அப்பா தினக்கூலி: ரூ.2.5 கோடி Scholarship பெற்று அமெரிக்காவில் படிக்க தேர்வான பீகார் மாணவர்!

By Chitra Ramaraj
July 12, 2022, Updated on : Tue Jul 12 2022 05:01:33 GMT+0000
அப்பா தினக்கூலி: ரூ.2.5 கோடி Scholarship பெற்று அமெரிக்காவில் படிக்க தேர்வான பீகார் மாணவர்!
அமெரிக்காவின் புகழ்பெற்ற லஃபாயெட் கல்லூரியில் படிப்பதற்காக 2.5 கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப்பைப் பெற்றுள்ளார் பாட்னாவைச் சேர்ந்த ஏழை மாணவரான் பிரேம்குமார். இந்தியாவில் இந்த ஸ்காலர்ஷிப்பைப் பெறும் முதல் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர் இவர் ஆவார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

சமூகத்தில் பொருளாதாரம் மற்றும் ஜாதியின் பெயரால் பின்தங்கியவர்கள், வாழ்வில் முன்னேறுவதற்காக அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு திட்டங்களை, உதவிகளைச் செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் ஏழை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (Scholarship) திட்டம்.


இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் மற்ற நாட்டு மாணவர்களுக்கு இத்தகைய உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அதில் ஒன்றுதான் அமெரிக்காவின் புகழ்பெற்ற லஃபாயெட் கல்லூரியில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை. இந்த உதவித்தொகையை இதுவரை உலகில் உள்ள மற்ற நாடுகளைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். தற்போது ஏழாவதாக இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தேர்வாகியுள்ளார்.

student prem

பாட்னாவின் கோன்புரா கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவரின் பெயர் பிரேம்குமார். 17 வயதாகும் இவர், தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை தினக்கூலியாக இருக்கிறார். தனது குடும்பத்தின் முதல் பட்டதாரியாகப் போகும் பிரேம், தனது விடா முயற்சியாலும், திறமையாலும் இந்த உதவித்தொகை வாய்ப்பைப் பெற்றுள்ளார்.


அமெரிக்காவின் புகழ்பெற்ற Lafayette College-ல் படிப்பதற்கான, இந்திய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய் உதவித்தொகை (Dyer Fellowship) பிரேமிற்கு கிடைத்துள்ளது. படிப்பு செலவு, பயணச் செலவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் இந்த உதவித்தொகையில் அடங்கும். லஃபாயெட் கல்லூரியில் இயந்திரவியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் பிரிவில் இளங்கலை படிக்கவுள்ளார் பிரேம்.

student prem

பீகாரில், தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளுக்காக பாடுபடும், டெக்ஸ்டெரிட்டி குளோபல் என்ற அமைப்பு அளித்த பயிற்சியின் மூலம் இந்த உதவித்தொகையுடன் வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு பிரேமிற்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் இந்த ஸ்காலர்ஷிப்பை பெறும், முதல் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் பிரேம்தான்.

“பீகாரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக பாடுபடும் Dexterity Global அமைப்பின் உதவியால்தான், இந்த வெற்றியைப் பெற்றுள்ளேன். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என இது குறித்து பிரேம் கூறியுள்ளார்.
prem

பிரேமிற்கு பயிற்சி அளித்த டெக்ஸ்டெரிட்டி குளோபல் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஷரத் சாகர் கூறுகையில்,

“2013ம் ஆண்டு முதல், நாங்கள் பீகாரில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக வேலை செய்து வருகிறோம். இந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கான வேரை உருவாக்குவதும், அவர்களை உலகின் சிறந்த பல்கலைகழகங்களுக்கு அனுப்பி வைப்பதும்தான் எங்களது நோக்கம்," எனத் தெரிவித்துள்ளார்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' - என்ற பாரதியின் பாடலை நிஜமாக்கி இருக்கிறது டெக்ஸ்டெரிட்டி குளோபல் அமைப்பு.


இந்த அமைப்பிற்கும், தனது திறமை மற்றும் விடாமுயற்சியால் அமெரிக்காவில் கல்வி கற்கச் செல்ல இருக்கும் மாணவர் பிரேமிற்கும் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற