பதிப்புகளில்

யுவர்ஸ்டோரி டெக்ஸ்பார்க்ஸ் ‘டெக்30’- இந்தியாவின் சிறந்த 30 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்ஸ்’ இதோ!

YS TEAM TAMIL
2nd Oct 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

இந்த ஆண்டின் யுவர்ஸ்டோரி ‘டெக்30’க்கு 3000 விண்ணப்பங்கள் வந்தது. இதில் இருந்து சிறந்த 30 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த 6 வருடங்களில் டெக்30’இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 180 நிறுவனங்களில் 97, முதலீடுகள் பெற்று பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இவை சுமார் 630மில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து இன்று பிரபல நிறுவனங்களாக வலம்வந்து கொண்டிருக்கிறது. 

image


இந்த ஆண்டின் டெக்30 பட்டியல் இதோ...

ACPAD : பொறியாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் சேர்ந்து குழுவாக நிறுவிய நிறுவனம். ACPAD என்பது ஒரு மெல்லிய வயர்லெஸ் டிஜிட்டல் இசைக்கருவி இடைமுகம் ஆகும். இதை எல்லாவித கிடார் உடன் இணைத்து எலக்ட்ரானிக் இசையை வரவழிக்கமுடியும். இது செலவு குறைவான முறை மற்றும் உபயோகப்படுத்த சுலபமானது. 

Algo Engines : இது சக்தி உற்பத்தி துறைக்கு பயன்படக்கூடிய ஒன்று. இயந்திரத்தின் செயற்பாட்டு அறிவு அதாவது கண்காணிப்பு, செயல்பாடு, அனாலிடிக்ஸ், ஆற்றலின் கணிப்பு மற்றும் காற்று அளவில் தோல்வியை கணித்தல், ஆகியவற்றை சோலார் மற்றும் ஹைட்ரோ மின்சார உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு செய்து கொடுக்கும். 2014இல் தனது முதல் வாடிக்கையாளரை பெற்ற இந்நிறுவனம், 2500மெகா வாட் அளவிற்கு காற்று, சோலார் உற்பத்தி செய்யும் பல தொழிற்சாலைகளுக்கு சேவைகள் அளித்து வருகிறது. இவை இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் இயங்கிவருகிறது. 

AntCrawl Technologies Pvt. Ltd : ProgressHive எனும் வெப் அப்ளிக்கேஷனில் அடுத்தக்கட்ட தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனம் இது. SaaS அடிப்படைக்கொண்டு இயங்கும் இந்த தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சி பெற புதியவகை ஆப்’களை தயாரித்து, வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும். பீட்டா வடிவில் உள்ள இது விரைவில் சந்தைக்கு வந்து கலக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

AutoVRse : மெய்நிகர் உலக சாப்ட்வேர் ஆகிய இது, வாகன உற்பத்தி செய்யும் ஆட்டோமேடிவ் தொழிற்சாலைகளுக்கு டிசைன் மற்றும் முக்கிய வடிவங்களை தயாரித்து ஷோரூமில் வைக்க உதவும். 3டி வடிவில் டிசைன்களை மெய்நிகர் உலகில் வாடிக்கையாளர்களுக்கு காண்பிப்பதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை பெறவும் புதுவகை கார்களை பல வண்ணங்களில் காணவும் உதவும். 

Azooka : Azooka Life Sciences, இந்தியாவில் ப்ளோரசண்ட் டை சிறப்பு சேவையை அளிக்கும் ஒரே நிறுவனம் இது. நச்சுத்தன்மை இல்லாத தீங்கு விளைவிக்காத வகையில் பாரம்பர்ய வழிப்படி உணவு வகைகளுக்கு சேர்க்கை அளிக்கிறது Azooka’s tinto rang. உணவில் அடிப்படையை மாற்றாமல் இதை செயல்படுவதால் சிறப்பாக கருதப்படுகிறது. 

BendFlex : BendFlex Research and Development Pvt. Ltd கருவிகளை புதிய வடிவில் டிசைன் செய்ய உதவும் நிறுவனமாகும். இது மருத்துவ பரிசோதனையில் பயோலாஜிக்கல் செல்களில் தனிப்பட்ட முறையில் செயல்பட வகை செய்கிறது. ஏற்கனவே இரண்டு தயாரிப்பை தந்துள்ள இந்நிறுவனம் தற்போது ஐவிஎஃப் முறையில் வரலாற்றை படைக்க கருவியை தயாரித்து வருகிறது. 

Citizengage : இது ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். கழிவு மேலாண்மையில் தொடக்கம் முதல் இறுதிவரை சேவைகள் அளிக்கும் தளம். பிசினஸ் வேஸ்ட் அதாவது தொழிற்கழிவுகளை சேகரித்து, தேவையான நபர்களுக்கு அதை கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இதனால் சுத்தமான சூழ்நிலை உருவாகி மறுசுழற்சிக்கு வழி செய்யப்படுகிறது. 

Cloudrino : வாடிக்கையாளர்களின் சர்வர் தேவையை பார்த்துக்கொள்ளும் நிறுவனம் இது. ஒரு நிறுவனத்தின் தகவல்களை க்ளவுட் அதாவது மேகக்கணினி மூலம் சேமிக்க உதவி செய்கிறது. மேலும் பல செயல்பாட்டு சேவைகளையும் அளிக்கிறது. 

Conexstra : இதன் INDONIS என்ற தளம், மொபைல், வெப், க்ளவுட் மற்றும் பிக் டேட்டா தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க உதவுகிறது. பணிபுரியும் இடத்தை புத்தாக்கத்துடன் உருவாக்கி பலருக்கு பயனுள்ளதாக ஆக்குகிறது. ஒரு நிறுவனத்தின் எல்லா ஊழியர்களையும் ஒரே தளத்தில் இணைத்து அறிவை பகிர உதவும். 

Crofarm : பண்ணை முதல் தொழில் வரை என்ற அடிப்படையில் இயங்கும் நிறுவனம் இது. தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு தொழிலை விருதிப்படுத்தவும், அவர்களின் விளைச்சளை சிறந்த முறையில் சந்தைப்படுத்தவும் உதவுகிறது. சிறந்த விலையில் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை பெற்று தர உதவும் தளம். 

Glydel : இந்தியாவில் வாடகை கார் பயணத்தை இனிதாக மாற்ற உதவும் தளம். வாடிக்கையாளர் மற்றும் வாடகை கார் அளிக்கும் நிறுவனம் ஆகிய இருவருக்கும் பயனுள்ள வகையில் சேவையை வழங்கும் தளம் இது. கேப்களில் ஆப்பரேடிங் சிஸ்டம்ஸ் கொண்டு தொழில்நுட்பத்தை உருவாக்கி, கேப் நிறுவனங்கள் லாபத்துடன் இயங்க, உள்ளூர் மற்றும் வெலியூர் பயணத்தை அதிகரிக்க உதவுகிறது. 

Hansel.io : மொபைல் ஆப் தயாரிப்பாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்கும் நிறுவனம் இது. பயனர்கள் செயலியை அப்டேட் செய்யாமலே கூடுதல் சேவைகளை பெற மொபைல் டெவலப்பர்களுக்கு உதவிவருகிறது. மொபைல் டெவலப்மெண்டில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி டெவலப்பர்சுகளுக்கு பயன் அளிக்கிறது. 

Hasura : தற்போதுள்ள நடைமுறைகளின் அடிப்படையில், மொபைல் அப்ளிகேஷன் மற்றும் வெப் டெவலர்பர்சுகள் வேகமாக அதை கட்டமைக்க உதவிபுரியும் தளம் இது. பேக் எண்ட் மற்றும் சாப்ட்வேர் பில்டிங்கின் செயல்பாடுகளை வளர்ச்சியுள்ளதாக்க நிறுவனங்களுக்கு உதவும்.  

Horntell : ப்ராண்டுகள், மொபைல் ஆப்’களின் மூலம் தங்களைப்பற்றிய நோட்டிபிகேஷன் அனுப்பும் நிறுவனம். கார்ட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த சேவை மூலம் சிறந்த உள்ளடக்கத்தை பெற்று ஆப்களின் வழியே அனுப்பமுடியும். 

HyperTrack : இடத்தை ட்ராக் செய்ய உதவும் சேவை அளிக்கு நிறுவனம். இட ட்ராக்கிங் மற்றும் இதர ட்ராக்கிங் சேவைகள் புரியும் டெவலப்பர்சுகளுக்கு உதவும் நிறுவனம் இது. 

Indian TTS : பிராந்திய மொழிகளில் டெக்ஸ்ட் டூ ஸ்பீச் வசதியை அளிக்கும் நிறுவனம் இது. இதில் ஹிந்தி மற்றும் ஆங்கில டெக்ஸ்ட் டூ ஸ்பீச் வசதியுடன் கூடிய ஐவிஆர் மென்பொருள் உள்ளதால் எந்தவகை இயந்திரத்துடன் தொடர்புகொள்ள வழி செய்கிறது. 

InfiSecure : இது ஒரு ரோபஸ்ட் வெப் செக்யூரிட்டி தளம் ஆகும். ஆன்லைனில் நிலவும் அச்சுறுத்தல்களை தடுக்க உதவுகிறது. ஆன்லைனில் தொழில் புரிவோருக்கு தங்களின் சேவையை தடையின்றி எடுத்துச்செல்ல உதவும். இவர்களின் சேவைகளில், வெப் செக்யூரிட்டி, பாட் பாதுகாப்பு மற்றும் போலி கணக்குகள் மற்றும் அச்சுறுத்தல்களை தடுப்பது என்று அனைத்தும் அடங்கும். 

Inventrom : இது இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் என்று சொல்லப்படும் ஹார்ட்வேர் மற்றும் க்ளவுட், இரண்டையும் கொண்டு இயங்கும் நிறுவனங்களின் தொழிலை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல உதவும் நிறுவனம். குறைந்த விலையில் சிறந்த சேவைகளை அளிக்கும் விதத்தில் இது உள்ளது. 

KrypC : இது ஒரு இடைத்தரகராக செயல்படும் நிறுவனம் ஆகும். மிடிள்வேர் தளமான இது விரைவில் KrypCore என்ற இடையில் செயல்படும் சேவையை அறிமுகப்படுத்தி, ப்ளாக்செயினில் உள்ள இணைப்பை பலப்படுத்த உதவப்போகிறது. 

Leado : இந்த நிறுவனம் சிறு-நடுநிலை நிறுவனங்கள் தங்களின் தொழிலை வாடிக்கையாளர்கள் அடிப்படையில் இணைத்து வளர்ச்சியின் பாதையில் இட்டு செல்ல உதவுகிறது. குறைந்த செலவில் புதிய வாடிக்கையாளர்களை பெறவும், அவர்களை நிரந்திர வாடிக்கையாளர்கள் ஆக்கவும் உதவி செய்யும். 

Lucep : 5 நிமிடங்களில் வாடிக்கையாளரை பெற்றுத்தர உதவும் நிறுவனம். ஆன்லைனில் வாடிக்கையாளர்களை பெற்றுத்தருவதோடு, புதிய வாடிக்கையாளர்களையும் அடையாளம் காண பிற நிறுவனங்களுக்கு உதவும் சேவைகள் அளிக்கும். 

Crediwatch Information Analytics Pvt. Ltd. (previously Minoty) : ரிஸ்க் அனாலிசிஸ் பிரிவில் தகவல்களை அளிக்க உதவும் தளம் இது. ஒரு நிறுவனத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும், தகவல்களையும் சேகரித்து தேவைப்படுவோருக்கு அளிக்கும் சேவையை வழங்கும். 25000 இடங்களில் இருந்து தங்களால் தகவல்களை சேகரிக்க முடியும் என்று இவர்கள் சொல்கின்றனர். 

MphRx : இது ஒரு உடல்நல ஆரோக்கிய தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். நியுயார்க்கில் இருந்து இயங்கும் இந்நிறுவனம், தங்களது குழுவை டெல்லியிலும் கொண்டுள்ளது. உடல்நலத்துறையில் இயங்கும் நிறுவனங்களின் தொழிலில் வளர்ச்சிக்காக சேவைகளை புரிகிறது. உடல்நலம் சம்மந்தமான டேட்டாக்களையும் வைத்துக்கொள்ள உதவும். 

Navstik Autonomous Systems Pvt. Ltd. : வர்த்தகத்திற்கான ட்ரோன்களை தயாரிக்கும் நிறுவனம் இது. விவசாயம், தொழிற்சாலை கண்காணிப்பு, சர்வேஸ், அவசரநிலை காலங்கள் போன்ற தேவைகளுக்கு ஏற்ற ட்ரோன்களை இவர்கள் உருவாக்குகின்றனர். 12 நாடுகளில் இவர்களது சேவைகள் உள்ளது. 

Ongrid : HandyOnline Solutions Pvt. Ltd. நிறுவனத்தின் தயாரிப்பான இது. ஆதார் அட்டை எண் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப தகவல்களை ஒன்றிணைத்து சேவைகள் அளிக்கிறது. இது செலவு மற்றும் நேரத்தை சேமிக்கிறது. அடையாளம் காணும் நேரங்களில், வேண்டிய நிறுவனங்களுக்கு ஒருவது பின்னணி விவரங்களை சரிபார்த்து தரும் பணியையும் செய்கிறது. 

Oriano Clean Energy Pvt. Ltd. : சுத்தமான தொழில்நுட்ப சோலார் தீர்வுகள் அளிக்கும் நிறுவனம் இது. நச்சுத்தன்மை உடைய கிரீன்ஹவுஸ் வாயுவை தடுத்து சோலார் எனர்ஜி உற்பத்தியை அதிகரிக்க இது உதவுகிறது. 

Orvito Technologies Pvt. Ltd. : வயர்லெஸ் ஸ்மார்ட் ஸ்விட்ச் பானல்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் நிறுவனம் இது. விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமராக்களை வயர்லெஸ் முறையில் இயக்க ஸ்விட்சுகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் இது ஈடுபட்டுள்ளது. வீடுகள், நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் இவர்களின் சேவையை பெறமுடியும். 

Planys Technologies : இது ஐஐடி மெட்ராஸ் அடைக்காகும் மையத்தில் உருவான ஒரு நிறுவனம். கடல், எண்ணை மற்றும் கேஸ், கட்டுமானப்பணி, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பாதுகாப்பு துறை ஆகியோருக்கு ரோபோட்டிக் தீர்வுகளை இது வழங்குகிறது. 

Realbox Data Analytics : ஆஃப்லைன் தொழில் புரிவோரின் வளர்ச்சிக்கு உதவும் நிறுவனம் இது. ஆபத்துக்களை குறைத்து வருவாயை அதிகரிக்க பிசினஸ் இண்டிலிஜென்ஸ் மற்றும் தேவையான அனாலிசிஸ் டூல்களை உபயோகித்து நிறுவனங்களுக்கு உதவி புரியும். 

Soul Vision Creations Pvt. Ltd. : பெரும்பாலானோர் ஆன்லைனில் ஆடைகளை உடுத்திப்பார்த்து வாங்க முடியாததால், ஆன்லைனில் தேடி ஆஃப்லைனில் ஆடைகளை பழக்கத்தை கொண்டுள்ளனர். இதை களைய, இவர்களின் My Looks ஆப் மூலம், வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் விருப்பத்திற்கேற்ற ப்ராண்ட்களை வீட்டிற்கே அனுப்பி போட்டுபார்த்துவிட்டு வாங்கவைக்க உதவுகிறது. 

கட்டுரை : யுவர்ஸ்டோரி குழு


Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக