பதிப்புகளில்

பயணத்தை தனித்துவமான அனுபவமாக்கும் 'வீ நோமாட்ஸ்'

19th Nov 2015
Add to
Shares
64
Comments
Share This
Add to
Shares
64
Comments
Share

அனிமேஷ் சிங் மற்றும் அனுபம் பதக் என்ற இருவரும் 'வீநோமாட்ஸ்.காம்' (WeNomads.com) என்ற தங்கள் நிறுவனம் மூலமாக சிறப்பம்சம் வாய்ந்த பயணங்களை ஏற்பாடு செய்கிறார்கள். இவர்கள் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது. ஒரு பயணம் புதிய அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதோடு உபயோகமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே இந்த நிறுவனம்.

தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாலைப்பயணம், மலையேற்றம், ஆரோக்கிய சுற்றுப்பயணங்கள், புகைப்படம் சார்ந்த பயணம் மற்றும் கோயில் பயணம் போன்றவைகளை வழங்குகிறார்கள்.

“பயணிகள் தங்கள் விடுமுறையில் தனித்துவமான அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடே எங்கள் நிறுவனத்தை துவங்கினோம். இந்த அனுபவத்தை குறிக்கோள் சார்ந்த பயணத்தின் மூலமாக வழங்குகிறோம். நாங்கள் ஏற்பாடு செய்யும் ஒரு பயணம் குறிப்பிட்ட நோக்கம் சார்ந்தது. பயணங்களை அதன் சிறப்பு சார்ந்து வகைபடுத்தியிருக்கிறோம். பயணமானது வீட்டிலிருந்து துவங்குகிறது” என்கிறார் வீநோமாட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான அனிமேஷ்.

image


ஒவ்வொரு பயணமுமே தனித்துவமான அம்சம் இருக்கிறதா என்று உறுதி செய்த பிறகே இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

என்ன செய்கிறார்கள்?

அனிமேஷும், அனுபமும் தங்கள் பயணங்களின் மூலமாகவே இந்த ஐடியாவை பெற்றார்கள். பெரும்பாலான பயணங்களில் எந்தவித அனுபவமும், சுவாரசியமும் கிடைப்பதில்லையே அது ஏன் என யோசித்த போதே இந்த நிறுவனத்திற்கான விதை உருவானது.

பயணம் மூலமாக வித்தியாசமான அனுபவத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அத்தகைய அனுபவத்தை வழங்கக்கூடிய பயண நிறுவனங்களை அணுகும்போது ரொம்பவே யோசிக்கிறார்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காரணம் அனுபவம் சார்ந்து பயணங்களை ஒருங்கிணைக்கக்கூடிய நிறுவனங்கள் மிகக்குறைவு, அவர்களை கண்டறிவது கடினம் என்பதே.

சிலர் அது போன்ற பயணத்தை வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் இணையதளத்தை பார்க்கும்போது அவை முழுக்க முழுக்க விளம்பரங்களால் நிரம்பி வழிகின்றன. அது அவர்கள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்த தெரியாத காரணத்தால் தங்கள் நிறுவனம் வழங்கக்கூடிய பயணத்தின் முக்கியத்துவத்தை சரிவர பட்டியலிடாத காரணத்தால் இணையதளத்தை பார்வையிடுபவர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற முடிவதில்லை.

"சிறப்பம்சம் வாய்ந்த பயண ஏற்பாட்டாளர்களுடனான அனுபவம் எப்போதுமே மோசமாகவே இருக்கின்றன. அவர்களிடம் இணையதளத்திலேயே பணம் செலுத்தும் தொழில்நுட்பம் இல்லை. பெரும்பாலானவர்கள் இன்னமும் பழைய வடிவத்தில் பணம் செலுத்தும் விதத்தையே பின்பற்றுகிறார்கள். காசோலை மூலமாகவோ, வரைவோலை மூலமாகவோ இல்லை அவர்கள் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்ப சொல்லியோ கேட்கிறார்கள். இது நல்ல வாடிக்கையாளர்களை எரிச்சலூட்டுகின்றன. இது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. இது போன்றவர்கள் மீது நம்பகத்தன்மை வருவதில்லை என்பதால் இயல்பாகவே யோசிக்கிறார்கள்” என்கிறார் அனிமேஷ்.

தகவல்தொழில்நுட்ப பின்னணியில் இருந்து வந்திருப்பதால் தொழில்நுட்பம் மூலமாக மட்டுமே சிறப்பான சேவை வழங்கமுடியும் என நம்புகிறார்கள் இந்நிறுவனர்கள். இவர்கள் சேவை பல்வேறு அம்சங்களை கொண்டிருப்பதால் இந்த துறையில் இருக்கும் பிரச்சனைகளை எளிதாக கையாள முடிவதாக தெரிவிக்கிறார்கள்.

