பதிப்புகளில்

கார் கெராஜில் துவங்கி ரூ.5000 கோடி மதிப்பிலான கார்பன் மொபைல்ஸ் பிராண்டை நிறுவிய பிரதீப் ஜெயின்!

7th Apr 2018
Add to
Shares
453
Comments
Share This
Add to
Shares
453
Comments
Share

முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் வாழ்வில் நினைத்ததை அடையலாம் என்பதற்கு சான்றாய் திகழ்பவர் தான் கார்பன் மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பிரதீப் ஜெயின். சாதாரன குடும்பத்தில் பிறந்த இவர் படிப்புக்குப் பின் வேலை என இல்லாமல் தன் படிப்பு முடிந்தவுடன் சுயதொழில் துவங்க வேண்டும் என்று உறுதியாக நின்று ஜெயித்து காட்டியுள்ளார்.

பிரதீப் ஜெயின்

பிரதீப் ஜெயின்


பிரதீப் ஜெயின் 1991ல் டெல்லி பகத் சிங் கல்லூரியில் தன் பட்டபடிப்பை முடித்தார். படிப்பை முடித்தவுடன் அவரின் தந்தை அவரைப் போலவே பிரதீப் ஜெயினும் ஓர் அரசு உத்தியோகத்தை பெற வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் ஓர் தொழில் தொடங்க வேண்டும் என்பதே இவரது விருப்பம். தன் தந்தையின் எதிர்ப்பை மீறி வீட்டின் கேரேஜில் ஜூலை 1991ல் ஒரு அலுவலகத்தை நிறுவி தன் நிறுவனத்தை பதிவு செய்தார். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து 5 லட்சம் கடன் உதவி பெற்று பொருட்கள் விநியோகம் மட்டும் செய்ய முற்பட்டார்.

“இதை நான் துவங்க முக்கியக் காரணம் இதற்கு முதலீடு குறைவு மேலும் நஷ்டம் ஏற்பட்டாலும் அது கமிஷனுடன் போய் விடும் என்று தான். அன்று நான் சிறியதாய் தொடங்கிய ஆட்டம் இன்று 5000 கோடி வணிகமாக வளர்ந்துவிட்டது,” என்கிறார் பிரதீப் எக்கனாமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில்.

தன் குடும்பப் பெயரில் தொழில் தொடங்க வேண்டும் என்று ஜெயினா மார்க்கெடிங் என்ற பெயரிலே தன் நிறுவனத்தை பதிவு செய்தார். தன் நிறுவனத்தில் இருந்து அவர் விற்க முயன்ற முதல் பொருள் பிராண்டில்லா எலெக்ட்ரானிக் ஜூசர். அப்பொழுது சந்தை நிலவரம் பற்றியும், விற்பனை யுத்தியும் அவரிடம் இல்லை என தெரிவிக்கிறார்.

“டெல்லியில் உள்ள பெரும் கடையில் இந்த ஜூசரை விற்க சென்றேன். நான் ஜூசர் விலை 1600 ரூபாய் என சொல்ல ஒரு டசன் ஜூசர் ஆர்டர் கிடைத்தது. மறுநாள் டசன் ஜூசருக்கு 19,200 ரூபாய் கிடைக்கும் என்று சென்ற பொது வெறும் 1600 ரூபாய் தான் கிடைத்தது... ”

கடைக்காரர் டசன் ஜூசரின் விலை 1600 ரூபாய் என நினைத்து ஆர்டர் கொடுத்துள்ளார். பிரதீப் கடைக்காரர் கேட்ட விலைக்கே பொருள்களை கொடுத்துவிட்டு நஷ்டத்தை ஏற்றுக்கொண்டார். மீண்டும் நிறைய ஆர்டர்கள் கடைக்காரர் கொடுக்க உண்மையான விலையை கூறி, முதல் ஆர்டர் என்பதால் மலிவான விலையில் கொடுத்ததாக கூறியுள்ளார். அவர் சொன்ன பதில் கடைக்காரரை ஈர்க்க அவர் அடுத்த ஆர்டர்களை கொடுத்தது மட்டுமல்லாமல் ஏற்கனவே பெற்ற ஜூசர்க்கான பணத்தையும் கொடுத்துள்ளார்.

ஒரு வருடத்திற்குள் நான்கு பேரை பணியில் அமர்த்தி பல பிராண்டட் பொருள்களை விநியோகம் செய்து ஓர் ஆண்டு முடிவிற்குள் 1.25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். 1996 க்குள் ரே-பான் சன்கிளாஸ், நீர் சுத்திகரிப்பு மற்றும் பிலிப்ஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் மின்னணு பொருட்களை விற்கத் துவங்கிவிட்டார்.

“1990-களில் தான் மொபைல் ஃபோன்கள் நம் நாட்டுக்குள் பிரபலம் அடைந்தது; அப்பொழுது தான் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என யோசித்து ஏப்ரல் 1996-ல் நோக்கியா மற்றும் சாம்சங் போன்ற நிறுவங்களின் கைபேசியை பிரத்தியேகமான ஷோரூமில் விற்க துவங்கினேன்.”

இரண்டே வருடத்தில் தங்கள் விநியோகத்தை விரிவுப்படுத்தி தேசிய அளவில் விநியோகம் செய்யத் துவங்கிவிட்டார் பிரதீப். 2005-ல் இந்தியா முழுவதும் 150க்கும் மேலான குழுக்களை கொண்டு HTC, எல்ஜி மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களின் விநியோகஸ்தராக வளர்ந்தனர்.

image


தொழிநுட்பம் மற்றும் மொபைல் உலகில் அதிக நெட்வொர்கிங்கை பெற்ற பிரதீப், தானே ஓர் மொபைல் பிராண்டை உருவாக்க முயன்றார். பெங்களூரைச் சேர்ந்த யூனைடட் டெலிகாம்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து கார்பன் மொபைல்ஸ் செல்போனை அறிமுகப்படுத்தினார் பிரதீப்.

“தொடக்கத்தில் 40 கோடி ரூபாய் முதலீடு செய்து மார்ச் 2009ல் வெற்றிகரமாக கார்பன் மொபைலை அறிமுகப்படுத்தினோம். முதலில் 2,000 மற்றும் 6,000 ரூபாய்க்குள் ஐந்து கைபேசிகளை வெளியிட்டோம்; டயர் 1 மற்றும் 2 நகரங்களில் தான் எங்கள் கவனம் இருந்தது.”

ஷாங்காய், தைவான் மற்றும் கொரியாவில் தயாரிப்பு நடந்தாலும் இந்தியாவில் தான் வடிவமைப்பு மற்றும் டெஸ்டிங் நடைபெற்றது; தற்பொழுது இந்தியாவிலே தயாரிப்புகள் நடை பெறுகிறது. ஏற்கனவே சந்தையில் நல்ல பெயர் இருந்ததால் இவர்களது கைபேசிகள் நல்ல விற்பனையை கண்டது. ஒரே மாதத்தில் 20 லட்ச ஃபோன்கள் விற்றனர். அதன் பின் 250 கோடி ரூபாயை இதில் முதலீடு செய்துள்ளார் பிரதீப். 

கார்பன் மொபைல்ஸ் நல்ல வளர்ச்சியை பெற தற்பொழுது 800 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர் இந்தியாவில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தும் கார்பன் மொபைல்ஸ் தற்பொழுது இந்தியா முழுவதும் 85,000க்கும் மேலான சில்லறை வணிகர்கள் மற்றும் 900 மேலான சேவை மையங்களை கொண்டுள்ளது. தற்பொழுது ஜியோ உடன் போட்டி போடும் ஏர்டெல் உடன் இணைந்து 4ஜி போன்களை வெளியிட்டுள்ளது கார்பன் மொபைல்ஸ்.

சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து தற்பொழுது தனக்கென ஓர் பிராண்டை உருவாக்கி வெற்றி பெற்றுள்ள பிரதீப் ஜெயின் வளர்ந்து வரும் அனைத்து தொழில் முனைவர்களுக்கும் ஓர் முன் உதாரணம்!

Add to
Shares
453
Comments
Share This
Add to
Shares
453
Comments
Share
Report an issue
Authors

Related Tags