பதிப்புகளில்

செல்போன் அழைப்பு மற்றும் செல்ஃபி எடுப்பதால் ஏற்படும் விபத்துகளில் இருந்து வாகன ஓட்டிகளை காக்கும் ஆப்!

வாகனம் ஓட்டுபவர்களுக்கு உதவும் மொபைல் செயலியான Kruzr 10,000 பதிவிறக்கங்களை இதுவரை பெற்றுள்ளது.

YS TEAM TAMIL
11th Sep 2017
Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share

கடந்த எட்டு மாதங்களில் செல்ஃபி எடுக்கும்போது நேர்ந்த உயிரிழப்புகள் அதிகமாகி இருப்பதாக சாலைப் போக்குவரத்துத் துறையின் மத்திய அமைச்சரான நிதின் கட்காரி குறிப்பிட்டார். இதில் 50 சதவீத உயிரிழப்புகள் இந்தியாவில் ஏற்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

வாகனங்கள் வைத்திருக்கும் நாம் அனைவரும் ஸ்மார்ஃபோன் வைத்திருக்கிறோம் என்பது உண்மை. கடந்த வருடம் மட்டும் 170 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கார்ட்னர் மதிப்பிடுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 250 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்கள் முக்கிய நகரங்களில் விற்பனையாகிறது. கடந்த ஏழு வருடங்களில் இந்தியாவில் 14 மில்லியன் கார்களும் கிட்டத்தட்ட 100 மில்லியன் இரு சக்கர வாகனங்களும் விற்பனையாகியுள்ளதாக SIAM தெரிவிக்கிறது. இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?

kruzr குழு

kruzr குழு


ஸ்மார்ட்ஃபோன்கள் நமது வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. பெரும்பாலானோர் கார் அல்லது இரு சக்கரவாகனம் ஓட்டும்போதே ஃபோனில் பேசுகின்றனர். அல்லது மெசேஜ் அனுப்புகின்றனர். இது பாதுகாப்பானது அல்ல என்று நம் அனைவருக்கும் தெரிந்தாலும் நாம் அதை தொடர்ந்து செய்கிறோம். இந்தியாவில் வாகனம் வைத்திருப்பவர்களில் 90 சதவீத தனிநபர்கள் வாகனம் ஓட்டும்போது ஃபோனில் பேசுகிறார்கள் என்று போக்குவரத்து அமைச்சகம் மதிப்பிடுகிறது.

பல்லவ் சிங் ஐஐடி மும்பையில் 2009 பேட்ச் பட்டதாரி. தினேஷ் ஃபதேபுரியா பிர்லா கல்வி நிறுவனத்தின் 2011 பேட்ச் பட்டதாரி. வாகனம் ஓட்டும்போது ஃபோனில் பேசுவதால் ஏற்படும் விபத்துக்கள் தவிர்க்கவேண்டும் என்று இவர்கள் தீர்மானித்தனர். இருவருக்கும் பொதுவான நண்பர்களை சந்தித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு வென்சரை துவங்க திட்டமிட்டனர்.

”இந்திய வாடிக்கையாளர்களுக்கே உரிய இந்த பிரச்சனைக்கு மெஷின் லேங்குவேஜ் எப்படி தீர்வளிக்கக்கூடும் என்பது குறித்து நாங்கள் பேசினோம்.” ஸ்மார்ட்ஃபோன்கள், கார்கள் மற்றும் பைக் விற்பனை ஆகியவற்றுடன் விபத்தை தொடர்புப்படுத்தும் தரவுகள் குறித்துதான் முக்கிய விவாதம் நடைபெற்றது.

அதன் பிறகு 2015-ம் ஆண்டு க்ரூசர் (kruzr) உருவானது.

ஒருவர் வாகனம் ஓட்டும்போது ஸ்க்ரீனை லாக் செய்துவிடும் தொழில்நுட்பத்தை மூன்று வருடங்கள் செலவிட்டு 20,000 அழைப்புகளை சோதித்த பிறகு இந்நிறுவனம் கண்டுபிடித்தது. ஸ்மார்ட்ஃபோன்களில் இருக்கும் மென்பொருளானது ஃபோனில் இருக்கும் கைரோ (gyro) சென்சார்கள் மூலம் நகர்வுகளை கண்டறிந்து வாகனம் நகர்ந்துகொண்டிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானித்துவிடும்.

ஒருவர் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்பதையும் ஒரு நபர் நடந்துகொண்டிருக்கிறார் அல்லது ஓடிக்கொண்டிருக்கிறார் என்பதையும் சென்சார்கள் எவ்வாறு வேறுபடுத்தும்?

க்ரூசரின் பேட்டர்ன் ரெகக்னிஷன் என்கிற தொழில்நுட்பம் மூலமாக சென்சார்கள் வேறுபடுத்தும்.

ஒரு நபர் ஓடுவதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் வெவ்வேறு மோஷன் சென்சார்களும் ஸ்பீட் பேட்டர்ன்களும் உள்ளது. நீங்கள் ஓடும்போது உங்கள் ஃபோன் எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்து கை அல்லது கால் அசைவுகள் இருக்கும். ஆனால் வாகனம் ஓட்டும்போது அவ்வாறு இருக்காது.

”வாகனம் ஓட்டாத சூழல்களை அகற்றிடும் வழிமுறைகளை சோதனை செய்கிறோம்,” என்றார் பல்லவ்.

தொழில்நுட்பம்

இவர்களது தொழில்நுட்பம் துல்லியமாக இருப்பதற்காக இந்நிறுவனம் இரண்டாண்டுகள் ஆய்வு மேற்கொண்டது.

தற்போது க்ரூசர் வாகனம் ஓட்டுபவர்களுக்கு உதவியாளராக பணிபுரிகிறது. நீங்கள் வாகனம் ஓட்டிக்கொண்டிருப்பதை கண்டறிந்தால் அது தானாகவே உங்களுக்கு வரும் அழைப்புகளையும் மெசேஜ்களையும் கையாளத் துவங்கிவிடும். உங்களுக்கு ஒரு அழைப்பு வந்தால் அழைப்பவரிடம் நீங்கள் வாகனம் ஓட்டிக்கொண்டிருப்பதை க்ரூசர் தெரிவிக்கும். ஏதாவது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து பேச வலியுறுத்தும். அதனுள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஸ்மார்ட் சாட்பாக்ஸ் வாட்ஸ் அப், முகநூல் மெசன்ஜர், டெலிக்ராம், எஸ்எம்எஸ் ஆகியவற்றை கையாளும். நீங்கள் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் தகவலை சாட்பாக்ஸ் அந்த நபரிடம் தெரிவிக்கும். முக்கிய மெசேஜ்களை உங்களுக்காக பதிவு செய்துவிடும். ஆனால் நீங்கள் வாகனத்தை அடுத்து எப்போது நிறுத்துகிறீர்களோ அப்போதுதான் காட்டும். முக்கியமில்லாத மெசேஜ்களை உங்களது பயணம் முடிவடைந்த பின்பே காட்டும்.

மென்பொருள் ஃபோனை லாக் செய்துவிடும். பைக் அல்லது கார் நிறுத்தப்படும் வரை உங்களது ஃபோனை பயன்படுத்த முடியாது.

”ஏதேனும் அவசரம் என்றால் அழைப்பவர் 1 என்ற எண்ணை அழுத்தவேண்டும். அப்படி அழுத்தினால் அந்த அழைப்பு மிகவும் முக்கியம் என்பதை அறிந்துகொண்டு வாகனம் ஓட்டுபவருக்கு அழைப்பை இணைப்போம்,” என்றார் பல்லவ்.

இப்படிப்பட்ட சூழலில் சிஸ்டமானது காரின் ப்ளூடூத்துடன் இணைக்கும் அல்லது அந்த நபர் அழைப்பை ஏற்றுக்கொள்ளலாம். க்ரூசர் செயலியில் 95 சதவீத அழைப்புகள் முக்கியமற்றவையாகவே பதிவு செய்யப்படுகிறது.

க்ரூசர்-ல் 10,000 பதிவிறக்கங்களுக்குப் பிறகும் 50 லட்ச ரூபாய் முதலீட்டிற்குப் பிறகும் இந்நிறுவனம் தற்போது பல்வேறு வணிக மாதிரிகளை ஆராய்ந்து வருகிறது.

பாதுகாப்பு சார்ந்த வணிகம்

பாதுகாப்பு சார்ந்த வணிகம் மிகப்பெரிய வணிகமாகும். காண்டினெண்டல் அண்ட் பாஷ் நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்றால் உள்ளடக்கிய மற்றும் உள்ளடக்காத (passive and active) பாதுகாப்பு பணிகள் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

பெங்களூருவில் காண்டினெண்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் பேசிவ் சேஃப்டி & சென்சாரிக்ஸ் பிசினஸ் யூனிட்டின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் சேசிஸ் அண்ட் சேஃப்டி டிவிஷனின் நிர்வாகக் குழு உறுப்பினரான Dr. Bernhard Klumpp 200 பொறியார்களுடன் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதாவது ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கை சுழற்சி மற்றும் முதிர்வுகளுக்கு பொருத்தமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியாவில் காருக்குள் வைக்கப்படும் ABS மற்றும் ஏர்பேக் போன்ற உள்ளடக்கிய பாதுகாப்பு அமைப்புகளை காண்டினெண்டல் தயாரித்து வருகிறது. இதன் விலை 10,000 டாலர்களுக்கும் குறைவானதாகும். பாதுகாப்பு குறித்த இப்படிப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகையில் சாலைகளில் ஃபோன்கள் ஏற்படுத்தக்கூடிய தீங்குகளை யாரும் கவனிப்பதில்லை. நிஜ உலகின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வழிமுறைகளில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் போஷ், காண்டினெண்டல் போன்ற பெருநிறுவனங்கள் நிஜ உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தீவிரமாக செயல்பட க்ரூசர்-ஐ ஊக்குவிக்கிறது.

”இன்று க்ளௌட் சார்ந்த கார்களுக்கான வழிமுறைகள் இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. குறிப்பிட்ட சந்தைக்கான இவ்வாறான தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளுவது சவாலாகவே உள்ளது. ஆனால் மக்களைக் காப்பற்றக்கூடிய தொழில்நுட்பங்கள் கார்களுக்குள்ளேயே அமைக்கப்படும்,” என்றார் க்ளம்ப்.

உள்ளடக்கிய மற்றும் உள்ளடக்காத அமைப்புகளை ஒருங்கிணைக்க உதவும் கண்ட்ரோலர்கள் சந்தையில் நுழைவதற்கு முன்பு மென்பொருளின் தெளிவான வடிவமைப்பு விதிகள் அவசியம்.

உதாரணத்திற்கு விபத்தையும் அதன் பாதிப்பையும் மில்லிசெகன்டில் கணிக்கக்கூடிய கண்ட்ரோலர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது காண்டினெண்டல். இந்த கண்ட்ரோலர்கள் விபத்தில் உருண்டு செல்லும் சூழல் ஏற்பட்டால் பக்கவாட்டில் உள்ள ஏர்பேக்குகள் திறக்க உதவும். 

க்ரூசர் எங்கே எப்படி பங்களிக்கிறது? ஏர்பேக் வாகனம் ஓட்டுபவரை காப்பாற்றிய பிறகு அந்த நபர் அதிர்ச்சியில் இருப்பார். மென்பொருள் செயலியில் ஒரு அலாரத்தை தூண்டி தானாகவே ஆம்பூலன்ஸ் சேவைக்கும் போலீசுக்கும் தகவல் அனுப்பும். உடனடியாக நெருங்கிய உறவினரையும் அழைக்கும்.

OEM-களுடன் பணியாற்றுதல்

மொபைல் கைபேசி உற்பத்தியாளர்கள், மொபைல் நெட்வொர்க் வழங்குவோர், ஆட்டோமொபைல் OEM போன்றோரை க்ரூசர் சாத்தியம் நிறைந்த விநியோக பார்ட்னர்களாக பார்க்கிறது என்றார் பல்லவ்.

”தற்போது விநியோக பார்ட்னர்களை இணைப்பதற்கு முன்னால் வாடிக்கையாளர்களை பெறுவதில் முனைப்புடன் உள்ளோம்,” என்றார் அவர்.

வணிகம் இன்னும் கணிசமான அளவு வருவாயை ஈட்டவில்லை. நிறுவனம் சோதனை மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இருப்பதால் நிறுவனர்கள் விவரங்களை வெளியிட விரும்பவில்லை.

”தற்போது நாங்கள் கார்ப்பரேட்களுக்கு பிரத்யேக தீர்வுகள் அல்லது வைட் லேபிள் தீர்வுகளை வழங்குகிறோம்.” என்றார் பல்லவ். கார்ப்பரேட்கள் தங்களது ஊழியர்களும் வாகன ஓட்டுநர்களும் வாகனம் ஓட்டும்போது ஃபோன் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக க்ரூசர் வைட் லேபிள் தீர்வுகளை அளிக்கிறது.

இந்தியாவில் வாகனங்களை வைத்து வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களின் ஓட்டுநர்கள் அழைப்புகளால் கவனம் சிதறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அந்நிறுவனங்களுடன் இணைய திட்டமிட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை வைத்து வணிகத்தில் ஈடுபடும் பெரு நிறுவனங்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ற சேவை வழங்கமுடியும் என்று பல்லவ் மற்றும் தினேஷ் குறிப்பிட்டனர். உதாரணத்திற்கு ஊபர் ஓட்டுநர் பணியில் இருக்கும்போது அவரது ஃபோன் லாக் செய்யப்பட்டு பயணம் முடிந்த பின்னரே அழைப்புகளை மேற்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியும்.

இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகள்

இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகளுக்கான சந்தை அளவு மிகவும் குறுகியதாக உள்ளது. அடுத்த வருடம் முதல் ABS மற்றும் ஏர்பேக்குகள் காரில் உள்ளடக்கப்பட்ட ஒரு அங்கமாகவே இருக்கும். இணைக்கப்பட்ட அமைப்புகள் பிரபலமாகி வரும் நிலையில் இந்தியாவில் பாதுகாப்பு பிரிவில் க்ரூசர் அமைப்பிற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும்.

விபத்து ஏற்பட்டால் அவசர காலத்தை சமாளிக்க காரில் சிஸ்டம்களை பொருத்தும் இரண்டு ஸ்டார்ட் அப்களான ட்ராக் அண்ட் டெல் மற்றும் ரக்‌ஷா சேஃப்ட்ரைவ் க்ரூசரின் போட்டியாளர்கள். இந்த வணிகங்களில் ஒரு செயலி போலீஸ் அல்லது ஆம்புலன்ஸை இணைக்கும். எனினும் க்ரூசர் இந்த வணிகங்களுக்கு கூடுதல் சேவையாகும் ஏனெனில் அது உள்ளடக்காத பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் அது கவனச்சிதறலையும் தவிர்க்கும்.

ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்கும் வரை மக்கள் வாகனம் ஓட்டும்போது பேசுவதும் செல்ஃபி எடுப்பதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். க்ரூசர் உதவியுடன் இதை தடுக்கவேண்டும் என்பதும் வாகனம் ஓட்டுபவர்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதிசெய்யவேண்டும் என்பதுமே பல்லவ் மற்றும் தினேஷின் நோக்கம்.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா

Add to
Shares
8
Comments
Share This
Add to
Shares
8
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக