Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

வெளிநாட்டு வேலையை விட்டு தாய்நாட்டில் பப்பாளி சாகுபடியில் லட்சங்களில் சம்பாதிக்கும் விவசாயி!

80 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்துடன்கூடிய வெளிநாட்டு வேலையை விட்டு விலகி இந்தியா திரும்பி பப்பாளி சாகுபடியைத் தொடங்கி இன்று லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார் அஸ்ரப் அலி.

வெளிநாட்டு வேலையை விட்டு தாய்நாட்டில் பப்பாளி சாகுபடியில் லட்சங்களில் சம்பாதிக்கும் விவசாயி!

Thursday April 07, 2022 , 2 min Read

அஸ்ரப் அலி வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். மாதம் 80,000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். இந்த வேலையை விட்டுவிட்டு சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார் அஸ்ரப். சொந்த ஊர் திரும்பி விவசாயத்தில் ஈடுபடலாம் என்பதே இவரது தீர்மானமாக இருந்தது.

இதை செயல்படுத்திய அஸ்ரப் இன்று வீட்டில் இருந்துகொண்டே லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். அதுமட்டுமா? இவர் பலருக்கு முன்னுதாரணமாகவும் இருந்து மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

1

பொதுவாக விவசாயத்தில் ஈடுபடுவபர்களுக்கு அதிக லாபம் கிடைக்காது என சொல்லப்படுவதுண்டு. இதனால் பலர் விவசாயத்தில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், இப்படிப்பட்ட கருத்தில் உண்மை இல்லை என நிரூபித்திருக்கிறார் அஸ்ரப்.

ஹத்துவா பிளாக்கில் வசித்து வரும் அஸ்ரவ் இன்று விவசாயத்தில் மட்டும் ஆண்டிற்கு 10 லட்சம் சம்பாதித்து வருகிறார். விவசாயத் தொழில் இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்த்துள்ளது.

2017ம் ஆண்டிற்கு முன்பு வரை அஸ்ரப் சவுதி அரேபியாவில் வசித்து வந்தார். 1992ம் ஆண்டு குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வேலை தேடி சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு பயணித்திருக்கிறார். ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக சேர்ந்துள்ளார். மாதம் 80,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய் வரை சம்பாதித்து வந்தார். ஆனால், இவருக்கு அந்த வேலையில் முழுமையாக ஈடுபாடு இருக்கவில்லை.

2017ம் ஆண்டு அஸ்ரப் தாய்நாடு திரும்பினார். இங்கு வந்த பின்னர், அவரது நண்பர் பப்பாளி சாகுபடி செய்ய ஆலோசனை வழங்கியுள்ளார். ஏற்கெனவே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்த அஸ்ரப்பிற்கு இது சரியான யோசனையாகத் தோன்றியது. பிறகு 8,500 ரூபாய்க்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வேலையை ஆரம்பித்தார்.

எதிர்மறை விமர்சனங்கள்

இதுபோன்ற புதிய முயற்சிகளைக் கையிலெடுக்கும் பெரும்பாலானோர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை விமர்சனங்கள். இவர்களை ஊக்குவிப்பவர்களைக் காட்டிலும் எதிர்மறை விமர்சனங்களைப் முன்வைப்போர் அதிகமிருப்பார்கள்.

அஸ்ரப் இதே பிரச்சனையை எதிர்கொண்டார். நல்ல வேலையை யாராவது விடுவார்களா? விவசாயத்தில் என்ன லாபம் கிடைத்துவிடப்போகிறது? என்ன முட்டாள்தனமான முடிவு இது? சுற்றியிருந்தவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினார்கள்.

குடும்பத்தினரும் இதேபோன்ற எண்ண ஓட்டங்களையே கொண்டிருந்தனர். அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அஸ்ரப் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

தோட்டக்கலைத் துறையின் மூலம் 500 பப்பாளி மரக்கன்றுகள் வாங்கி அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடியைத் தொடங்கினார். கடினமாக உழைத்தார். அதன் பலனாக இன்று மில்லியன் கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
2

மற்ற விவசாயிகளுக்கு உதவி

அஸ்ரப் தன்னுடைய முடிவில் உறுதியாக நின்று வெற்றியடைந்துள்ளார். அதுமட்டுமல்ல மற்ற விவசாயிகளுக்கும் வழிகாட்டி வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 18 விவசாயிகளுக்கு பயிற்சியளித்திருக்கிறார். செய்தி சானல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அஸ்ரப்,

“வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்தேன். 80-90 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது. ஆனால் இன்று என்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து இருப்பதுடன் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறேன்,” என்று தெரிவித்திருக்கிறார்.

தகவல் உதவி: YS Hindi | தமிழில்: ஸ்ரீவித்யா