பதிப்புகளில்

பொது கழிப்பிடத்தை கைகளால் தூய்மை செய்து கவனம் ஈர்த்த ஐஏஎஸ் அதிகாரி பரமேஷ்வரன்!

7th Mar 2017
Add to
Shares
602
Comments
Share This
Add to
Shares
602
Comments
Share

பரமேஷ்வரன் ஐயர், மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் செயலாளர். அண்மையில் அவர் கங்காதேவிப்பள்ளி என்ற வாரங்கல் மாவட்டத்தில் இருக்கும் பகுதியை பார்வையிடச் சென்றார். அங்கு இருந்த ஒரு பொது கழிப்பிட பள்ளத்தில் இருந்த மலக்கழிவை தன் கைகளால் அப்புறப்படுத்தி அந்த பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் பரமேஷ்வரன். 

image


பொதுவாக நம் நாட்டில் மலம் அள்ளுவோர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகத் தான் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் பெரும்பாலும் கீழ் ஜாதி அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற மனநிலையே இன்றும் உள்ளது. கைகளால் மலக்கழிவை அள்ளுவது சுகாதாரக் கேடான செயலாக கருத்தப்பட்டும், பரமேஷ்வரன் மக்களின் மனநிலையை மாற்றவே இந்த செயலை செய்ய முடிவெடுத்தார். 

’ஸ்வச் பாரத்’ திட்டத்தின் ஒரு பகுதியாக கங்காதேவிப்பள்ளிக்கு சென்ற பரமேஷ்வரன், பிப்ரவரி 18-ம் தேதி தன்னுடன் 40 அதிகாரிகளை உடன் அழைத்து சென்றார். அதில் UNICEF மற்றும் ஊரக மேலாண்மை துறைத் தலைமை செயலாளர்களும் அடங்குவர். 

இந்த குழு அந்த இடத்தில் உள்ள இரட்டை குழி தொழில்நுட்பத்தை பற்றி ஆய்வு செய்ய அங்கு சென்றனர். இந்த தொழில்நுட்பமானது, மனித கழிவை, குறிப்பிட்ட காலத்தில் உரமாக மாற்றுவதன் மூலம் திறந்தவெளி கழிவுகளை தவிர்க்கமுடியும். அதிகாரிகள் அங்குள்ள மக்களிடம் இந்த தொழில்நுட்பத்தை பற்றி விளக்கினர். ஒவ்வொரு டாய்லெட்டிலும் இரண்டு பள்ளங்கள் தோண்டப்பட்டு, சிமெண்ட் செய்யப்படும். முதல் குழியில் மனித கழிவு நிரம்பியதும் அதை கிராமத்தினர் மூடிவிட்டு அடுத்த குழியை பயன்படுத்தவேண்டும். அந்த சமயத்தில் முதல் குழியில் இருக்கும் கழிவு, காய்ந்து, உளர்ந்து உரமாக மாறிவிடும். பின்னர் அந்த குழி ஆறு மாதங்களில் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் உபயோகத்திற்கு வரும். இந்த தொழில்நுட்பம் கங்காதேவிப்பள்ளியில் கடந்த 16 ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது.

இதை பற்றி அறிந்த பரமேஷ்வரன், அதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல் ஆனார். இது பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் பேசிய இணை கலெக்டர் ப்ரஷாந்த் ஜீவன்,

“நாங்கள் இந்த தொழில்நுட்பத்தை விளக்கிக் கொண்டிருந்த போது திடீரென பரமேஷ்வரன் அந்த குழி எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது என்று கேட்டார். குழியின் மூடியை திறந்து அதில் இறங்கி, காய்ந்து கிடந்த கழிவுகளை, உரமாக மாறியுள்ள அதை மண்வாரியால் அள்ளத்தொடங்கினார். எல்லாருக்கும் அதைக் கண்டு ஆச்சர்யம் ஆனது. பின் நாங்களும் அவருடன் கழிவை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினோம்,” என்றார்.
image


பரமேஷ்வரன் செயலில் முதலில் இறங்கி எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் இருந்து கழிவுகள் அள்ளுவதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம் என உணர்த்தியுள்ளார். நானும் அந்த உரமாகிப் போன கழிவை என் கைகளால் எடுத்தேன், அவமானப்படவில்லை என்றார் அவர் மேலும். 

பரமேஷ்வரன் ஐயர், இதைப் பற்றி ட்வீட் செய்தார். அதைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தன் பாராட்டை தெரிவித்துக் கொண்டார். ‘ஸ்வச் பாரத் அப்யான்’ திட்டத்தை அதிகாரிகளும், அரசும் சிறப்பாக எடுத்துச் செல்வதற்கு பாராட்டை அளித்து, குறிப்பாக பரமேஷ்வரனையும் பாராட்டி தனது ‘மன் கி பாத்’ பேச்சில் அதை குறிப்பிட்டார் மோடி. 

image


பலரும் சமூகத்தில் தங்களின் அதிகார நிலையால் கட்டுப்பட்டு இருக்கும் நேரத்தில், இது போன்று சக மனிதர்களின் வேலைகளை தாமும் செய்வதால் எந்த பாகுபாடும் இல்லை என்று ஒரு சிலர் நிரூபித்துக் கொண்டே தான் இருக்கின்றனர். ஒரு நல்ல உதாரணத்தை ஏற்படுத்தியதற்கு பரமேஷ்வரனுக்கு நம் பாராட்டுக்கள். 

கட்டுரை: Think Change India

Add to
Shares
602
Comments
Share This
Add to
Shares
602
Comments
Share
Report an issue
Authors

Related Tags