பதிப்புகளில்

’ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பொருளாதார சூழ்நிலையை உருவாக்கவேண்டும்’- தொழிலதிபர் கிஷோர் பியானி

YS TEAM TAMIL
5th Oct 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

திரைப்படங்களில் வருவது போல்... அவர் புலியின் குகைக்குள் நுழைந்தார்... அதை அடித்து வெற்றிக்கொண்டார்... அனைவர் மனதையும் கவர்ந்துவிட்டு சென்றுவிட்டார்... 

ஆம் ப்யூச்சர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் சிஇஒ கிஷோர் பியானி’யை பற்றித்தான் கூறுகிறோம். இந்தியாவின் பிரபல மற்றும் வெற்றிகரமான தொழிலதிபர்களுள் ஒருவரான கிஷோர் பியானி, யுவர்ஸ்டோரி நடத்திய ‘டெக்ஸ்பார்க்ஸ்’ விழாவில் கலந்துகொண்டு, அங்கு கூடி இருந்த தொழில்முனைவோர்களை தனது பதில்கள் மூலம் பிரமிக்க வைத்தார். 

image


யுவர்ஸ்டோரியின் நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா அவருடன் நடத்திய கேள்வி-பதில் பகுதி கிரிக்கெட் மேட்சில் ஒவ்வொரு பாலுக்கும் சிக்சர் அடித்தது போன்ற உணர்வை தந்தது. இருப்பினும் தான் எடுத்த திரைப்படங்கள் தோல்வி அடைந்ததை வெளிப்படையாக ஒத்துக்கொண்ட பியானி, தனது பதில்கள் மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்தது, தொழில்முனைவோர்களுக்கு பாடமாக அமைந்தது. 

கேள்வி-பதில் பகுதியில் இருந்து...

ஷ்ரத்தா: நீங்கள் ஏன் ஸ்டார்ட் அப்’ க்கு எதிராக உள்ளீர்கள்? 

கிஷோர்: அப்படி ஒன்றும் இல்லை. ஸ்டார்ட் அப்’இல் அதிக முதலீடு செய்தவன் நான். கிட்டத்தட்ட 36 தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளோம். ஆனால் என்னை பொறுத்தவரை ஸ்டார்ட்-அப் வெற்றிப்பெறவேண்டும். இதுவே முக்கியம். ஸ்டர்ஜியான்’இன் சட்டப்படி நாம் செய்யும் 90சதவீத பணிகள் தேவையற்றது. அதுதான் உண்மை. ஸ்டார்ட் அப்ஸ் பொருளாதாரத்தில் மதிப்பு கூட்டல் செய்யவேண்டும், பொருளாதார சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஒரு தொழில், தொலைநோக்கோடு இருத்தல் வேண்டும். ஓடாத தொழிலை நீங்கள் உருவாக்குவதாக இருந்தால் அது எதையும் உருவாக்க உதவாது. உருவாக்கம் என்பது ஒரு மகிழ்வான செயல். 

ஒரு கூட்டத்தில், ”இந்தியாவில் ஸ்டார்ட் அப்’கள் வேலைவாய்ப்பை உருவாக்குமா என்று என்னிடம் கேட்டனர்? அப்பத்தமான சிந்தனை அது. தொடக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது, அவை வெற்றிப்பெற்று பொருளாதாரத்தில் தனது பங்கை அளிக்கவேண்டும் அதுவே முக்கியம் என்றேன். 

ஷ்ரத்தா: இங்கே உள்ள தொழில்முனைவோர் எவரேனும் உங்களை அனுகினால் நீங்கள் அவரின் நிறுவனத்தில் முதலீடு செய்வீர்களா?

கிஷோர்: எனக்கு தொழில்நுட்பம் புரிவதில்லை. 

நான் தயாரிப்பை பார்த்து முதலீடு செய்கிறேன். பொருளாதாரச் சூழ்நிலையை உருவாக்காத எந்த நிறுவனத்தை பற்றியும் எனக்கு புரிவதில்லை. 

(பலத்த கரகோஷம்) சிறப்பான ஐடியாக்கள் உள்ளது ஆனால் அதை அவர்கள் லாபகரமாக மாற்றவேண்டும். தொழில்நுட்பத்தின் பங்கு என்ன? மூன்று விஷயங்கள்- இடம், நேரம் சேமித்தல், சமூக தொடர்புகளை அதிகரித்தல். 

ஷ்ரத்தா: இந்திய ப்ராண்டை உலக அளவில் கட்டமைக்க நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவில் ஒரு ப்ராண்டை உருவாக்குவது பற்றி கூறுங்கள்?

கிஷோர்: ஒரு வாடிக்கையாளர் என்ன நினைக்கிறார் என்று அறிவது சவாலானது. இந்தியா மாறிவருகிறது. ட்ரெண்டும் மாறிவருகிறது. சந்தை சிக்கலாக உள்ளது. அதனால் எதை செய்யக்கூடாது என்று முடிவெடுத்தோம். நான் எம்பிஏ படிக்கவில்லை. முதுகலை பட்டப்படிப்பில் ஒரு நாள் மட்டுமே கல்லூரிக்கு சென்றேன். வாழ்க்கை ஒரு சிறந்த ஆசிரியர், உங்களை சுற்றியுள்ள மக்களும் தான். அவர்களிடம் கற்பதே மேல். நீங்கள் ரொம்ப சிந்திக்க வேண்டிய தேவையில்லை, அப்படி செய்தால் உங்களால் அதிகம் செய்யமுடியாது. அறியாமை நம் சொத்து. அனுபவம் மற்றும் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். 

ஷ்ரத்தா: பலர் நீங்கள் இ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப தொழில் பேருந்தை தவறவிட்டதாக கூறுகின்றனர்?

கிஷோர்: நாங்கள் அதை தவறவிடவில்லை. அதில் தோல்வியுற்றோம். பலமுறை முயற்சித்தோம். மீண்டும் முயற்சிப்போம், இந்தமுறை வெற்றிபெறுவோம். ஆனால் இந்தியாவில் எல்லாருமே மின் வர்த்தகத்தில் குதித்துவிட்டால், நேரடி வர்த்தகத்தை யார் தான் செய்வார்கள்?

ஷ்ரத்தா: கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்டார்ட் அப் உலகில்; முதலீடு, மதிப்பீடு பற்றியே பேச்சுகள் எழுகிறது. மகிழ்ச்சி மற்றும் வருத்தமான செய்தி இது?

கிஷோர்: ஆம் எவ்வளவு வருத்தமாக உள்ளது... (சிரிப்பு) நான் ஒரு முதலீட்டாளர் மற்றும் தொழில்முனைவோருக்கும் இடையில் நடந்த உரையாடலை கூறுகிறேன். ’இரண்டு கடினமான நேரத்தை என் வாழ்நாளில் சந்தித்துள்ளேன். ஒன்று, நீங்கள் வருவதற்கு முன், அடுத்து நீங்கள் விட்டுச்சென்ற பின்’ என்று தொழில்முனைவர் ஒருவர் முதலீட்டாளரிடம் தெரிவித்தார். (கரகோஷம்) 

ஷ்ரத்தா: அதிக மதிப்பீடல் மற்றும் முதலீடுகளால் சந்தையில் நிலைத்தன்மை பாதிக்கப்படுள்ளது போல் உள்ளதே? 

கிஷோர்: என்னை பொறுத்தவரை உங்கள் தொழில் புரிந்துகொள்ளப்படாதவரை அதிக மதிப்பீடு கிடைக்கிறது. 

மக்களை முடிந்தவரை குழப்புங்கள்... நான் உண்மையாக கூறுகிறேன்.(சிரிப்பு) மின் வர்த்தகத்தை புரிந்துகொள்ளாமல், ஒருவர் எப்படி முதலீடு செய்ய முடியும்? 

இ-காமர்சில் 20% வாடிக்கையாளர்களை பெறுவது, 20% தயாரிப்பு செலவு, 8% தொழில்நுட்பம், 48% தொழிலை நடத்துதல் மற்றும் அலுவலகம் அதன் செலவுகள் ஆகும். எந்த பொருள் உங்களுக்கு இத்தனை குறைவான லாபத்தை தந்து வருமானம் ஈட்டமுடியாமல் வைக்கும்? இது போதும் என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்ற சொல்லுக்கு நிகராகும். 

image


ஷ்ரத்தா: ஒரு தொழில்முனைவராக இருந்துகொண்டு எப்படி உங்களால் நகைச்சுவையாக, பூரிப்பாக இருக்க முடிகிறது?

கிஷோர்: பணியில் திருப்தி மிக முக்கியம். இன்று காட்கோபரில் ஒரு கிளையை திறந்தேன். நிறைய வாடிக்கையாளர்கள் வருவதை கண்டேன். ஒரு தொழிலை கட்டமைத்து, அதை வாடிக்கையாளர்கள் மகிழ்வுடன் கொண்டாடினால் அந்த மகிழ்வே தனி சுகம், அதுவே உங்களை உந்தித்தள்ளும். பல கடின வழியை சந்தித்திருந்தாலும் சில சமயம் அதிர்ஷ்டவசமாகவும் இருந்துள்ளது என் பயணம். 

ஷ்ரத்தா: சுய மதிப்பீடு செய்வீர்களா?

கிஷோர்: ப்யூச்சர் குழுமத்தின் முக்கிய வழியே சுய மதிப்பீடு ஆகும். நாங்கள் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். 20 வருடத்திற்கு முன் இருந்த நான் இன்று இல்லை, புதிய விஷயங்களை கற்றுள்ளோம். தொடர்ச்சியாக புதிதாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

ஷ்ரத்தா: எந்த ஒரு விஷயத்தை நீங்கள் வேறு மாதிரியாக செய்திருக்க விரும்புகிறீர்கள்?

கிஷோர்: நான் இரண்டு திரைப்படங்கள் எடுத்தேன். இரண்டும் ப்ளாப் ஆனது. எனக்கு ஒரு ஹிட் படம் எடுக்க ஆசை. 

ஷ்ரத்தா: புதிய ப்ராண்டுகளை கட்டமைத்துள்ளீர்கள். ப்யூச்சரின் புதிய திட்டங்கள் என்ன?

கிஷோர்: நான் என் நிறுவனத்திற்கு ப்யூச்சர் என்று பெயரிட்டதே வருங்காலம் முடியப்போவதில்லை என்பதால்தான். அது எப்பவும் வந்துகொண்டே இருக்கும். நாங்கள் சுவாரசியமான நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம். நிறுவனத்தின் செயல்பாடை 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டால், 0-1 புள்ளிகளை உருவாக்கத்திற்கு தருவேன், 1-100 வரை தொழிலை நடத்துவதற்கு கொடுப்பேன். நானும் என் மகளும் 0-1 வரை உள்ள உருவாக்கப் பகுதியை கவனிக்க, 1-100 வரை உள்ள பகுதியை வல்லுனர்கள் கவனித்துக் கொள்கின்றனர். நாங்கள் தொழிலை வளர்க்கும் பூஜ்ஜியம் முதல் ஒன்று வரை உள்ள பகுதியில் செயல்படுவதை உற்சாகத்துடன் செய்கிறோம். 


Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags