பதிப்புகளில்

வாட்ஸ் அப்பில் ஆர்டர் செய்தால் மளிகை சாமான்கள் வீடு தேடி வரும்!

30th Dec 2015
Add to
Shares
135
Comments
Share This
Add to
Shares
135
Comments
Share

இந்தியாவில் இருக்கும் உயர்தர உள்ளூர் மளிகைக்கடைகள், டெலிவரிக்காக கடைப்பிடிக்கும் கால முறை அவர்கள் கடைகளை அறிமுகப்படுத்திய உடனேயே வாடிக்கையாளர்களிடம் ட்ரிபிள் 7 அந்தஸ்த்தைப் பெறுவதில் முக்கிய பங்காற்றுகிறது. அதன் செயல்பாடுகள் மற்றும் தளவாட இயக்கங்கள் கடிகார முள் போல செயல்பட்டால் எதையுமே விரைவில் அடைந்து விடலாம் என்பதை புரியவைக்கிறது. 2ம் மற்றும் 3ம் கட்ட நகரங்களுக்கு இது உண்மையில் பொருந்தும். இந்தக் குறிப்புகள் அனுபவசாலிகளுக்கு சாதகமாகவே இருக்கும், தலைநகரத்தை சேர்ந்த செழிப்பான வாடிக்கையாளர்களுக்கு சிறு நகரங்களில் வசிப்பவர்களின் தேவையை உணர்ந்து கொள்ள முடியாது. பொருட்கள் மற்றும் அவற்றின் விலைகள் என அனைத்துமே உங்களின் கணினி மொழியாக இருக்கும், இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டு உங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து எப்படி ஆர்டர்களைப் பெறுகிறீர்கள் என்பது உண்மையிலேயே ஒரு டீல் பிரேக்கர். ஹைப்பர்லோக்கல் கடைகளுக்கான திறவுகோலே உள்ளூர் பகுதிகளுக்கு ஏற்றவாறு பொதுநடைமுறைகளை பின்பற்றி செயல்படுத்தும் B-Plan. இதுவே அனிருத் ஷர்மா "ஆர்பை" Orbuy மூலம் சாதிக்க நினைப்பது – ஜெய்ப்பூரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஆர்பை தொடங்கி இரண்டு மாதமே ஆன மளிகை பொருட்கள் விநியோகத்திற்கான தொழில்முனை நிறுவனம்.

"அண்மையில் நான் இந்தியாவின் பிஸியான நகரமான மும்பையில் இருந்து என்னுடைய சொந்த ஊரான ஜெய்ப்பூர்க்கு சென்றேன். அங்கே எனது சொகுசுக்காக உள்ளூர் மளிகைக் கடைக்காரரிடம் சாமான்களைக் கூறி அவற்றை எங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யச்சொன்னேன். வீட்டிற்கே பொருட்களை கொண்டு வந்து கொடுத்ததற்காக அவர்கள் கூடுதலாக ரூ.20 என்னிடம் வசூலித்தனர், ஆனால் இது எனக்கு ஏற்றதுதான் என நினைத்தேன், ஏனெனில் போக்குவரத்து நெரிசலில் நேரத்தை செலவிடுவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்றே நான் கருதினேன். மும்பையில் பழக்கப்பட்ட பல விஷயங்கள் ஜெய்ப்பூரிலும் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் எங்களுக்கு சில தேர்வுகள் மட்டுமே கிடைத்தது. அது தான் எங்களது பிரச்னைக்கான விவரத்தை அறிய உதவியது, நாங்கள் ஜெய்ப்பூர் போன்ற 2ம் கட்ட நகரங்களுக்கான தீர்வைக் கண்டறியத் துவங்கினோம்,” என்கிறார் 28 வயது அனிருத். அந்த எண்ணம் உதிக்கும் வரை அவர், வழிச்சொல் ஆராய்ச்சி மற்றும் வர்த்தகப் பிரதிநிதியாக ஐந்து ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருந்தார்.

image


“திறன்வாய்ந்த வாடிக்கையாளர்களுடன் நாங்கள் கலந்துரையாடினோம். விநியோகம், விலை மற்றும் குறிப்பிட்ட கடைகளின் பொருட்களை மிகக்குறைந்த தொகைக்கு ஆர்டர் செய்வது உள்ளிட்ட சேவைகளில் இருக்கும் ஓட்டைகளை முதலில் நாங்கள் கண்டறிந்தோம்.”

பெரிய அளவிலான கடைகளின் நெட்வொர்க், போட்டி மதிப்புகள் மற்றும் தள்ளுபடிகள் போன்ற அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் எளிமையான முறையில் உலாவி பொருட்களை ஆர்டர் செய்வதற்கான முயற்சியே ஆர்பை. ஆர்பை மட்டுமே இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி என இரண்டு மொழிகளிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஒரே நிறுவனம். இரு மொழி ஆதரவால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இது விளங்குகிறது.

வாட்ஸ்அப்-ன் பிரபலம் மற்றும் மக்களுக்கு மெசேஜிங் செயலிகள் மீது இருக்கும் ஆர்வம், பழங்கால செல்போன் பயன்பாட்டாளர்களின் மிஸ்டுகால் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜையும் மறந்து விடாமல் ஆர்பை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தேர்வுகளை வழங்குகிறது. அதாவது தொலைபேசி மூலம் ஆர்டர் தெரிவிப்பது, மிஸ்டு கால் கொடுப்பது, வாட்ஸ்அப்பில் தகவல் பகிர்வது, குறுஞ்செய்திகள் அனுப்புவது, அதே போன்று இணையதளத்திலும் ஆர்டர்களை பதிவு செய்வது என எளிமையான வழிகள் பலவற்றை வழங்குகிறது. “மளிகைக் கடைக்கு சென்று சாமான் வாங்குவது கடினமானதாக இருக்கக் கூடாது, தெருமுனையில் இருக்கும் கடையில் சென்று வாங்குவது போல எளிமையானதாக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயத்தில் இருக்கும் முன்னேற்றங்கள் மனித வாழ்வை எளிமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை இல்லையா?”

இந்தியாவில் தற்போது $383 பில்லியனாக இருக்கும் உணவு மற்றும் மளிகை தொழில்துறை, 2020ல் $1 ட்ரில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுவதாக டெக்னோபாக் ஆலோசனைக்குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது. குரல்வலையை நெரிக்கும் இந்த சந்தையில், உயர்தரஉள்ளூரில் கடைக்காரர்கள் மட்டுமே தள்ளுபடிகள், விலைகள், தரம் மற்றும் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் களத்தில் நின்று நம்பிக்கையோடு போராடி அடுத்த முனையை அடைவர்.

அப்படிப்பார்க்கையில் ஆர்பை பலவகை வித்தியாசமான அறிவிப்புகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தங்கள்வசம் சேர்த்து வைப்பதற்கான முனைப்போடு செயல்படுகிறது. மிகக்குறைந்த தொகையான ரூ.200க்கு பொருட்களை வாங்கினாலே இலவச விநியோகம் செய்கிறது ஆர்பை, இது மற்ற முன்னணி போட்டியாளர்களான பிங்க்சிட்டிகிரானா, பெப்பர்டேப் மற்றும் க்ரோஃபெர்ஸ்ஐ விட குறைந்தது. மற்ற பெரிய போட்டியாளர்களான ஜோப்நௌ, பிக்பேஸ்கெட், லோக்கல் பன்யா அனைத்தும் பிங்க்சிட்டியை உற்று கவனித்து வருகின்றனர், ஆனால் அவர்கள் இன்னும் பந்தயத்தில் பங்கேற்கவில்லை. ஆர்பை வழங்கும் மற்றொரு மதிப்பான சேவை, நன்மதிப்பை கட்டமைக்கக் கூடியது. பொருட்களை ஆர்டர் செய்யும் மூத்த குடிமக்களுக்கு இலவசமாக மருந்துபொருட்களை விநியோகிக்கும் பணியையும் இது செய்கிறது.

உணவகங்கள், உணவுவிடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் தங்குமிடங்கள் என நிறுவனம் சார்ந்த வாடிக்கையாளர்களை குறிவைத்தே நாங்கள் செயல்படுகிறோம், அப்போது தான் மிகப்பெரிய ஆர்டர்களைப் பெற முடியும். எங்களுடைய புதிய அறிவிப்புகள் அவர்களின் மாத செலவைக் குறைக்கும், பெரிய விற்பனை எங்களுக்கும் உதவியாக இருக்கும், இதனால் நாங்கள் அதிக லாபத்தை பெற முடியும் என்று வியாபார விரிவாக்க்ம் பற்றி தான் வகுத்து வைத்துள்ள திட்டத்தை கூறுகிறார் அனிருத்.

image


மற்றுமொரு குறிப்பிடத்தக்க மாற்றம் அவர்கள் செய்வது என்னவென்றால் இவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை க்ரோஃபெர்ஸ் மற்றும் பெப்பர்டேப் செய்வது போல அருகில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து வாங்காமல், நகரைச் சுற்றியுள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.

2015 அக்டோபரில் தொடங்கப்பட்டாலும், மாதாமாதம் 300-400 ஆர்டர்களை பூர்த்தி செய்வதன் மூலம் வருமானம் ரூ.1.5 லட்சத்திற்கும் அதிகமாகவே கிடைக்கிறது, அவர்களின் தற்போதைய வாடிக்கையாளர்களின் அடிப்படையில் 70 சதவீதத்தினர் மீண்டும் மீண்டும் வருபவர்கள். “மிகவும் சிறிய ஆனால் அதிக உத்வேகம் அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் நாங்கள் எங்களுடைய செயல்பாட்டுச் செலவை, முதல் மாத விற்பனையின் மூலமே பெற்றுவிட்டோம்,” என்று பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார் அனிருத்.

தற்போது சுயமுதலீட்டு முறையில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் எதிர்காலத்தில் விரிவாக்க திட்டங்களுக்காக கேபிடல் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 2-ம் மற்றும் 3-ம் கட்ட நகரங்களை குறிவைத்து விரிவாக்கத் திட்டங்களை வகுத்து வருகிறது ஆர்பை. உதய்பூர் மற்றும் கோடா சந்தையை நிலையான திட்டங்கள் மூலம் 2016ல் வெற்றி காண்பதோடு, இந்தியாவில் குறைந்தபட்சம் பனிரெண்டு 2-ம் நிலை நகரங்களில் 2016ம் ஆண்டின் இறுதிக்குள் தங்களது இருப்பை உணர்த்தும் நோக்கத்தோடும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

யுவர்ஸ்டோரியின் நிலைப்பாடு

உள்ளூர் தரவுகளுடன் நவீனத்தின் வடிவம் கொண்ட ஸ்டார்ட் அப்பகளுக்கு ஆர்பை ஒரு நல்ல உதாரணம். யாராலும் கண்டுகொள்ளப்படாத மார்க்கெட்டில் உள்ள சந்தை வாய்ப்பை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, லாபகரமான தொழிலாகக் காட்சியளிக்கிறது. ஆனால், ஹைபர் லோக்கல் சந்தையில் ஒவ்வொரு நிமிடம் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாட்ஸ்அப், தொலைப்பேசி வழியாக ஆர்டர் வாங்குவது என குறைந்த விலையில் நல்ல சரக்குகளை கையாளுவதில் ஆர்பை திறன் வாய்ந்தது என்பது புலப்படுகிறது.

பல்வகையான தயாரிப்புகள், தொழில்போட்டி, சரக்குகளை கையாளுதல் என இன்னும் தொலை தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. ஜெய்ப்பூரில் சந்தையை முழுவதும் கைப்பற்றியதோடு, இந்தியா முழுமையும் இந்த நிறுவனத்தைக் கொண்டு செல்லும் திட்டமும் இருப்பது நல்ல முன்னேற்றத்திற்கான அடையாளம்.

Add to
Shares
135
Comments
Share This
Add to
Shares
135
Comments
Share
Report an issue
Authors

Related Tags