பதிப்புகளில்

உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்களே வடிவமைத்து பெற்றுக்கொள்ள உதவும் தளம்!

26th Mar 2018
Add to
Shares
192
Comments
Share This
Add to
Shares
192
Comments
Share

நீங்கள் ஷாப்பிங் செல்லும்போது ஒரு பொருளை பார்க்கிறீர்கள். அது உங்களுக்கு பிடிக்கிறது. ஆனால் அதில் ஏதோ ஒரு சின்ன மாறுதல் செய்யப்பட்டால் அது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என நீங்கள் நினைப்பீர்கள். அதன் நிறமாக இருக்கலாம். அதன் அளவாக இருக்கலாம். அதன் வடிவமாக இருக்கலாம். அதிலும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது இது மேலும் கடினமாகிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட பொருளில் மாற்றம் செய்வது குறித்து அதன் உற்பத்தியாளர்களிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.

இந்தக் கருத்தை மாற்றுகிறது Zwende. ஆஃப்லைனில் ஷாப்பிங் செய்வதைக் காட்டிலும் சிறப்பாகவும் எளிதாகவும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய உதவுகிறது. கைவினைப் பொருட்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப முற்றிலும் மாற்றி கிட்டத்தட்ட அந்த பொருளின் விலையிலேயே இந்தத் தளம் வழங்குகிறது.

இங்குள்ள பொருட்கள் இந்திய கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டதாகும். இதன் செயல்முறைகள் விளையாட்டு நிறைந்ததாக இருக்கும். வலைதளமும் அதில் காணப்படும் பொருட்களும் கண்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களே இந்தத் தளத்தை சிறப்பானதாக்குகிறது. 

image


தளத்தை உருவாக்கிய தம்பதி

இன்னு நெவேஷியா ஒரு மென்பொருள் பொறியாளர் மற்றும் ஐஎஸ்பி முன்னாள் மாணவி. இவரது அப்பா 1977-ம் ஆண்டு முதல் பெட்ரோலியம் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்மொபி நிறுவனத்தின் ஆரம்ப கட்டத்தில் இணைந்தவர்களில் இன்னு ஒருவர். அங்கு துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இன்னு அவரது சீனியர்களுடனும் இன்மொபியின் சக ஊழியர்களுடனும் கலந்துரையாடியதில் அவரது தொழில்முனைவு விருப்பம் மேலும் அதிகரித்து உந்துதலளிக்கப்பட்டது. 

சுஜய் சுரேஷ் மெக்கானிக்கல் பொறியாளர். இவரும் ஐஎஸ்பி முன்னாள் மாணவர். சுஜய் தனது வீட்டிற்குத் தேவையான உணவு, காற்று, தண்ணீர், மின்சாரம் அனைத்தையும் தானே உருவாக்கிக்கொள்ளும் நபரான சோலார் சுரேஷ் அவர்களின் மகனாவார்.

கைவினைஞர் சமூகத்தின் மீது இன்னுவிற்கு இருந்த ஆர்வமே வெறும் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்பதைத் தாண்டி Zwende துவங்க உந்துதலளித்தது. சுஜய் Zwende-க்கு முன்பு கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் கார்ப்பரேட் பயிற்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் தனது சொந்த வென்சரை நடத்தி வந்தார்.

இந்தத் தம்பதி பெங்களூருவில் தங்களது வீட்டை அமைத்தபோதுதான் இந்த திட்டம் உருவானது. 

”நாங்கள் ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும்போதும் பொருட்களின் தேர்வுகள் எங்களது தேவைக்கு மிகப்பொருத்தமாக அமைவதில்லை என்பதை உணர்ந்தோம். ஒரு பொருளை அதன் ஆரம்பகட்டத்திலிருந்து உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் வடிவமைப்பாளர்களும் அல்ல. பொருட்களில் ஒரு சின்ன மாறுதலை ஏற்படுத்துவதே தேவையாக இருந்தது,” என்று விவரித்தார்.

வடிவமைப்பாளர்கள் கைவினைஞர்கள் என 75 வெவ்வேறு உற்பத்தியாளர்களுடன் உரையாடினார். அவர்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பொருட்களில் சிறு சிறு மாறுதல்களை செய்யத் தயாராக இருப்பது தெரியவந்தது. ஆனால் அத்தகைய மாறுதல்களைச் செய்து பொருட்களின் இருப்பை அதிகரிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தனர். அதே சமயம் வாடிக்கையாளர்களின் பிரத்யேக கோரிக்கைகளை நிறைவேற்றவும் தயாராக இருந்தனர்.

உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நோக்கம் முறையாக நிறைவேறவில்லை என்பதே பிரச்சனையாக இருந்தது. குடும்ப நண்பர் ஒருவருடன் உரையாடியபோது அவர் தனக்கான ஷூக்களை nikeid.com தளத்தில் மூலம் தானே உருவாக்குவதாகவும் சந்தையில் நமக்கு தேவைப்படும் கச்சிதமான பொருள் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தார். இதுமே இந்த தம்பதியின் குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது.

”Nike ID-யின் அணுகுமுறை எங்களுக்குப் பிடித்திருந்தது,” என்று நினைவுகூர்ந்தார். ”Nike ID-யில் நைக்கி அதன் முழு தயாரிப்பு, பொருட்கள் மற்றும் வடிவமைப்பு தொகுப்பை ஆன்லைனில் காட்சிப்படுத்துகிறது. 

வாடிக்கையாளர்கள் இதிலிருந்து தங்களுக்கு விருப்பமான ஷூக்களை உருவாக்கிக்கொள்ளலாம். நிகழ்நேர அடிப்படையில் தாங்கள் உருவாக்கியதை காட்சிப்படுத்திப் பார்த்து ஆர்டர் செய்யலாம். இரண்டே வாரங்களில் இவை டெலிவர் செய்யப்படும்.

இது போன்ற முன்னுதாரண முயற்சியின் நிரூபனம் அவர்கள் இந்தப் பிரிவில் தங்களது செயல்பாடுகளைத் துவங்க உந்துதலளித்தது.

Zwende துவக்கம்

இந்த முறையை இந்தியாவில் செயல்படுத்த திட்டமிட்டனர். பைகள், பயணத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், அலங்கார விளக்குகள், ஸ்டேஷனரி உள்ளிட்ட ஃபேஷன் மற்றும் வீட்டு அலங்காரம் சார்ந்த கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்வோர்களில் கவனம் செலுத்தினர். தனிப்பிரிவுகளாக வகைப்படுத்துதல், டிஜிட்டல் முறையாக்குதல், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு உருவாக்குதல் என அனைத்தையும் தயார்படுத்த ஓராண்டு காலம் எடுத்துக்கொண்டு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தினர்.

தயாரிப்புகள், வடிவமைப்பு, பொருட்கள் என இந்தியா முழுவதும் உள்ள உற்பத்தியாளர்களின் முழுமையான தொகுப்பை டிஜிட்டல் முறைப்படுத்தி ஆன்லைனில் வழங்கினர். எந்த பொருட்களுமே முன்னரே தயாரிக்கப்படுவதும் இல்லை இருப்பு வைப்பதுமில்லை.

பயனர்கள் ஒரு தயாரிப்பை தேர்ந்தெடுத்து அதன் மூலப்பொருட்கள், வடிவமைப்பு, நிறம் போன்றவற்றையும் தேர்ந்தெடுத்து அவர்கள் உருவாக்கியதை 360 டிகிரியில் நிகழ் நேரத்தில் காட்சிப்படுத்திப் பார்க்கலாம். தேவையின் அடிப்படையிலேயே அனைத்து ஆர்டர்களும் உற்பத்தி செய்யப்படும். அவை கைவினைஞர்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு 3-15 நாட்களில் விநியோகிக்கப்படும். நேரடியாக கடைகளில் வாங்கும் பொருட்களின் விலையைப் போன்றே இவற்றின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பொருட்களில் மட்டும் சுமார் 3-5 சதவீதம் வரை கூடுதலாக இருக்கக்கூடும்.

’டிஸ்கவர்’ என்கிற பகுதியில் நீண்ட நாட்களாக பல வாடிக்கையாளர்களின் தேர்வாக இருந்த தயாரிப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கும். பொருட்களின் மீது ஒருவர் தனது பெயரையோ அல்லது முதல் எழுத்தையோ பொறித்துக் கொள்ளலாம் அல்லது கைவினைஞர்களின் உதவியுடன் கைகளால் எழுதலாம்.

”வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு பொருட்களை வடிவமைப்பதற்கு வழிகாட்டும் ஒரே தளம் உலகிலேயே Zwende மட்டும் தான். இதன் ’ஸ்மார்ட் கஸ்டமைசர்’ வசதியானது ஒரு பொருளின் முதல் பகுதிக்கு வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் நிறம் மற்றும் வடிவமைப்பிற்கு பொருத்தமான வடிவமைப்பை மட்டுமே மற்ற பகுதிகளுக்கு பரிந்துரைக்கும். இந்தப் பரிந்துரைகள் வடிவமைப்பாளர்களால் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். இது வடிவமைப்பாளர்கள் தங்கள் வடிவமைப்பு பாணியையோ அல்லது ப்ராண்டின் தனித்துவத்தையோ தக்கவைத்துக்கொள்ள உதவும்,” என்று சுஜய் விவரித்தார்.

மற்றொரு புறம் விற்பனையாளர்கள் தங்களது தயாரிப்புகளில் ஒன்றிரண்டை மாதிரியாக வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தலாம். அதே போல் தோல் மாதிரிகள், பொருட்களின் நிறம், கலை வேலைப்பாடுகள், நிறங்களின் பட்டியல் உள்ளிட்டவற்றை தங்களது இருப்பை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கு மாதிரியாக வழங்கலாம்.

”வடிவமைப்பாளர்கள் தங்களது தயாரிப்பையும் புதுமையான வடிவமைப்புகளையும் மேம்படுத்திக்கொள்ள இந்தத் தளம் வாய்ப்பளிக்கிறது. மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தொகுப்பை அறிமுகப்படுத்தவும் அவ்வப்போதைய வடிவமைப்புகளுக்கு எளிதாக மாறிக்கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. மூலப்பொருட்களை இருப்பு வைப்பதற்கான தரவுகள், தயாரிப்பு குறித்த கருத்துக்கள், வாடிக்கையாளர் தரப்பில் இருந்து வரும் புதிய தயாரிப்புகளுக்கான கோரிக்கைகள் ஆகியவற்றை உற்பத்தியாளர்களுக்கு வழங்குகிறோம்,” என்றார்.

வணிக விவரங்கள்

350 மில்லியன் வகையான வெவ்வேறு சேர்க்கைகளுடன் காணப்படும் கைகளால் வண்ணம் தீட்டப்பட்ட அலங்கார விளக்குகள் போன்ற தயாரிப்புகள் ஏழு வேலை நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். இதன் விலை 10,000 ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். 

“பண்டிகைக்கால தொகுப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் 10,000 முதல் ஒரு மில்லியன் வெவ்வேறு சேர்க்கைகளுடன் ஒன்று முதல் மூன்று நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மொத்த விலை வெறும் 1,500 ரூபாய் –2000 ரூபாய் வரை ஆகும்,” என்றார்.

பல்வேறு வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கைகள் வாயிலாக கனசதுர அலங்கார விளக்குகளில் மட்டும் 2.5 மில்லியன் தேர்வுகள் உள்ளன. உலகிலேயே அதிகமான மதுபானி மற்றும் தொலு பொம்மலாட்டத்தின் டிஜிட்டல் வடிவமைப்பு களஞ்சியம் கொண்ட ஒரே தளம் இதுவாகத் தான் இருக்கும். டீகூபேஜ், அஜ்ரக், கலம்காரி, கைவினை ஆடம்பரம், கார்க் ஆர்க், காஷ்மீரி எம்பிராய்டரி போன்றவை இவர்களது பிற கலை வடிவங்களாகும்.

இந்த தளத்தில் வாடிக்கையாளர் பொருட்களை வாங்குவதற்கான சராசரி தொகை 2000-2500 ஆகும். துவங்கிய நாள் முதலே லாபகரமாக செயல்படுகிறது. மொத்த லாப அளவில் இருந்து இவர்களது லாபம் 35-45 சதவீதம் ஆகும்.

”அமெரிக்காவில் அலங்கார விலக்குகளுக்கான 2.5 மில்லியன் தேர்வுகள் திரையில் காண்பதற்கான நேரம் ஒன்பது முதல் பதினோரு நிமிடங்களாக இருந்தது. ஆனால் ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் தான் கட்டாயம் ஆர்டர் செய்யவேண்டும் என்பதால் காத்திருக்க விரும்புவதாக கூறினார். இது எங்களை மேலும் ஊக்கப்படுத்தியது. அடுத்த மூன்று நாட்கள் இதற்காக செலவிட்டு பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு இறுதியில் மூன்று விநாடிக்குள் பார்க்குமாறு தளத்தில் மாற்றம் செய்தோம்.”

”வாடிக்கையாளர் தனது அமெக்ஸ் கார்ட் மூலம் கட்டணம் செலுத்துவதில் சிக்கலை சந்தித்தார். இதையும் சரிசெய்தோம். உங்களது பயனர்கள் வாயிலாகவே உங்களது சிறந்த கற்றலும் புதுமையும் வெளிப்படும். அப்போதிருந்து இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச ஆர்டர்களுக்கும் பல்வேறு கார்ப்பரேட் ஆர்டர்களுக்கும் சேவையளித்தோம்,” என்றார்.

Zwende முற்றிலும் சுயநிதியில் இயங்கி வருகிறது. கார்ப்பரேட் கிஃப்ட் பிரிவிலும் சிறப்பாக செயல்படுகிறது. கூகுள் அமெரிக்கா, டொயோட்டா இன்ஷுரன்ஸ் போன்ற நிறுவனங்கள், Mech Mocha, Rizort போன்ற ஸ்டார்ட் அப்கள், இந்தியாவைச் சேர்ந்த க்ளோபல் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் போன்றோர் இவர்களது வாடிக்கையாளர் தொகுப்பில் அடங்குவர்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை இவர்களது வளர்ச்சிக்காக எந்தவித செலவும் செய்யவில்லை. அதன் பிறகே வாடிக்கையாளர் தொடர்பைப் பெற செலவிட்டது. சமூக ஊடகங்கள், இ-மெயில் அனுப்புவோர், கண்காட்சி மற்றும் பாப் அப் போன்ற ஆஃப்லைன் வசதிகள் போன்றவற்றை பயன்படுத்திக்கொண்டது. பெங்களூருவில் அதன் சொந்த கடையும் திறக்கப்பட்டது.

”நாங்கள் தரவுகள் சார்ந்த அணுகுமுறையையே பின்பற்றுகிறோம். வாடிக்கையாளர்கள் சென்றடைவதும் விற்பனையாக மாற்றுவதும் முக்கியம். அதே போல் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பதும் அவசியம். வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப பொருட்களை வடிவமைப்பதற்கு தளத்தில் செலவிடும் நேரமும் தனிப்பயனாக்குவதிலோ அல்லது வலைதளத்திலோ காணப்படும் நிகழ்வுகள் குறித்த ஹேஷ்டேக் ஆகியவையே எங்களது முக்கியக் காரணிகளாகும். மற்ற மின்வணிக வலைதளங்களைக் காட்டிலும் நாங்கள் இந்த தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இதுவே எங்களது வெற்றியின் ரகசியமாகும்,” என்றார் சுஜய்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
192
Comments
Share This
Add to
Shares
192
Comments
Share
Report an issue
Authors

Related Tags