பதிப்புகளில்

முதியோரை 'அழகான ஆண்டுகளுக்கு' அழைத்துச் செல்லும் அன்பான அமைப்பு!

18th Dec 2015
Add to
Shares
50
Comments
Share This
Add to
Shares
50
Comments
Share

இங்கே இளைஞர்களை கண்டுகொள்ளும் அளவிற்கு யாரும் முதியவர்களை சட்டை செய்வதில்லை. சினிமா, பத்திரிக்கை, பிசினஸ் என எதை எடுத்தாலும் அது இளைஞர்களை மனதில் வைத்தே உருவாக்கப்படுகிறது.

இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த தேசத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதைவிட அதிகரிக்கப்போகிறது. அவர்களை கவனிக்கப் போதுமான வசதிகள் இல்லை. ஒருகாலத்தில் இந்த தேசத்திற்காக உழைத்த, பல பெரும் நிறுவனங்களை கட்டமைத்த அவர்களை கடைசி காலத்தில் போற்றி பாதுகாக்க எதேனும் செய்ய வேண்டும் இல்லையா?

"இந்தியாவில் இப்போதைக்கு வயதானவர்கள் 100 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இது 2050ம் ஆண்டு 323 மில்லியனாக அதிகரிக்கக்கூடும், அப்போது மொத்த மக்கள் தொகையில் இது 20 சதவீதமாக இருக்கும்” என்கிறது ஐக்கிய நாடுகளின் ஜனத்தொகை நிதியம். எனவே இந்தத் துறையில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

துறை விவரம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் சில நிறுவனங்கள் 60 வயதிற்கும் அதிகமானோருக்கு உதவும் வகையில் நிறுவனத்தை துவங்கினர். குட்ஹாண்ட்ஸ், சீனியர் ஷெல்ஃப், ப்ரமதி கேர், சீனியர்வேர்ல்ட் மற்றும் சில்வர் டாகீஸ் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வயதானவர்களின் எல்லா வகையான தேவைகளையும் பூர்த்தி செய்வதே இவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இதையெல்லாம் உருவாக்கியவர்கள் இளைஞர்கள். எனவே வயதானவர்களின் உண்மையான பிரச்சினைகளை இவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் சில மோசமான அனுபவங்களை பெற்றனர்.

முதியவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் "ப்யூட்டிஃபுல் இயர்ஸ்" (Beautiful years). இதை துவங்கியிருப்பவர் 51 வயதான விளாடிமிர் ருப்போ(விளாடி). “நான் என் குழந்தைகளை சார்ந்து இருக்க விரும்பவில்லை. வயதான காலத்தில் என்னை நானே பார்த்துக்கொள்ள தான் விரும்புகிறேன்” என்றார் விளாடிமிர். இவர் கடந்த 16 ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கிறார்.

நிறுவனத்தின் நோக்கம் பற்றி கூறும்போது “வயதானவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும். அவர்கள் மீதான அக்கறை என்பது பரஸ்பர ஆதரவு வழங்குவதன் மூலமாகவும் அவர்களுக்கான புதுமையான தயாரிப்புகள் மூலமும் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். மூத்தோர் பாதுகாப்பு சேவைகளை சமூக அளவில் சரிபார்த்து பரிந்துரைக்கவும் வேண்டும்” என்றார். மேலும் "நாங்கள் ட்ரிப் அட்வஸர் மற்றும் ஜொமாடோவின் மூத்தோர் சேவையை நோக்கி நகரவிருக்கிறோம்” என்றார்.

image


விளாடிமிர், 30 ஆண்டு அனுபவம் நிரம்பிய பக்குவப்பட்ட மென்பொருள் நிர்வாகி, உலக அளவிலான அனுபவம் பெற்றவர். பிறந்து வளர்ந்ததெல்லாம் ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் தான். பெங்களூரு வருவதற்கு முன் 12 ஆண்டுகள் ஜெருசலேம், இஸ்ரேல் போன்ற இடங்களில் பணியாற்றி இருக்கிறார். பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தை நிறுவ 2000ம் ஆண்டு பெங்களூர் வந்தார். இப்போது 2,200 பேர் இந்த கிளையில் பணியாற்றுகிறார்கள். வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்க வேண்டியவர் இப்போது 16 வருடங்களாக இருக்கிறார்.

சிஸ்கோ நிறுவனத்தில் பொறியியல் துணைத்தலைவராக இருக்கும் இவர் ஜனவரி 2016ன் இறுதியில் முழுமூச்சாக பியூட்டிபுல் இயர்ஸ் நிறுவனத்தை மட்டுமே கவனித்துக் கொள்ளப்போகிறார்.

வயது தடையல்ல

”என் அத்தையின் கதையை சொல்லவா? அவருக்கு இப்போது 86 வயது ஆகிறது. அவர் சமீபத்தில் என்னிடம் சொன்னார் “ஒவ்வொரு முறையும் கண்ணாடி பார்க்கும்போதும் யார் இந்த அசிங்கமான பெண் என்று நினைத்துக்கொள்வேன். அது நான் இல்லை. எனக்கு தெரியும் 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே ஆள் தான் நான். ஆனால் எல்லோரும் என்னை வயதான பெண்மணியாகவே பார்க்கிறார்கள். என்னையல்ல” வயதானவர்களை புரிந்து வைத்திருக்கிறார்களா? அவர்களைப் பற்றி உண்மையில் புரிந்துள்ளதா?” என்கிறார் விளாடிமிர். 

இந்தக் கேள்வி தான் அவர் வாழ்நாள் முழுக்க சேர்த்துவைத்த பணத்தை கொண்டு பியூட்டிஃபுல் இயர்ஸ் நிறுவனத்தை துவங்க உதவியது.

இந்த தளத்தை எல்லோரும் இலவசமாக பயன்படுத்தலாம். இதில் சில பொருட்களை இணையவழியில் விற்பதன் மூலம் பணம் பண்ணும் திட்டமும் இருப்பதாக தெரிவிக்கிறார். "எங்கள் இணையதளம் மூலம் வயதானவர்களுக்கான சின்ன சின்ன பொருட்கள் கூட விற்கப் போகிறோம். உருப்பெருக்கியுடன் கூடிய நகம்வெட்டி, புத்தகம் வைப்பான், மாத்திரை வெட்டி மற்றும் அறைப்பான், மோட்டார் பொருத்தப்பட்ட வீல்சேர்கள், நோயாளி தாங்கி(hoists) என பல. உள்ளூர் பொருட்கள் மட்டுமல்ல சிலவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம். பார்கின்சன் நோயாளிகளுக்கான மிகை யதார்த்த கண்ணாடிகள், அது அவர்கள் தடுமாறாமல் நடக்க உதவும், சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு ஷூக்கள், படுக்கை நோயாளிகளுக்கான ஆடைகள் போன்ற பலவற்றை விற்கவிருக்கிறோம்” என்றார்

வயதானவர்களுக்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு அது சார்ந்த சில சேவைகளும் தேவைப்படும். “பராமரிப்பாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள், வீட்டு நோய் மேற்பார்வை சேவை, மருத்துவ உபகரணங்களை விநியோகிப்பவர்கள் போன்றோரின் பட்டியல்களையும் பட்டியலிட்டிருக்கிறோம்” என்கிறார் பவித்ரா ரெட்டி. இவர் சேவை வழங்குபவர்களை சரிபார்க்கக்கூடிய தன்னார்வலர்.

பெரிய மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் வீட்டுமனை விற்பனையாளர்கள் மூலமாக பிரச்சாரம் செய்யும் திட்டமும் வைத்திருப்பதாக தெரிவிக்கிறார் விளாடிமிர்.

கதைகள்

விளாடிமிர், தற்போதைக்கு வயதானவர்களை உள்ளடக்கிய கூட்டத்தை உருவாக்கி வருகிறார். கதைகளை பகிர்ந்துகொள்ள விரும்புபவர்களும், நண்பர்களை உருவாக்கிக்கொள்ள விரும்புபவர்களையும் இதில் இணைத்துக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார். வயதானவர்களை பார்த்துக்கொள்ள விரும்புபவர்களும் இடமளிக்கிறார். "வயதானவர்களை பார்த்துக்கொள்ள விரும்புபவர்களை வைத்து நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. குறைந்தபட்சம் நம் பெற்றோர்களின், தாத்தா பாட்டிகளின் கதைகளையாவது பகிர்ந்துகொள்ளலாம். பலரின் எழுச்சியூட்டும் கதைகளும் எங்கள் தளத்தில் எழுதியிருக்கிறோம். ப்யூட்டிஃபுல் ஏஜிங் என்ற பகுதியில் இதை பார்க்கலாம்.” என்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு தன் கணவரை இழந்தார், தன் சகோதரி, மகன், மருமகன் எல்லோரையும் இழந்த பிறகு தற்போது 83 வயதில் கணினியை இயக்க கற்றுக்கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையின் மறக்க முடியாத அழகான தருணங்களையெல்லாம் அதில் எழுதத் துவங்கியிருக்கிறார். “உண்மையில் அவர் மிகுந்த ஆர்வத்தோடு எழுதி வருகிறார். அது அவரது வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை கொடுத்திருக்கிறது. மக்களின் குரலாகவும், மறைந்த தலைமுறைகளின் குரலாகவும் அது ஒலிக்கிறது. இதன்மூலம் தனது பேரக்குழந்தைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் ஒரு முன்மாதிரி ஆகி இருக்கிறார்” என்றார் விளாடி.

மனதளவில் இளமை

வயதானவர்களை இந்தியர்கள் மிகுந்த அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார்களா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் பத்திரிக்கைகளில் தினம்தோறும் வரும் வயதானவர்களின் கொலைகள் பற்றிய செய்திகள் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கின்றன. வயதானவர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் பெங்களூரு தற்போது ஐடிக்காரர்களின் இடமாகவும் அது தொடர்பான துறைகளுக்கானதாகவும் மாறி வருகிறது. மும்பையும் டெல்லியும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால் நடுத்தர வர்க்கத்தில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. "எந்த அமைப்பும் சரிவர இல்லாத ஒரு இடத்தில் ஆயிரம் பேரை கையாள்வதை விட பத்து பேரை கையாள்வது கடினமாக இருக்கிறது. எல்லாமே சவாலாக இருக்கிறது. ஆனால் அது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதை சாதிக்க முடியும் என நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். என் தலைமுறை அதை சாத்தியப்படுத்தும் என நம்புகிறேன்” என்கிறார் விளாடிமிர்.

இணையதளம் : Beautiful Years

ஆங்கிலத்தில் : DIPTI NAIR | தமிழில் : Swara Vaithee

Add to
Shares
50
Comments
Share This
Add to
Shares
50
Comments
Share
Report an issue
Authors

Related Tags