ஜியோ விளைவு: இணையத்தில் உள்ளூர் மொழி சந்தைக்கு பலத்த வரவேற்பு...

  ’புதிய இணைய பயனாளி’ என்பது தான் கடந்த சில மாதங்களாக ஸ்டார்ட் அப்கள் அதிகம் உற்று நோக்கும் சந்தையாக உள்ளது. அடுத்த பில்லியன் மற்றும் பாரத் ஆகிய வார்த்தைகளுடன் சேர்த்து இது உச்சரிக்கப்படுகிறது.  

  31st Oct 2018
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  இ-காமர்ஸ் முதல் இணைய கல்வி நிறுவனங்கள் வரை, செய்தி திரட்டி சேவைகள் முதல் தகவல் மேடைகள் வரை எல்லோரும், அடுத்த அலை வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து உற்சாகமடைந்துள்ளனர். முதல் முறையாக இணையத்தை பயன்படுத்த உள்ள இந்தியர்கள் தான் இந்த புதிய பயனாளிகள். இவர்கள் ஆங்கிலம் பேசுபவர்கள் அல்ல.

  படம். ஆதித்ய ரானடே 

  படம். ஆதித்ய ரானடே 


  ஒரு நாள் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஸ்மார்ட்போனை பெருமையுடன் காண்பித்து, அபிமான நட்சத்திரத்தின் வீடியோவும் காண்பித்தார். 

  “பெங்களூர் போக்குவரத்தில், ஒரே இடத்தில் இருப்பதைவிட, இதில் படிப்பதும், வீடியோ பார்ப்பதும் எளிதானது,” என்றார்.

  அப்போது தான் ஸ்டார்ட் அப் மாநாட்டில் கேட்ட விஷயம் நினைவில் வந்தது. 

  “இந்த வாடிக்கையாளர்கள் ஜியோ போன்ற தொகுப்பை- உள்ளடக்கம், பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங்கிற்காக வாங்குவார்கள். இவர்கள் நகர்புற வாடிக்கையாளர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். அடுத்த 500 மில்லியன் வாடிக்கையாளர்கள் இவர்களே.”

  இதை ஜியோ விளைவு என அழைக்கலாம். ஆனால் இந்தியர்கள் இணையத்தை மிகவும் நேசிக்கின்றனர். இவர்களின் இணைய ஆர்வம், இந்தியாவின் இணைய பயன்பாட்டை ஜியோ யுகத்திற்கு முன், பின் என பேச வைத்துள்ளது. ஜியோ இதை எப்படி செய்தது என்றால், இந்தியர்கள் மிகவும் விரும்பும் பரிசுகளுடன் கூடிய குறைந்த விலையிலான சேவை அளித்தது.

  கடந்த மாதம் வெளியான டிராய் அறிக்கை, ஜூன் 30 ல் மொத்த இணைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 512.26 மில்லியனாக இருப்பதாக தெரிவிக்கிறது. ஜியோ அறிமுகத்திற்கு முன், 2016ல் இது 426 மில்லியனாக இருந்தது. இவர்களில் 95.78 சதவீதம் பேர் மொபைல் மூலம் இணையத்தை அணுகுகின்றனர்.

  இந்த ஆண்டு ஜூன் மாத கணக்குப்படி, 215.25 மில்லியன் நுகர்வோரோடு இணைய சந்தாதாரர்களில் 42.02 சதவீத பங்கை ஜியோ பெற்றிருந்தது. இங்கு தான் பாரத்திற்கான திறவுகோள் இருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் ஜியோ சந்ததாரர் பரப்பு 400 மில்லியனை கடக்கும் என அறிக்கை தெரிவிக்கிறது. ஜியோ இணைய சேவையோடு, தனது சொந்த ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. ஜூன் வரை 25 மில்லியன் விற்றிருக்கின்றன.

  கடந்த ஓராண்டில், இணைய இணைப்பு கட்டணம் குறைந்து, டேட்டா வேகமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்திய மொழிகளில் உள்ளடக்கம் அதிகரித்துள்ளது. இந்த புதிய வாடிக்கையாளர்கள் மீது ஸ்டார்ட் அப்கள் மட்டும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. கூகுள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் மொழி உள்ளடக்கம் மற்றும் குரல்வழி சேவைகள் மூலம் புதிய இணைய வாடிக்கையாளர்களை சென்றடைய முயற்சிக்கின்றன.

  இதற்கான காரணம் எளிமையானது. இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும். இருப்பினும், ஃபிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் போன்றவை ஆங்கிலத்தில் மட்டும் இருக்கின்றன.

  ஜியோ விளைவு

  முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ, 2015 டிசம்பரில் செல்போன் மற்றும் இணைய சேவையை அறிமுகம் செய்து, 2016 செப்டம்பரில் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்தது.

  2015ல் ஜியோ அறிமுகமாக இருந்த நிலையில், இன்னும் எட்டப்படாத சந்தைக்கு சேவை அளிப்பது பற்றி பேசப்பட்டு வந்தது. ஒரு சில நிறுவனங்கள் உள்ளூர் மொழிகளில் இணையதளங்கள் அளித்தாலும், அழுத்தம் போதுமானதாக இல்லை. ஜியோ வருகைக்குப் பிறகு, 2021 ம் ஆண்டு வாக்கில் உள்ளூர் மொழிகளில் 536 மில்லியன் இணைய பயனாளிகள் இருப்பார்கள் என கூகுள் தெரிவிக்கிறது.

  ஜியோ அறிமுகமான போது அதன் சேவை எல்லோருக்கும் இலவசமாக இருந்தது. அன்லிமிடட் டேட்டார், இலவச அழைப்புகள், வீடியோ, வைபை மற்றும் ஜியோ செயலிகளை இது உள்ளடக்கியிருந்தது. டேட்டா கட்டணம் ரூ.19 முதல் துவங்கியது. மாத வாடகை ரூ.149 வரை குறைவாக இருந்தது. ஒப்பீட்டளவில் ஏர்டெல் அப்போது 2 ஜிபி டேட்டாவுக்கு ரூ.259 பிரிபைடு பேக் கட்டணம் வசூலித்தது.

  “ஜியோ அறிமுகமான போது, டேட்டா மற்றும் திட்டம் எங்கே கிடைக்கும் என தேடியது நினைவில் உள்ளது. வேறு நகரில் வசிக்கும் என் மகன் மொபைல் மூலம் மேசேஜிங், வாட்ஸ் அப் பயன்படுத்துவதாக கூறுவான். அவனுடன் நான் வாட்ஸ் அப்பில் தொடர்ப்ய் கொள்ள விரும்பினேன்,”

  என்கிறார் என் வீட்டில் பணிபுரியும் பெண்மணி. ரிலையன்ஸ் ஜியோ சாதகமான நிலையுடன் சந்தையில் நுழைந்தது. அதனிடம் 2.7 மில்லியன் கி.மீ நீள கண்ணாடி இழை கேபிள் இருந்தது. பத்தாண்டுகளுக்கு மேல் சந்தையில் இருக்கும் ஏர்டெல்லிடம் 2.1 மில்லியன் கி.மீ அளவு தான் இருந்தது. ரிலையன்ஸ் 2013 முதல் உள்கட்டமைப்பை உருவாக்கத்துவங்கியது.

  “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாம் தொலைத்தொடர்பு புரட்சியை எதிர்கொண்டிருக்கிறோம். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மொபைல் டேட்டாவை முன் கொண்டு செல்ல வழி செய்கின்றனர். இந்த இலவச டேட்டா, புதிய இணைய பயனாளிகளுக்கான பரந்த சந்தையை திறந்துவிட்டுள்ளது,”

  என்கிறார் இந்திய மொழிகளில் பயனாளிகளுக்கு இடையிலான உள்ளட்டகத்தை உருவாக்க உதவும் வோகல் இணை நிறுவனர் மயங்க் பித்வத்கா. இத்துடன் இது நின்றுவிடவில்லை. செய்திகள் உண்மை எனில், வாட்ஸ் அப் நிறுவனம் ஜியோபோனுக்காக புதிய செயலி வடிவத்தை உருவாக்கியுள்ளது.

  என் ஆட்டோ டிரைவர் இதில் ஈடுபாடு கொண்டிருக்கிறார். “பல வாடிக்கையாளர்கள் இணையம் பயன்படுத்துவதை, மேசேஜ்களை அனுப்புவதை படிப்பதை பார்த்திருக்கிறேன். இன்று நானும் பயன்படுத்துகிறேன். இதன் ஈர்ப்பு புரிகிறது,” என்கிறார். 

  இந்த விழாக்காலத்தில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வீர்களால் எனக்கேட்டால் செய்யலாம் என்கிறார். “ஒரு நாள் என் நண்பர் துணிகள் வாங்க சில தளங்களை காண்பிடித்தார். போனும் கூட வாங்கலாம்,” என்கிறார்.

  “நாம் பெரிய சந்தை என்பதை ஜியோ விளைவு உணர்த்தியிருக்கிறது. முன்பு இருந்தது போல உள்ளூர் டிஜிட்டல்மயமாக்கல் தொலைதூர கனவு அல்ல. நாம் நினைத்ததைவிட வேகமாக இது நிகழ்கிறது,”

  என்கிறார் பிரைம் வென்சர்ஸ் பாட்னர்ஸ் நிர்வாக பாட்னர் சஞ்சய் சாமி.

  உள்ளடக்கம் முதல் படி தான்

  “இந்தியா போன்ற சந்தையில் நுழைய முதல் படி மொழி தான். அதை நிறைவேற்றிய பிறகு, 700 முதல் 800 மில்லியன் பயனாளிகள் இருப்பர். இது பெரிய அளவிலான பரப்பு. பணம் வசூப்பது சவாலானது என்றாலும், யாரும் தவறவிட விரும்பாத தங்கச்சுரங்கமாக இது இருக்கிறது,” என்கிறார் ஆலோசகர் ஒருவர்.

  தகவல்களை தான் பயனாளிகள் முதலில் இணையத்தை நாடி வர வைக்கிறது என்றும் மற்ற தேவைகள் பின் தொடரும் என்று சொல்கிறார் மயங்க். இந்த வாய்ப்பு தன் சீன நிறுவனங்களுக்கு இந்திய சந்தை மீது ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று, யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ ஷரத்தா சர்மா தனது கட்டுரை ஒன்றில் விவரித்துள்ளார். அதோடு சீன இணைய சந்தை அதன் வரம்பை எட்டிக்கொண்டிருக்கிறது என்பதையும் மறந்துவிட வேண்டாம். எனவே புதிய சந்தையை நாடுவது இயல்பானது.

  அமேசான் மற்றும் கூகுள், ஏற்கனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களின் வாடிக்கையாளர்களில் கவனம் செலுத்தினால் போதாது, அந்த பகுதிகளின் வர்த்தகர்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அங்கீகரித்துள்ளன.

  இந்த நிறுவனங்களின் விழாக்கால விற்பனை இதற்கு சான்றாக அமைகின்றன. ரெட்சீர் கன்சல்டன்சி அறிக்கை ஒன்று விழாக்கால ஐந்து நாள் விற்பனையில் இடெயிலிங் துறை 2.3 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கிறது. அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் பெரும்பகுதி சிறிய நகரங்களில் இருந்து வந்துள்ளது.

  இந்திய சாதகம்

  “இந்தியா மிகவும் கடினமான சந்தையாக இருக்கலாம் மற்றும் வாடிக்கையாளர்கள் பல்வேறு தரப்பினராக இருந்தாலும், வாட்ஸ் அப் மற்றும் கூகுள் இங்கு வலுவான சந்தை கொண்டுள்ளன,” என்கிறார் ஆலோசகர் ஒருவர்.

  மேலும் நம்முடைய கலாச்சார் வேறுபாடுகள் காரணமாக மீம்கள் மற்றும் வீடியோக்கள் கலாச்சாரம் சார்ந்து அமைய வேண்டும். சீன சந்தையைவிட இவை மிகவும் வேறுபட்டவை. இந்தியாவின் ஆங்கிலம் பேசும் 220 மில்லியன் மக்களை விட 450 மில்லியன் இந்திய பேசும் மக்கள் இரண்டு மடங்காக இருக்கின்றனர்.

  “புதிதாக வளரும் வாடிக்கையாளர் பரப்பு காரணமாக மற்றும் நகர்புற இந்தியாவில் இது ஏற்கனவே திறந்திருப்பதாலும், கிராமப்புற சந்தை அடுத்த இயல்பான படியாகும்,” என்கிறார் ஆலோசர். நல்ல உள்ளடக்கம் மற்றும் ஷாப்பிங்கை அணுகுவது இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு வாடிக்களையாளர்களுக்கு சாத்தியம் என்பதை ஜியோ உணர்த்தியுள்ளது.

  டெய்லிஹண்ட், வோகல் மற்றும் ஷேர்சேட் போன்ற இந்திய ஸ்டார்ட் அப்கள் புதிய பயனாளிகளுக்கான உள்ளூர் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் உள்ளடக்கத்தை உருவாக்குவது சவாலானது. பலரும் பயனாளிகள் உள்ளடக்க மாதிரியை பயன்படுத்தி வருகின்றனர்.

  வோகல், சக பயனாளிகளுடம் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கும் பயனர் உள்ளடக்க மேடையாக இருக்கிறது. இந்தியாவில் ஆங்கிலம் பேசாத பயனாளிகள் இப்போது, நண்பர்கள் அல்லது உறவினர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

  “ஆங்கிலம் பேசும் இந்தியர்களைவிட ஆங்கிலம் பேசாத இந்தியர்கள் இணையத்தில் வேறுவிதமாக நடந்து கொள்கின்றனர். நாம் வாட்ஸ் அப்பை தகவல் தொடர்புக்கு பயன்படுத்துகிறோம். ஆங்கிலம் பேசாதவர்களுக்கு தகவல் தொடர்பு குரல் வழி சேவையாகும், வாட்ஸ் அப் பகிர்வுக்காகும். அவர்கள் உரையாடுவதில்லை. பலருக்கு ஃபேஸ்புக்கில் பக்கம் இருந்தாலும் அங்கு வெளிப்படுத்துவதில்லை,” என்கிறார் வோகல் இணை நிறுவனர் அப்ரமாயே ராதாகிருஷ்ணன்.

  வோகலில் பயனாளிகள் கேள்வி கேட்கலாம். அதற்கு மற்ற பயனாளிகள் பதில் அளிப்பார்கள். குரல் மற்றும் வரி வடிவ வசதி இருக்கிறது. கூகுல் குரல் வழி வசதியும் இருக்கிறது, பதில்களை அனாமதேயமாகவும அளிக்கலாம்.

  “ஆங்கில பயனாளிகள் வரி வடிவத்திற்கு பழகியுள்ளனர். ஆனால் ஆங்கில பேசாதவர்கள் அதற்கு பழகவில்லை. அவர்களுக்கு பார்வேர்டு செய்வது மற்றும் குரல் செய்தி ஏற்றதாக இருக்கிறது. புதிய சேவை இதற்கு ஏற்ப இருக்க வேண்டும். குரல் மற்றும் ஆடியோ பகிர்வு மூலம் எல்லாம் அமைய வேண்டும்,” என்கிறார் மயங்க்.

  ஆங்கிலம் மற்றும் குரலில் இருந்து வரிகளுக்கான அம்சத்தில் தேடியந்திரத்திற்கு ஏற்ற அமைப்பில் இருந்து இந்திக்கான அமைப்பு வேறுபட்டது. 

   “ஹிங்கிலிஷுக்கு மாறினால் அல்லது வேகமாக பேசினால் தட்டச்சு சரியாக இருக்காது,” என்கிறார் அப்ரேமயா.

  இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், சந்தை இதை எப்படி ஏற்கிறது என்பது சுவாரஸ்யமானதாக இருக்கும். “இது சீரானதாக, நேரம் கொண்டதாக, பொறுமையானதாக இருக்க வேண்டும் என்கிறார் ஆலோசகர். இந்த மூன்றும் இருப்பவர் தான் வெற்றி பெற முடியும்.

  ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்; சைபர்சிம்மன்  

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  Our Partner Events

  Hustle across India