முதல் காலாண்டில் வளர்ச்சி

ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் இணையதளத்தை துவங்கியவர்கள் 25 சதவீத வளர்ச்சியான 20 லட்ச ரூபாய் மதிப்பில் வணிகம் செய்திருக்கிறார்கள்.

முதல் மாதம், நான்கு பயண ஏற்பாட்டாளர்களோடு இணைந்து 15 பயணங்களை ஏற்பாடு செய்தார்கள். முதல் காலாண்டில் மட்டும் 35 ஏற்பாட்டாளர்கள் மூலமாக நூறு பயணங்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு இறுதிக்குள் 500 பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாக 1.3 கோடி ரூபாய் மதிப்பில் பணப்பரிமாற்றம் நடக்கும் என எதிர்பார்ப்பதாக இந்நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் தெரிவிக்கிறார்கள்.

திட்டம்

முதலீடுகளை திரட்டுவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க எதிர்காலத்திற்கு மிகச்சிறப்பான கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் முதலீட்டாளர்களை அணுகப்போவதாக தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் பல்வேறு முதலீட்டாளர்களை அணுகி நிறுவனத்தை விரிவுபடுத்தப்போவதாக தெரிவிக்கிறார்கள்.

நிறுவனத்தின் இணையதளம், ஈஆர்பி அடிப்படையில் இயங்குவதால் தகவல் ஓட்டம் சிறப்பாக செயல்பட்டு தரவு சார்ந்த வணிக முடிவுகள் எடுக்க முடியும். பயண ஏற்பாட்டாளர்களுக்கு பயணங்களை திட்டமிட இது உதவுகிறது. இன்னொருபக்கம் சந்தைப்படுத்துதலை துவங்க இருக்கிறார்கள்.

தங்கள் தளம் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே மிகப்பெரிய வெற்றியடைய முடியும் என அனிமேஷ் நம்புகிறார். இது மிகச்சவாலான ஒன்றுகூட. “இந்த துறையில் இருக்கக்கூடிய மிகமுக்கிய சவாலே சந்தையின் முதிர்ச்சி சார்ந்து இருப்பது தான்” என்கிறார்.

பயணம் சார்ந்த துறையில் என்ன நடக்கிறது

இந்தியாவின் ஓய்வுகால பயண சந்தை என்பது 80 பில்லியன் அமெரிக்க டாலர் ஆண்டு மதிப்பை கொண்டது. இது 2024ல் 150 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தத் துறை 115 மில்லியன் அமெரிக்க டாலரை வென்ச்சர் கேபிடல் மூலமாகவும் தனிப்பட்ட நிதி திரட்டல் மூலமாகவும் திரட்டியிருக்கிறார்கள்.

கடந்த மாதம் பெங்களூரிலுள்ள ட்ரிப்ஃபேக்டரி.காம் (tripfactory.com) நிறுவனம், முதல்கட்ட நிதியை மோகன்தாஸ் பாய் மற்றும் டாக்டர் ராஜன் பாய் ஆகியோரின் முதலீட்டு குழுமத்திடமிருந்து பெற்றிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் இயங்கக்கூடிய ட்ராவல் ட்ரயாங்கிள் நிறுவனம் எட்டு மில்லியன் அமெரிக்க டாலரை இரண்டாம் கட்ட நிதி திரட்டலில் பெசிமர் வென்ச்சர் பார்ட்னர்ஸிடம் இருந்து பெற்றிருக்கிறது. எஸ்ஏஐஎஃப் என்ற தங்களின் தற்போதைய முதலீட்டாளரின் பங்கேற்பின் மூலம் இதை பெற்றிருக்கிறார்கள்.

பயணம் சார்ந்த துறையில் ஒவ்வொரு புது நிறுவனமுமே தனித்துவமானவை என சொல்லிக்கொள்கிறார்கள். தங்களின் சேவை மூலம் மட்டுமே சிறப்பான வாடிக்கையாளர்களை கவர்கிறார்கள்.

ஓய்வுகால பயணம், திருத்தியமைக்கப்பட்ட விடுமுறை, பயணம் செய்பவர்கள் தங்குமிடம், சிறப்பம்சம் வாய்ந்த பயணங்கள் மற்றும் பல்வேறு வகையான சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த துறையை உயிர்ப்பாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு புது நிறுவனமும் கடுமையாக போட்டியிட்டு புதிய வாடிக்கையாளர்களை பெறுகிறார்கள். இந்த துறை வளர இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு முறை புதிய சேவைகள் வழங்குவதன் மூலம் அடுத்தக்கட்டத்தை நோக்கி அசுர வேக பாய்ச்சலில் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதள முகவரி: WeNomads

ஆக்கம் : TAUSIF ALAM

தமிழில் : Swara Vaithee

Add to
Shares
64
Comments
Share This
Add to
Shares
64
Comments
Share
Report an issue
Authors

Related Tags