1500 நகரங்களில் இருக்கும் Msme-க்களுக்கு ரூ.700கோடி கடன் உதவி செய்ததற்கு Flexilons நிறுவனத்திற்கு விருது!

சிறு தொழில் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்தி வரும் பிலெக்சிலோன்ஸ் நிறுவனம் அசோசம் அமைப்பின் சிறந்த கடன் சேவைக்கான விருதை பெற்றுள்ளது
0 CLAPS
0

சிறு தொழில் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்தி வரும் Flexiloans நிறுவனம் Assocham அமைப்பின் 2வது நிதிநுட்பம் & டிஜிட்டல் பரிவர்த்தனை மாநாட்டில் சிறந்த கடன் சேவைக்கான 'Excellence in lending' 'எக்சலன்ஸ் இன் லெண்டிங்' விருது பெற்றுள்ளது.

பிலெக்சிலோன்ஸ்.காம் (FlexiLoans.com – Epimoney Pvt. Ltd.) சிறு தொழில் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு கிளிக்கில் கடன் வழங்கும் டிஜிட்டல் கடன் சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் அனல்டிக்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கடன் தகுதியை நிறுவனம் தீர்மானிக்கிறது.

நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிலக்சிலோன்ஸ் ஆண்டுக்கு ரூ.700 கோடி அளவில் கடன் வழங்கி வருகிறது.

அமேசான், பேபால், பைன்லேப்ஸ், ஃபிளிப்கார்ட், பார்ம் ஈஸி உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து கடன் சேவையை அளித்து வருகிறது. கடன் வாங்கும் அனுபவத்தை வாங்கும் அனுபவமாக சீராக்க நிறுவனம் அல்கோரிதம்களை திறம்பட பயன்படுத்தி வருகிறது.

flexiloans குழு

ஐந்து ஆண்டு கால செயல்பாட்டில், சிறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் கடன் பிரிவில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக பிலக்சிலோன்ஸ் வளர்ந்திருக்கிறது. மூன்றாம் மற்றும் நான்காம் அடுக்கு நகரங்களில் இருந்து நிறுவனம் மாதந்தோறும் ஒரு லட்சத்திற்கு மேல் கடன் விண்ணப்பத்தை பெறுகிறது.

தொழில் அமைப்பான அசோசம் (ASSOCHAM ) அண்மையில் நடத்திய இரண்டாவது நிதி நுட்பம் & டிஜிட்டல் பரிவர்த்தனை மாநாட்டில், சிறந்த கடன் சேவைக்கான எக்சலன்ஸ் இன் லெண்டிங் விருது பெற்றுள்ளது.

இந்த மாநாட்டில் நிதி நுட்பம் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

"அசோசம் அமைப்பிடம் இருந்து சிறந்த கடன் சேவை விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சவாலான பெருந்தொற்று சூழலில், சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் உறுதியுடன் செயல்பட்டதற்கு அங்கீகாரமாக இது அமைகிறது,” என பிலக்சிலோன்ஸ் இணை நிறுவனர் மனிஷ் லூனியா கூறியுள்ளார்.

“ சிறந்த நுகர்வோர் அனுபவத்தை வழங்குவதற்காக நிறுவன குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கான அங்கீகாரமாகவும் விருது அமைகிறது. பல்வேறு சூழல்களில் இணைத்து கடன் வழங்குவதை எளிதாக்கும் முழுமையான கடன் வழங்கும் தொழில்நுட்பத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது, என்றும் அவர் தெரிவித்தார்.

Latest

Updates from around the world