பதிப்புகளில்

மீன் பிரியர்களுக்கு சந்தோஷ செய்தி: ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்ய தமிழக அரசு அறிவிப்பு!

YS TEAM TAMIL
25th May 2017
Add to
Shares
22
Comments
Share This
Add to
Shares
22
Comments
Share

ஆன்லைன் மூலம் மீன் விற்பனையை, சென்னை பட்டினப்பாக்கத்தில், நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார். ஆன்லைனில் பதிவு செய்த அரை மணி நேரத்தில் தரமான மீன்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய ஜெயக்குமார், 

"மீன் உணவு வகைகள் உண்பதால் இதயநோய் வராமல் தடுக்கிறது. ஆரோக்கியமான உணவான மீன் உணவுப்பொருள்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவது இன்று முதல் சென்னை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மீன்கள் மட்டுமல்ல, மீன்கள் சார்ந்த மற்ற பொருள்களை, டெலிபோன் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்,” என்றார்.
image


www.meengal.com என்ற இணையதளம் மற்றும் 044- 24956896 தொலைபேசி எண்ணில் ஆர்டர் செய்யலாம். 10 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு மென்பொருளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 5 மையங்கள் உள்ளன. சென்னை மக்களுக்கு மீன் உணவு வகைகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு ஆர்டர் செய்யமுடியும். இதற்கு போக்குவரத்துக் கட்டணமாக, 35 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டும். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் பதிவிட்டுள்ள முகவரியில் மீன்கள் டெலிவரி செய்யப்படும். இந்தத் திட்டம் விரைவில், மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்" என்றும் அமைச்சர் கூறினார்.

மீன் பிரியர்கள் இனி வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து உண்டு மகிழலாம்.

Add to
Shares
22
Comments
Share This
Add to
Shares
22
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக