வாழ்க்கையை மாற்றிய ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படம் - தொழிலில் இரண்டாவது முறை வெற்றி கண்ட ரவிசந்தர்!

By YS TEAM TAMIL
September 09, 2022, Updated on : Fri Sep 09 2022 07:31:32 GMT+0000
வாழ்க்கையை மாற்றிய ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படம் - தொழிலில் இரண்டாவது முறை வெற்றி கண்ட ரவிசந்தர்!
டாக்டர்.ரவிசந்தர் 1979 ல் பெங்களூரு வந்த போது, ரெஸ்டாரண்ட் வேலை ஒன்று தன் வாழ்க்கையை மாற்றி, தொழில்முனைவோராக தனக்கான அழைப்பை உணர வைக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

டாக்டர்.ரவிசந்தர் 1979ல் படிப்பதற்காக பெங்களூரு வந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஷோலிங்கர் எனும் சிறிய ஊரில் இருந்து பெரிய நகருக்கு வந்திருந்தார். படிப்பை முடித்தவுடன் ரவிசந்தர் சில ஆண்டுகளுக்கு வங்கி குமாஸ்தா உள்ளிட்ட பல வேலைகளை பார்த்தார். எனினும், அவருக்கு வாழ்க்கையில் திருப்தி ஏற்படாமல் வேறு ஒன்றை செய்ய விரும்பினார்.


இந்த பசி தான் 1983ல் கனிஷ்கா ரெஸ்டாரண்டில் மேலாளராக பணிக்கு சேர வைத்தது. கனிஷ்கா ரெஸ்டாரண்ட் அனுபவம் திருப்பு முனையாக அமைந்து, இத்துறையில் அவரது வெற்றிக்கான அடித்தளமாகவும் அமைந்தது.


இந்த ரெஸ்டாரண்டின் தினசரி செயல்பாடுகளை நெருக்கமாக கவனித்தவருக்கு உணவு மற்றும் தொழில்முனைவு மீது ஆர்வம் உண்டானது. உணவு தொழில்முனைவோராவதே தனக்கான இகிகை (வாழ்க்கை அர்த்தத்திற்கான ஜப்பானிய சொல்) என உணர்ந்தார்.

ஹோட்டல்

1987ல் வேலையை விட்டு விலகி நான்கு நண்பர்களுடன் சொந்த தொழில் துவங்க தீர்மானித்தார். அவர்கள் ஒன்றிணைந்து ரூ.6 லட்சம் செலவில் ’சுஹாசினி ரெஸ்டாரண்டை’ துவக்கினர். பெரிய அளவில் துவக்க விழா நடைபெற்றும், வருவாய் பெரிய அளவில் இல்லை. இது நான்கு முதலீட்டாளர்களை பின் வாங்க வைத்தது.

“பங்குதாரர்கள் மேலும் பணம் போட தயாராக இருக்கவில்லை,” என்கிறார் அவர்.

ஓராண்டில் மிகவும் மோசமாக ரெஸ்டாரண்டை மூட வேண்டிய நிலை உண்டானது. அப்போது மிகவும் சோர்வான மனநிலையில் பல்லவி தியேட்டரில் படம் பார்க்கச்சென்றிருந்தேன் என்கிறார் ரவிசந்தர்.


’மனதில் உறுதி வேண்டும்’ தான் அந்த படம். படத்தின் நாயகி சுஹாசினி, நர்சாக இருந்து கொண்டு குடும்பத்திற்காக உழைத்தது அவரை கவர்ந்தது. குடும்பத்தினருக்காக நாயகி படும்பாட்டை படம் விவரித்தது.

“சுஹாஷினியின் பாத்திரம் எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தது. முயற்சியை கைவிடக்கூடாது எனச் சொல்லிக்கொண்டேன். என் மீது நம்பிக்கை கொண்டு குடும்பத்துடன் முன்னேற வேண்டும் என நினைத்தேன்,” என்கிறார்

ரவிசந்தர் தொழில்முனைவில் இரண்டாவது பயணத்தை துவங்க தீர்மானித்தார். அப்போது, இந்த முயற்சி பெறக்கூடிய வெற்றியை அவர் நினைத்து பார்க்கவில்லை.

தொழில்முனைவு 2.0

இரண்டாவது முயற்சியான ’நந்தினி’ துவக்கியதன் நோக்கம் ஆந்திராவுன் சுவையை பெங்களூருவுக்கு கொண்டு வருவது என்கிறார் ரவிசந்தர். ராஜாஜிநகர் எனும் பகுதியில் முதல் ரெஸ்டாரண்டை துவக்கியவர், 1989 முதல் 1997 வரை கொரமங்கலா மற்றும் இந்திராநகரில் மேலும் இரண்டு மையங்களை திறந்தார்.


1997ல் நிறுவனத்தின் பெயரை ’நந்தனா’ என மாற்றினார். இதற்கு வடமொழியில் மகள் என அர்த்தம். இதற்கு ஊக்கமாக அமைந்த அவரது இரண்டு மகள்கள் ஸ்வேத்தா மற்றும் ரம்யா ரவி நிறுவன வர்த்தகத்திலும் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.


சிக்கன் ஷத்திரியா, ஷோலே கபாப், பேம்பூ சிக்கன், கேரட் 65 உள்ளிட்ட ஆந்திர தனிச்சுவை உணவுகளுக்காக இந்த ரெஸ்டாரண்ட் பிரபலமானது. ரெஸ்டாரன்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. பெங்களூருவில் 22 மற்றும் சென்னையில் ஒரு ரெஸ்டாரண்ட் அமைந்துள்ளன.

நாகார்ஜுனா, எம்பயர் ரெஸ்டாரண்ட், ஷிரோ, கோஷி உள்ளிட்ட பல ரெஸ்டாரண்ட்கள் போட்டிக்கு வந்தாலும் நந்தனா செல்வாக்குடன் இருக்கிறது. ஒரு ரெஸ்டாரண்ட் கிளை லாபம் ஈட்ட மூன்று ஆண்டுகள் ஆகிறது என்கிறார்.


2006ல் இந்த துறையில் புதிய வாய்ப்பை உணர்ந்து, மேலும் விரிவாக்கம் செய்தார். பலரும் வர்த்தகத்திற்காக பயணம் செய்வதார் பார்த்தார். இது குழுமத்தின் ஹோட்டல் பிரிவுக்கு வழி வகுத்தது.


ஒவ்வொரு ஹோட்டலும், 260 அறைகள் கொண்டுள்ளன. அறைகள் வாடகை

ரூ.3,000-ரூ 5,000. பணிக்காக பயணம் செய்பவர்களை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டிருந்தனர்.

ஹோட்டல்


பெருந்தொற்று பாதிப்பு

கோவிட்-19 தாக்கிய போது விருந்தோம்பல் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இது மிகவும் சோதனையான காலம் என்று கூறும் ரவிசந்தர், ரெஸ்டாரண்ட் வர்த்தகம் 2021 முதல் பாதியில் 70 சதவீதம் குறைந்தது என்கிறார். ஆன்லைன் டெலிவரிகள் தான் காப்பாற்றியது என்கிறார். ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டாவுடனும் இணைந்து செயல்பட்டதாக கூறுகிறார்.

2020 நிதியாண்டில் ரூ.91 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் 2020 நிதியாண்டில் இது ரூ.68 கோடியாக குறைந்தது. லாபமும் ரூ.2 கோடியில் இருந்து ரூ.54 லட்சமாக குறைந்தது.

ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஊழியர்கள் சம்பளத்தையும், மற்ற செலவுகளையும் சமாளிக்க முடிந்தது.


இப்போதும் கோவிட்1-9 பாதிப்பு இருக்கிறது என்றாலும், சமூக இடைவெளி கவலைகள் குறைந்திருப்பதால், இந்த ஆண்டு சென்னை மற்றும் பெங்களூருவில் ஐந்து கிளைகள் திறக்க இருப்பதாக ரவிசந்தர் கூறுகிறார்.


மேலும், பெருந்தொற்றுக்கு முன்னர் ரூ.100 கோடி வர்த்தகத்தை எட்டும் நிலை இருந்தது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த இலக்கை அடைய திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார்.


ஆங்கிலத்தில்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற