பதிப்புகளில்

2017-ல் எதிர்நோக்க வேண்டிய சக்தி வாய்ந்த 8 பெண்மணிகள்!

10th Feb 2017
Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share

புதிய ஆண்டு பிறந்து ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில் பலரும் தாங்கள் திட்டமிட்டு வைத்திருக்கும் தங்கள் இலக்கு மற்றும் கனவை நோக்கி பயணித்து வருகின்றதை பார்க்கமுடியும். நம்மில் சிலர் இடையில் நம் இலக்கை கைவிடவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சில வெற்றி பெண்மணிகள் தங்களின் நிலையை தக்கவைத்துக் கொள்ள, பிறரை ஊக்கப்படுத்த தவறாமல் தங்கள் இலக்கை நோக்கி வேகமாக போய் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டத்தை எந்தவித தடைகளும் பாதிப்பதில்லை. 

இதோ அந்த சக்திவாய்ந்த 8 பெண்மணிகள் பற்றிய தொகுப்பு: 

image


அருந்ததி பட்டாச்சார்யா, பாரத ஸ்டேட் வங்கி தலைவர் 

நீண்ட பயணமாக இந்த இடத்தை அடைந்தவர் அருந்ததி பட்டாச்சார்யா. பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு இண்டெர்னாக 21 வயதில் சேர்ந்த அருந்ததி, தன் கடின உழைப்பால் வங்கியின் முதல் பெண் தலைவராக ஆகியுள்ளார். 2016 இல் ஃபோர்ப்ஸ் ‘உலகின் 100 வலிமையான பெண்கள் பட்டியலில் , 25-வது இடத்தில் அருந்ததியை வெளியிட்டது அவரின் திறமையை உணர்த்தியது. அதே போல், ஃபார்ச்சூன் இதழும் இவரை நான்காவது இடத்தில் பட்டியலிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில் அருந்ததியின் சிறப்பான பணி வெளியில் தெரிந்தது. அந்த சூழ்நிலையை அவர் கையாண்ட விதம் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த ஆண்டும் அருந்ததி எஸ்.பி.ஐ வங்கியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று நவீன காலத்துக்கேற்ப சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளார். 

நிக்கி ஹாலே, யூஎன் இல் உள்ள அமெரிக்க தூதர்

டோனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுத்த தெற்கு கரோலினா ஆளுனரான நிக்கி ஹாலே, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க தூதராக உள்ளார். இவர் பாம்பெர்க் என்ற இடத்தில் பிறந்தவர். பஞ்சாபில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் இவரின் பெற்றோர். 2001-ல் நடந்த தேர்தலில் தெற்கு கரோலினா மாகாணத்தின் முதல் பெண் ஆளுனராக தேர்வாகி வரலாறு படைத்தார். அப்போதில் இருந்து அவர் பிரபலமாகி, அரசியலில் தன் கவனத்தை செலுத்தி பயணிக்கத் தொடங்கினார். இந்த ஆண்டு சர்வதேச அளவில் தன் பணிகளால் பிரபலமடைவார் என்று எதிர்ப்பார்க்கலாம்.

பிரியங்கா சோப்ரா, நடிகை

கோல்டன் க்ளோப்ஸ் அவார்டில் சிவப்பு கம்பள வரவேற்பில், தங்க நிறத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட கெளனில் வலம்வந்தது முதல், பராக் ஓபாமா வெள்ளை மாளிகையில் தந்த இறுதி தினப்பேச்சில் கலந்து கொண்டது வரை தனக்கான அங்கீகாரத்தை உலக அளவில் அடைந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் பிரியங்கா. க்வாண்டிகோ என்ற அவர் நடித்த ஆங்கில டிவி சீரியல் ஹிட் ஆகி, தற்போது ஹாலிவுட் படமான பேவாட்ச்சில் நடித்து தன் பிரபலத்தை கூட்ட உள்ளார் பிரியங்கா. மே மாதம் முதல் வெளிவரவிருக்கும் இந்த தொடருக்கு கிடைக்கவிருக்கும் வரவேற்பு பிரியங்காவின் ஹாலிவுட் பயணத்தை முடிவெடுக்கும். 

ரேஷ்மா ஷெட்டி, Ginkgo பயோவர்க்ஸ் இணை நிறுவனர்

ஒரு கண்டுபிடிப்பாளராக Ginkgo பயோவர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, பயாலஜி மூலம் இன்ஜினியரிங் துறையில் புதிய தரத்தை கொண்டுவரக் காரணமாக இருந்தார். தயிர் ஏட்டை மூலதனப் பொருளாகாக் கொண்டு செண்ட், அழகு சாதனங்கள் மற்றும் ஸ்வீட்டனர்களை தயாரித்தார். இதே முறையை பின்பற்றி அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ப்ரென்ச் நிறுவனம் ஒன்று ஆயில் பெர்ஃப்யூம் தயாரிக்கத் தொடங்கி வரவேற்பை பெற்றுள்ளனர். இந்த தொழில்நுட்பம் கொண்டு தயாரிப்பதால் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யமுடிகிறது. ஃபோர்ப்ஸ் ரேஷ்மாவை ‘8 வருங்கால கண்டுபிடிப்பாளர்’ பட்டியலில் ஒருவராக தேர்ந்தெடுத்தனர். தன்னுடைய பணிகளை இந்த ஆண்டு தீவிரமாக செய்யவுள்ளார் ரேஷ்மா. 

ப்ரேர்னா குப்தா, சிஇஒ Hooked

ஸ்டார்ட்-அப் உலகில் மிக வலுவான பெண்களுள் ஒருவரான ப்ரேர்னா, கற்பனை கதைகளை சிறுகதைகளாக்கி அதை மெசேஜ்கள் போல் தயாரிக்கும் நிறுவனம் Hooked சிஇஒ. இவர், அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஆவார். தனது கணவர் பராக் கார்டியா, குஷ் என்ற ஒரு நிறுவனத்தை முதலில் தொடங்கி அது உலக புகழ் பெற்றது. இசை ஆப்’களுக்கு உதவும் இந்த தளத்திற்கு 50 மில்லியன் பயனர்கள் இருந்தனர். அவரை தொடர்ந்து தொழில்முனைவரான ப்ரேர்னா, தன் புதிய முயற்சியை இந்த ஆண்டு எந்த அளவிற்கு வெற்றிகரமாக கொண்டு சென்று, உலகம் முழுதும் தங்களின் கதைகளை பரப்பப்போகிறார் என்று பார்க்கவேண்டும். 

ப்ரார்த்தனா தேசாய், செயல்பாடுகள், Zipline

27 வயதான ப்ரார்த்தனா தேசாய், புதிய ஐடியாக்களின் நிகழ்கால தூதுவர் என்றே சொல்லவேண்டும். வளரும் நாடுகளில் ட்ரோன்கள் கொண்டு மருந்துகளை டெலிவரி செய்யும் புதிய வழியை வடிவமைக்கிறது Zipline. இந்த அற்புதமான ஐடியாவை கொண்டு வந்தவர் ப்ரார்த்தனா. ஹார்வர்ட் பல்கலையில் இடையில் கல்வியை கைவிட்ட அவர், Zipline எனும் மருந்து நிறுவனத்தில் செயல்பாடுகள் துறையில் இணைந்தார். ருவாண்டா போன்ற இடத்தில் ட்ரோன்கள் கொண்டு மருந்துகளை டெலிவரி செய்ய செயல்பாடுகள் புரிந்தார். 2016 அவரின் பயணத்தில் பல நன்மைகளை பெற வழி செய்தது. ஃபோர்ப்ஸ் அவரை, 30 வயதுக்குட்பட்ட வெற்றியாளர்கள் பட்டியலில் ஒருவராக தேர்ந்தெடுத்து வெளியிட்டது. இந்த ஆண்டிலும் பல புதிய புரட்சியை குறிப்பாக மருத்துவத்துறையில் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மல்லிகா ஸ்ரீனிவாசன், தலைவர் மற்றும் சிஇஒ TAFE

'ட்ராக்டர் க்வீன்’ என்று அழைக்கப்படும் மல்லிகா ஸ்ரீனிவாசன், தன் நிறுவனத்தை பலமடங்கு உயரத்துக்கு கொண்டு சென்று ட்ராக்டர் தயாரிப்பில் உலகின் மூன்றாவது இடத்தை அடையச் செய்தார். இவருடைய அளப்பறிய பங்கால், இந்நிறுவனம் 96 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு வளர்ந்து நிற்கிறது. வார்டன் பிசினஸ் பள்ளி வெளியிட்ட 125 வெற்றிகரமான முன்னாள் மாணவர்கள் பட்டியலில் மல்லிகா இடம் பெற்றார். கடந்த ஆண்டு பிபிசி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 100 பெண்மணிகள் பட்டியலில், அவரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 

சாய்னா நெய்வால், பாட்மிண்டன் வீரர்

உலகின் பேட்மிண்டன் பட்டியலில் இந்தியாவின் பெயரை உயர் நிலைக்கு கொண்டு சென்று பெருமைப் படச் செய்தவர் சாய்னா. கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் சற்று பின்தங்கி இருந்தாலும், தொடர் பயிற்சியின் காரணமாக உலகின் நம்பர்-1 என்ற இடத்தை பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்த ஆண்டு இவருக்கு நல்ல நிலையை மீண்டும் பெற்றுத் தரும் என்று பலரும் எதிர்நோக்கியுள்ளனர். 

ஆங்கில கட்டுரையாளர்: சோனல் மிஸ்ரா

Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share
Report an issue
Authors

Related Tags