'தவறுதலாக நீக்கிவிட்டோம்' - #ResignModi ஹேஷ்டேக் விவகாரத்தில் பதில் அளித்த ஃபேஸ்புக் நிறுவனம்!

#ResignModi ஹேஷ்டேக் பதிவுகளை மீண்டும் அனுமதித்த ஃபேஸ்புக்!
12 CLAPS
0

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. அதிகமான பரவல் காரணமாக நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைக்கழிப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனர். மக்களின் வேதனைகள் பல்வேறு இடங்களில் வெளிப்பட்டன. இது பாதிப்படையாத மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியது. கூடவே, அரசின் மீது அதிருப்தியும்.

குறிப்பாக இரண்டாம் அலை இளம் வயதினரை அதிகமாக தாக்கிய நிலையில் தடுப்பூசிகள் இளம்வயதினருக்கு கொடுப்பத்தில் மத்திய அரசு காட்டிய பாகுபாடு, ஆக்சிஜன் கொடுப்பதில் பாகுபாடு, தடுப்பூசி கொடுப்பதில் பாகுபாடு, தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது என பல்வேறு விஷயங்கள் விமர்சனங்களை சந்தித்தன.

இதையடுத்து, மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்து பலர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #ResignModi என்ற ஹேஷ்டேகை குறிப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பலர் தங்கள் குறைகளை, அதிருப்தியை பதிவுகளாக இட்டனர். மற்ற சமூக வலைத்தளங்களில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஃபேஸ்புக்கில் மட்டும் நிறுவன விதிகளுக்கு எதிராக இந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டதாகக் கூறி, அதை நீக்கியது அந்நிறுவனம்.

அதேநேரம் இந்த ஹேஷ்டேக் ட்விட்டர் உட்பட மற்ற வலைதளங்களில் நீக்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஃபேஸ்புக்கின் நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளான நிலையில், இது தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,

#ResignModi ஹேஷ்டேக் பதிவுகள் தவறுதலாகவே முடக்கப்பட்டதாகவும், மத்திய அரசின் நெருக்கடி காரணமாக பதிவுகள் முடக்கவில்லை என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. விளக்கத்துடன் நிற்காமல், #ResignModi ஹேஷ்டேக் பதிவுகளை தற்போது மீண்டும் அனுமதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

Latest

Updates from around the world