசோதனைகளை கொண்டிருந்தது. அதில் ஒன்று, ரெக்ஸ் - ரேடியோ அறிவியல் பரிசோதனை. விண்கலத்திலிருந்து ப்ளூட்டோவிற்கு ஒரு ரேடியோ சிக்னல் அனுப்பப்படும். அந்த அலை உட்படும் சிதறல், ப்ளூட்டோவின் நிலப்பரப்புப் பற்றியும், சுற்றுப்புறச்சூழல் பற்றியும் தெரிவித்துவிடும். விண்கலத்திலிருக்கும் ‘சிப்’ , சிக்னலைப் பெற்றுக் கொண்டும், மூன்று பில்லியன் மைல் தொலைவிலுள்ள விண்கலத்திற்கு அனுப்பிய பிறகும், மிஷன் தொடர்வதற்கான குறிப்பிட்ட அளவிலான ஆற்றால் மீதம் இருக்கும். ஆனால், ப்ளூட்டோ வரை செல்லும் ‘ஃப்ளை பை’ (fly-by) விண்கலம் என்பதனால், குறைந்த அளவிலான சக்தியை உட்கொள்ளும் ஒரு ‘சிப்’-ஐ வடிவமைக்க வேண்டும்.”

புதிதாக ஒரு வழிமுறையை (அல்காரிதம்) உருவாக்கி, நமக்கு தெரியாத ஒரு கோளைப் பற்றின செய்திகளைக் கொண்டு வருவதற்கேற்ப அந்த சிப் வடிவமைக்கப்பட்டது.

தொழில்முனைவு

குறைந்த அளவிலான நேரம், வளம் மற்றும் பணத்தை வைத்துக் கொண்டு சிக்கல்களை தீர்ப்பதற்கும், ஒன்றுமே இல்லாததிலிருந்து புதிதாக ஒன்றைத் தொடங்கவும் கற்றுக் கொடுத்தது, இந்த தீவிரப் பயிற்சி. அவர் ஒரு தொழில் முனைவர் இல்லையென்றாலுமே, எதேட்சையாக, தான் வடிவமைத்த ஒரு பிரமாதமான தொழில்நுட்பத்தைக் கொண்டு, ‘ட்ராபிரிட்ஜை’ (Drawbridge)உருவாக்கினார். வெகு விரைவிலேயே, அமெரிக்காவில் வேகமாக வளரும் 500 தனியார் நிறுவனங்கள் பட்டியலில், ‘வேகமாக வளரும் பெண் தலைமை தாங்கும் நிறுவனமாக’ அது உயர்ந்தது.

தற்போது, கலிஃபோர்னியாவின், சான் மேட்டியோ பகுதியில் இருக்கும் அவர், பயனர்கள் எப்படி இணைய விளம்பரங்களுக்கு எப்படி ஒருங்கிணைகிறார்கள், மற்றும், ஸ்மார்ட் ஃபோன், டேப்லட்டுகள், மடிக்கணினிகள் போன்ற தளங்கள் மூலமாக எப்படி எதிர் செயலாற்றுகிறார்கள் என்பதையும் தின்னமாய் கவனிக்கும் வழிமுறையை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பயனர் ஒரு மொபைலில் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, தனக்கு வசதியாக இருக்கும் வேறு ஒரு கருவி மூலமாக அந்த பொருளை வாங்கினார் என்றாலும் அது ட்ராபிரிட்ஜிற்கு தெரிந்து விடும்.

ட்ராப்ரிட்ஜ், வாடிக்கையாளர்களைப் பற்றிய, தகவல் தொகுப்பு ஒன்றை உருவாக்கும் பணியை செய்கிறது. இதில், வாடிக்கையாளர்களின் அடையாளம் விற்பனையாளர்களுக்கு தெரியாமல் இருக்கும், ஆனால் அவர்களின் விருப்பங்களும் தேர்வுகளும் விற்பனையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் . “என் இணையம் உங்கள் இணையத்தில் இருந்து மாறுபடும் இடம் தான் இணையத்தின் எதிர்காலம். என் அனுபவங்களும்,என் திருப்தியும் என் தேவைகளுக்கேற்ப கட்டமைக்கப் படும்”.

ஐந்து வயதான இந்நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளில் இருபத்தி மூன்றாயிரம் சதவீதம் உயர்ந்து , 2014ல் முப்பத்தி மூன்று மில்லியன்கள் ஈட்டியிருக்கிறது.

தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறையில் பெண் உதாரணங்களும், பெண் வெற்றியாளர்களும் இல்லையென்று நீங்கள் நினைத்தால், அதோடு தொழில்முனைவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றிலும் சேர்த்து நிலைத்திருக்கும் பெண்களின் பட்டியல் மிகச் சிறியதாக இருக்கும்.

“என்னுடன் பள்ளியில் படித்த பெண்கள் வெகு சிலரிடம் மட்டும் தான், இன்று, என் வேலையைப் பற்றிப் பேச முடியும், என்று என் கணவரிடம் விளையாட்டாக சொல்லிக் கொண்டிருந்தேன். பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் சில முடிவுகளை எடுத்திருந்திருக்கலாம், ஆனால், காமாக்‌ஷியின் ஒரு தினத்தைப் போல வேரு யாருக்கும் வாழ்க்கையின் ஒரு நாள் இருந்ததாய் நினைவில்லை..

“ஆனால், நான் அதற்கு பழகிக் கொண்டேன். ஒரு அறைக்குள், ஒற்றை பெண்ணாய், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு கூட்டங்களில் பங்கெடுக்கும் போது, ஒரு ஜோடிக் கண்கள் என்னை எப்போழுதும் மதிப்பிட்டுக் கொண்டெ இருப்பது போல உணர்வேன். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால், தனித்து தெரிவீர்கள். சிறப்பாக செயல்படவில்லை என்றால் அதற்காக தடுத்து நிறுத்தப்படுவீர்கள். சந்தேகத்தின் பலனை நீங்கள் பெறவில்லை என்னும் பட்சத்தில், அறையில் இருப்பவர்களின் நம்பிக்கையை நீங்கள் சம்பாதித்தே ஆக வேண்டும்.”

அறிவுரை

“தொழில்நுட்பத்துறையில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு என் அறிவுரை, வசதி இல்லாதவைகளை கொண்டு வசதியாக இருங்கள். பல சமயங்களில் முதல் முறையாக ஒன்றை செய்ய வேண்டி இருக்கும், அதாவது, பல நேரங்களில் அது வசதியின்மையாகத் தான் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ள கற்க வேண்டும். யாருடைய வெற்றியும் தனியாக பெற்றவை இல்லை என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். சரியான குழுவையும், சரியான ஆதரவையும் பெற்றிருங்கள். வெற்றிகரமான தொழில் முனைவராக நீங்கள் இருக்க விரும்பும் போது, நீங்கள் செய்யும் அடிப்படை தவறு, துணிந்து செயல்படாமல் இருப்பதாகத் தான் இருக்கும். சிறு சிறு துணிகரங்களின் தொகுப்புகள் தான், ஒரு தொழில் நடத்துவது. மிகச் சிறப்பாக அமைந்த துணிவான செயலின் முடிவு தான் வெற்றி என நீங்கள் பெருமைப்படும் விஷயமாக அமையும்.”

காமாக்‌ஷியின் சொற்படி,உங்களின் வெற்றி, உங்களை நிச்சயம் ப்ளூட்டோவையும் அதைத் தாண்டியும் எடுத்துச் செல்லாமல் இருக்க ஒரு வழியும் இல்லை.

ஆக்கம் : Binjal Shah | தமிழில் : Sneha

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக