‘என் உடல் நுகர்பொருள் அல்ல’ - உருவ கேலிக்கு சவுக்கடி கொடுக்கும் ஃபரா ஷிப்லாவின் போட்டோஷூட்!

By Kani Mozhi
December 20, 2021, Updated on : Mon Dec 20 2021 05:01:32 GMT+0000
‘என் உடல் நுகர்பொருள் அல்ல’ - உருவ கேலிக்கு சவுக்கடி கொடுக்கும் ஃபரா ஷிப்லாவின் போட்டோஷூட்!
உருவ கேலிக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக மலையாள நடிகை ஃபரா ஷிப்லா நீச்சல் உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

உருவக் கேலிக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக மலையாள நடிகை ஃபரா ஷிப்லா நீச்சல் உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பெண்கள் சந்திக்கும் உளவியல் ரீதியான தாக்குதலில் உருவ கேலியும் ஒன்று. குண்டாக இருக்கும் பெண்கள் என்றால் சமூகம் சற்றே இளக்காரப் பார்வையை வீசத்தான் செய்கிறது. உடல் அளவைப் பொறுத்தவரையில் சினிமா நடிகைகளைப் போன்ற ‘ஜீரோ சைஸ்’ தோற்றத்தை எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். குண்டான உடல் எடையை குறைக்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

Fara

பட்டினி கிடக்கிறார்கள், காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை, உடல் எடை குறைப்பு சிசிக்கை என வேண்டாத பலவற்றையும் செய்து ஆரோக்கியத்தை கொடுத்துக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களை சுற்றியிருப்பவர்கள் தான். உடன் இருப்பவர்களே கேலி, கிண்டல் செய்து தன்னம்பிக்கையை குறைப்பதும், கோபம் வரும்போது குடும்பத்தில் உள்ளவர்களே உடல் அமைப்பை சுட்டிக்காட்டி பேசுவதும் குண்டானவர்கள் பொது இடங்களுக்குச் செல்லாமல் தங்களை தனிமைப்படுத்தியபடி அறைக்குள்ளே முடங்கிக்கொள்ள வைக்கிறது.

நீச்சல் உடையில் ஃபரா ஷிப்லா:

அப்படி முடங்கி மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார் நடிகை ஃபரா ஷிப்லா. மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான ‘காக்‌ஷி: அம்மினிப்பிள்ளா’ என்ற படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் ஃபரா ஷிப்லா.


இவர், அண்மையில் உடல் பருமன் தொடர்பான எதிர்மறை எண்ணங்களை உடைக்கும் விதமாக ஒரு போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். ‘ப்ரிம்மிங் ஃபரா’ என தலைப்பிடப்பட்ட அந்த போட்டோஷூட்டில் மஞ்சள் நிற பிகினி உடையில் போஸ் கொடுத்திருக்கிறார் ஃபரா ஷிப்லா.

Fara

இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஃப்ரா, பிலடெல்பியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான சோஃபி லெவிஸின் மேற்கோளைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

”விமர்சனம் செய்வதற்கும் விவாதிப்பதற்கும் என்னுடைய உடல் உங்களுடையது நுகர்பொருள் அல்ல. என் உடல் என் பாத்திரம், அனுபவங்களின் காப்பகம். நான் மட்டுமே சந்தித்த போர்களில் ஈடுபட்ட ஒரு ஆயுதம். காதல், வலி, போராட்டம், வெற்றி மற்றும் புதிர் ஆகியவை நிறைந்த நூலகம். உங்கள் கண்களால் அது தாங்கிய அனைத்தையும் வரையறுக்க முடியாது. என் உடல் மீது மதிப்பு வைக்காதே. என் உடல் மீது உங்கள் மதிப்பீட்டை வைக்க வேண்டாம். அதை என் இருப்பின் மீது வையுங்கள்,” என்ற மேற்கோளை பதிவிட்டுள்ளார்.
Fara

மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஃபரா ஷிப்லா அத்துடன்,

"உன்னை கண்டு பெருமைப்படுகிறேன். உங்களை நேசிப்பது மிகப்பெரிய புரட்சி! உங்கள் உடல் மற்றும் உங்கள் ஆரோக்கியம் உங்கள் விருப்பம்," என உன்னதமான வரிகளை பதிவிட்டு பெண்கள் தங்களது உடலைக் கொண்டாட வேண்டும் என்பதை தெரிவித்துள்ளார்.

போட்டோஷூட்டில் பங்கேற்ற அனுபவம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு ஃபரா ஷிப்லா அளித்துள்ள பேட்டியில்:

“நான் இதை ஒரு கலைஞரின் பார்வையில் இருந்து அணுகியுள்ளேன். மக்கள் எந்தத் தடையுமின்றி செயல்படும் தொடர்களைப் பார்க்கிறேன், அதைப் பாராட்டுகிறேன். நான் வெட்கப்படுகிறேன், என் உடல் நன்றாக இல்லை என்று நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். நான் விரும்பியதை அணிய முடியும் என்பதை நம்பிக்கையுடன் தெரிவிக்கக்கூடிய ஒரு மகிழ்ச்சியான நபராக நான் இப்போது இருக்கும் இடத்திற்கு வருவது பெரும் போராட்டமாக இருந்தது,” எனத் தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி - இன்ஸ்டாகிராம்