வரும் பண்டிகைக் காலத்தில் 70,000 வேலை வாய்ப்புகளை வழங்க Flipkart திட்டம்!
எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் தேவை அதிகரிக்கும் என்றும், இதற்காக புதிய நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் பிரபலமான ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை தேவையை நிறைவேற்ற தனது சப்ளை செயினில் 70,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக லட்சத்திற்கும் மேற்பட்ட மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும் என தெரிவித்துள்ளது.
டெலிவரி அதிகாரிகள், பகுப்பாளர்கள் உள்ளிட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஃபிளிப்கார்ட் பங்குதாரர்கள் மற்றும் மளிகைக் கடைகளில் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும், என்று ஃபிளிப்கார்ட் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மேலும், வெண்டர்கள் மற்றும் லாஜிஸ்டிக்ச் போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்பு உருவாகும்.
"எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் சூழலில் பண்டிகையின் முக்கியத்துவத்தை ஃபிளிப்கார்ட் உணர்ந்துள்ளது. மகத்தான வாடிக்கையாளர்கள் அனுபவத்தை அளிக்கக் கூடிய பங்குதாரர் இணைப்பை உருவாக்குவதோடு, பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் அளவிற்கு ஏற்ப மொத்த சூழலிலும் முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம்,” என ஃபிளிப்கார்ட் மார்க்கெட்பிளேஸ் மற்றும் இ-கார்ட் மூத்த துணை தலைவர் அமிதேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் நேரடியாக நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு சப்ளை செயின் அம்சங்கள் குறித்து, வகுப்பறை பயிற்சி, டிஜிட்டல் பயிற்சி ஆகியவை இணைந்த பயிற்சி அளிக்கவும் ஃபிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.
டெலிவரி, இன்ஸ்டலேஷன், சானிடைசேஷன், ஹாண்ட் ஹெல்ட் சாதனங்கள் கையாளுதல் ஆகியவை இதில் அடங்கும்.
“இந்த காலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவது மற்றும் விற்பனையாளர்களின் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எங்களால் இயன்ற பங்களிப்பை செய்கிறோம்,” என்று அமிதேஷ் தெரிவித்துள்ளார்.
“லட்சக்கணக்கான விற்பனை பங்குதாரர்கள், மத்திய மற்றும் சிறு, குறு நிறுவனங்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோருக்கு, வேர்ஹவுசிங் போன்றவற்றில் ஃபிளிப்கார்ட் தனியே பயிற்சி அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசின் தேசிய திறன் வளர்ச்சி திட்டத்தின் படி வேலைவாய்ப்பு நியமனங்கள் அமையும் மற்றும் இது உள்ளூர் பொருளாதாரத்தின் மீது நல்லவிதமாக தாக்கம் செலுத்தும் என்றும் ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை பெரிய அளவிலான ஆன்லைன் விற்பனைகளில் ஒன்றாக அமைகிறது. இதன் தேவை காரணமாக, கூடுதல் வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா பூஜாரி | தமிழில்- சைபர்சிம்மன்