பதிப்புகளில்

ஆப்பிள் வழக்கமான ஒரு நிறுவனமானது!

11th Apr 2016
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

நியூயார்க் 5வது அவென்யூவில் இருக்கும் ஆப்பிள் ஐகானிக் ஸ்டோரில் முதன் முதலாக நுழைகிற ஒருவர் நிச்சயமாக திணறிப் போவார். குறிப்பாக அங்கிருக்கும் டிசைன்கள், ஆப்பிள் மொபைல்களின் வகைகள், மிக முக்கியமாக அங்கிருக்கும் கூட்டம். அந்த கூட்டத்தைப் பார்த்து உங்களுக்கு பிரமிப்பு ஏதும் ஏற்படாவிட்டால் தான் ஆச்சரியம். “எந்த மேக்புக் மாடலைத் தேர்ந்தெடுப்பது” என்ற கேள்வி இயல்பாகவே எழும். மேக்புக் ஏர் என்பது ஒரு நல்ல தேர்வு. ஆனால் குறைவான பிராசசர் கொண்டது, ரெட்டினா டிஸ்பிளே அற்றது. மேக்புக்கும் நல்லது தான். ஆனால் கொஞ்சம் அதிகப்படியான விலை கொண்டது. மேக்புக் ப்ரோ எப்படி? என்று கேட்கிறீர்களா. இதற்கு அவ்வளவு எளிதாக பதில் சொல்லிவிடமுடியாது. எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பார்த்தபிறகு, அடுத்து என்ன என்ற ஒரு கேள்வியை அங்கிருக்கும் உதவியாளரிடம் கேட்டால், அவர் “தெரியலியே” என்பதாக கையை விரிக்கிறார். அந்த ஒருகணம் நாம் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாத வெறுமையை உணர்கிறோம். ஆம்.ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்துவிட்டார். அவர் இனி வரப்போவதே இல்லை.

போட்டோ உதவி : விக்கிபீடியா

போட்டோ உதவி : விக்கிபீடியா


கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐபோன் எஸ்ஈ வெளியானபோதே ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாததற்கான அறிகுறி வெளிப்படையாகவே தெரியத் துவங்கியது. கடந்த 2013 செப்டம்பர் ஐபோன் 5சி வெளியானபோதுதான் ஆப்பிளின் தத்துவத்தில் முதல் உடைப்பு ஏற்பட்டதை கண்கூடாக காண முடிந்தது. ஒரு பொருளின் வடிவமைப்பு, தடங்கலற்ற வாடிக்கையாளர் அனுபவம், கற்பனை, குறிப்பாக பூரணத்துவம் இவை எல்லாவற்றிற்குமான ஒரே இடமாக ஆப்பிள் இருந்தது. அவர்கள் வெளியிட்ட ஒவ்வொரு தயாரிப்பிலும் எதிர்பாராத ஒரு அம்சம் நிச்சயம் இருக்கும். இவையெல்லாம் ஆய்வாளர்களையும், உத்தியாளர்களையும் கவருவதற்காக செய்யப்பட்டதல்ல. எல்லாமே வாடிக்கையாளர்களுக்காக செய்யப்பட்டவை. ஒரு தயாரிப்பை உருவாக்கி, அதற்கான பேக்கிங்கை வடிவமைப்பதிலிருந்து அந்த பேக் மீதான வார்த்தை வரை எல்லாவற்றிலும் அதை காண முடிந்தது.

ஒவ்வொரு தயாரிப்பிலும் ஒரு தனி அம்சத்தைக் கொண்டிருந்ததாலேயே மட்டும் ஆப்பிள் இந்த நிலையை அடைந்துவிடவில்லை. உற்பத்தியை எப்போதும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொண்டதும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். உலகின் மிகப்பெரிய பேலன்ஸ்ஷீட் கொண்ட ஒரே நிறுவனமாக அது இருந்தது. (424 பில்லியன் டாலர் மார்கெட் கேப், 37% எபிட்டா மார்ஜின்,170 பில்லியன் டாலர் ரொக்க கையிருப்பு) கட்டுப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வகைகளுமே இதற்கு காரணம். இவற்றில் எதாவது ஒன்றில் கவனம் அல்லது இரண்டிலுமே கவனம். அதுவும் ஜென் போன்ற கவனம்.

