பதிப்புகளில்

விண்ணில் நடந்த சுகப்பிரசவம்: பெண்ணிற்கு உதவிய இரு மருத்துவர்கள்!

YS TEAM TAMIL
8th Feb 2018
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி இந்திய-அமெரிக்க மருத்துவரான சிஜி ஹேமல், பாரீஸ் பகுதியிலிருந்து நியூயார்க் நோக்கி சென்றுகொண்டிருந்த சர்வதேச விமானத்தில் கர்ப்பமான ஒரு பெண் ஆரோக்கியமான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்க உதவினார். 

image


டோயின் ஓகண்டிப் (Toyin Ogundipe) 41 வயதான வங்கியாளர். அவர் விமானத்தில் சென்று கொண்டிருந்தார். பிரசவத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிஜி; க்ளீவ்லாந்து க்ளினிக்கின் க்ளிக்மேன் யூராலஜிக்கல் மற்றும் கிட்னி இன்ஸ்டிட்யூட்டில் சிறுநீரகப் பிரிவில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். இவரும் இந்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். இவர் உடனே உதவிக்கு வந்தார்.

27 வயதான சிஜி புதுடெல்லியில் அவரது நண்பரின் திருமணத்திற்குச் சென்றுவிட்டு இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பிக் கொண்டிருந்தார். நாள் முழுவதும் பயணித்த அசதியால் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த அவசர சிகிச்சையில் ஈடுபட்டார்.

ஸ்டெஃபானி ஆர்டோலன் என்கிற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவரின் உதவியுடன் சிஜி சக பயணிக்கு உதவ தீர்மானித்தார். அவர் உடம்பு முழுவதும் போர்வையால் மூடப்பட்டிருந்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதை அவர் முதலில் உணரவில்லை. என்டிடிவி-க்கு அவர் தெரிவிக்கையில்,

”முதலில் நான் சிறுநீரக கற்கள்தான் வலிக்குக் காரணமாக இருக்கும் என நினைத்தேன். அவர் 39 வாரம் கர்ப்பமாக இருப்பது பின்னரே எனக்குத் தெரியவந்தது.”

விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்ததால் பிரசவம் பார்ப்பதற்காக விமானத்தை தரையிரக்குவது சாத்தியமில்லாமல் போனது. எனவே விமானத்திலேயே பிரசவம் பார்ப்பதுதான் சிறந்த வழி என்பதை உணர்ந்த இரண்டு மருத்துவர்களும் உடனடியாக செயல்பட்டு 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவினர்.

’தி இண்டிபெண்டெண்ட்’-க்கு சிஜி தெரிவிக்கையில்,

அவர் குழந்தையை வெளியே தள்ளி அழுத்தத்தை தருவதற்கு 10 நிமிடங்களே இருந்தது. எனவே குழந்தை மருத்துவரும் நானும் அவருக்கு ஆறுதலளித்து உடலின் முக்கிய இயக்கங்களை கண்காணிக்கத் துவங்கினோம். இப்படிப்பட்ட அவசரச் சூழலில் படபடப்பாகாமல் அமைதியாக இருக்கவும் தெளிவாக செயல்படவும் எங்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரமானது. அவர் குழந்தையை வெளியே அழுத்தித் தள்ள இரண்டு நிமிடங்களே இருந்த நிலையில் உடனே பிரவசம் ஆகப்போகிறது என்பதை உணர்ந்தோம். அந்தப் பெண்மணி சிறிதும் கவலைப்படாமல் மருத்துவர்கள் மீது நம்பிக்கை வைத்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”மருத்துவமனையின் பிரசவ அறையில் நான் இருந்திருந்தால் ஒரு மருத்துவரோ அல்லது பிரசவத்திற்கு உதவும் பணிப்பெண்ணோ என்னவெல்லாம் செய்திருப்பார்களோ அத்தனையும் அவர்கள் செய்தார்கள்,”

என்றார் நிம்மதி கலந்து மகிழ்ச்சியோடு.  

கட்டுரை : Think Change India

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக