சுங்கச் சாவடியில் கட்டாய FasTag: கால அவகாசம் நீட்டிப்பு!

இன்னும் பல வாகனங்கள் இந்த ஃபாஸ்டேக் வாங்காமல் இருப்பதால் டிசம்பர் 15 வரை நீட்டித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பின் Fastag இல்லாமல் பயணிக்கும் வாகனங்களிடம் எவ்வளவு சுங்கச்சாவடி கட்டணம் வாங்கப்படும் தெரியுமா?

1st Dec 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டாக் அமலாக்கம் கட்டாயமாகும் தேதியை டிசம்பர் 15, 2019-க்கு ஒத்திவைப்பதென மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தத் திட்டம் டிசம்பர் 1, 2019-லிருந்து தொடங்கப்படுவதாக இருந்தது.


எரிபொருளையும், நேரத்தையும் மிச்சப்படுத்தவும் மாசினைக் கட்டுப்படுத்தவும் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்யவும் தேசிய மின்னணு முறையிலான சுங்கக் கட்டண வசூல் திட்டத்தை சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தொடங்கி உள்ளது. ஆர்.எஃப்.ஐ.டி. தொழில்நுட்ப அடிப்படையில் ஃபாஸ்டாக் மூலம் கட்டணத்தை செலுத்த இந்த முறை வகை செய்கிறது. சுங்கச்சாவடிகளின் இரு தடங்களிலும் ஒரு வழி தவிர மற்றவை ஃபாஸ்டாக் பாதையாக டிசம்பர் 1, 2019-லிருந்து அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

Fast tag

Image courtesy: Youtube

இருப்பினும் பல்வேறு காரணங்களால் பயணிகளில் பலர் தங்களின் வாகனங்களில் ஃபாஸ்டாக் பொருத்தாதது கண்டறியப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக்கினை வாங்கி தங்களின் வாகனங்களில் பொருத்த பயணிகளுக்கு மேலும் கால அவகாசம் அளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் பாதையில் ஃபாஸ்டாக் பொருத்தாத வாகனங்கள் செல்லும் போது டிசம்பர் 1, 2019-லிருந்து இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதற்கு பதிலாக டிசம்பர் 15, 2019-லிருந்து இந்த முறை அமலுக்கு வரும்.

எனவே கட்டணமில்லாமல் ஃபாஸ்டாக் வழங்குவது டிசம்பர் 15, 2019 வரை தொடரும்.

FasTag கார்டை பெறுவது எப்படி?

ஃபாஸ்டேக் கார்டுகள் எல்லா டோல்கேட்களிலும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் சில ஏஜென்ஸிகள் மூலமாகவும் அது விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்காக விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். https://www.fastag.org/fasttag அல்லது பேன்க்குகளின் இணையதளத்தின் இருந்தும் விண்ணப்படிவத்தை பெறலாம். தேவையான ஆவணங்கள்:


1. சம்பந்தப்பட்ட காரின் ஆர். சி புக்.

2. கார் உரிமையாளரின் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

3. உரிமையாளரின் விபரங்கள் கே.ஓய்.சி., படிவமாக நிரப்பப்படவேண்டும். 4. இருப்பிடச் சான்று மற்றும் அடையாள சான்றிற்காக டிரைவிங் லைசன்ஸ், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதேனும் ஒன்றின் நகல்.


கட்டுரை தொகுப்பு: இந்துஜா ரகுனாதன் 


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India