ஐபோன் 5சி வெளியானபோதே ஆப்பிளின் நம்பிக்கைகளிலிருந்து அவர்கள் விலகிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியது. ஆப்பிள் 5சியின் ஒவ்வொரு அம்சமுமே ஆப்பிள் இதுவரை செய்திருந்த அத்தனையையும் தகர்த்திருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் ஜென் தன்மையைப் பற்றி வாரப்பத்திரிக்கையில் எழுதிய ஜெஃப் யாங் அவரை, “டாவோ ஜோன்ஸ்” என்று குறிப்பிட்டிருந்தார். ஸ்டீவ் ஜாப்ஸின் வேலை மற்றும் பாணியைப் பற்றி விவரிக்கும்போது அவர் கற்றுக்கொடுத்த ஜென் தன்மையைப் பற்றி பேசியிருப்பார். ஒரே தயாரிப்பையே நீண்ட காலத்திற்கு கொடுத்து சந்தையின் எல்லா அம்சத்தையும் தக்க வைக்கவேண்டும் என்று யோசிக்கக்கூடிய ஆளாக ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்ததில்லை. ஆப்பிள் 5சி வெளியானதன் நோக்கமே வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல, சந்தையைத் திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கமே அதில் பிரதானமாக இருந்தது. சந்தையில் தனது பங்கு விலையை தக்க வைக்கவும், எபிட்டாவை பெறவுமே இதுபோன்ற வெளியீடு என்று கண்கூடாக தெரிந்தது. ஒரே தயாரிப்பையே முடிவற்ற வகையில் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய ஒரு நிறுவனமாக ஆப்பிள் உருமாற்றம் அடைந்திருந்தது. விதவிதமான ஸ்கீரீன் அளவுகள், நிறம், ஒவ்வொரு தயாரிப்புக்கும் விதவிதமான பிராசசர் வகைகள் என்று கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொன்றுக்கும் எந்தவிதமான பெரிய வேறுபாடும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வெளியான ப்ரோ லைட், எஸ்,எஸ்ஈ,சி என எதை எடுத்து பார்த்தாலும் இது நமக்கு புரியவரும்.

இவை ஒரு வகையில் விற்று தீர்ந்திருக்கலாம். ஆனால் ஆப்பிள் கடந்து வந்த பாதையில் இருந்த புதுவித கண்டுபிடிப்பு என்ற இடத்தை இவை பூர்த்திசெய்யவில்லை. கடந்த 2010ம் ஆண்டு வெளியான ஆப்பிள் ஐபாடை பார்த்தாலே பச்சையாக தெரிந்துவிடும், அது ஒரு பிங்க் நிறத்தில் இருந்த ஐபோன். அவ்வளவே. வேறு எந்த கவனிக்கத்தக்க அம்சமும் அதில் இல்லை.

ஆப்பிள் 5சி அல்லது எஸ்ஈ, ஆப்பிள் 6, 6எஸ் என எதை எடுத்துக்கொண்டாலும் அவை வேறு வடிவத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் அவை ஒரு சாதாரண ஆப்பிள்போன் என்ன வேலை செய்யுமோ அதையே தான் செய்திருக்கின்றன. இது ஆப்பிளின் தனித்துவத்திற்கே எதிரானது. அதுவும் ஒரு ஜென் வேலைப்பாடுகளைக் கற்றுக்கொடுத்த ஒருவர் வழி வந்த ஒரு நிறுவனம் அதன் எதிர்காலம் தெரியாமல், திக்கு தெரியாமல் இந்த இடத்திற்கு வந்து நிற்பது பரிதாபகரமானது.

இப்பொழுது ஆப்பிள் நிறுவனத்தில் பல பெரிய மேலாளர்கள் இருக்கலாம். அவர்கள் சந்தை ஆய்வாளர்களின் கருத்துக்களைக் கேட்கலாம். பத்திரிக்கையாளர்களின் பார்வையில் கவனம் செலுத்தலாம். புதுமையாக எதையும் கொடுக்காமல் யார் யாரிடமோ இப்படி ஆலோசனை கேட்டுக்கொண்டிருக்கலாம். இதனால் நேற்றைய ஆப்பிள் செய்த எல்லா சாதனையும் இத்தோடு முடிந்துவிட்டது. ஆப்பிள் திரும்பவும் 1985ல் என்ன நிலையில் இருந்ததோ அதே நிலைக்கே சென்றுவிட்டது. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ், ஐயோ அவர் தான் இப்போது இல்லையே.

ரிப் ஸ்டீவ் ஜாப்ஸ். ரிப் ஆப்பிள்

(குறிப்பு : இந்த பத்தியில் இருக்கும் கருத்து முழுக்க முழுக்க பத்தியை எழுதிய எழுத்தாளருடையது. யுவர்ஸ்டோரிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை)

ஆங்கிலத்தில் : சைலேஷ் விக்ரம் சிங் | தமிழில் : ஸ்வரா வைத்தீ

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக