இந்த தீபாவளியை ஃபிளிப்கார்ட்-இல் Metaverse அனுபவத்துடன் ஷாப்பிங் செய்யுங்கள்!

By YS TEAM TAMIL
September 21, 2022, Updated on : Wed Sep 21 2022 12:01:32 GMT+0000
இந்த தீபாவளியை ஃபிளிப்கார்ட்-இல்  Metaverse அனுபவத்துடன் ஷாப்பிங் செய்யுங்கள்!
தற்போது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக மெட்டாவர்ஸ் மூலம் ஷாப்பிங் செய்யும் அதிநவீன அனுபவத்தையும் தர உள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்தியாவின் உள்நாட்டு இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட், பண்டிகைகள் மற்றும் முக்கிய தினங்களில் வீட்டு உபயோக பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை விற்பனை செய்து வருகிறது. தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு, 'பிக் பில்லியன் டேஸ் சேல்' என்ற சிறப்பு விற்பனையை செப்டம்பர் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது.


ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து 10 சதவீதம் வரை தள்ளுபடி பெற வாய்ப்பளித்துள்ளது. இதுமட்டுமின்றி Paytm நிறுவனத்துடன் இணைந்து அசத்தலான கேஷ்பேக் ஆஃபர்களை அறிவித்துள்ளது. தற்போது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக மெட்டாவர்ஸ் மூலம் ஷாப்பிங் செய்யும் அதிநவீன அனுபவத்தையும் தர உள்ளது.

meta

மெட்டாவர்ஸில் ஃபிளிப்கார்ட் சேல்:

இந்திய வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்காக பிளிப்கார்ட், மெட்டாவர்ஸில் Flipverse என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக ஃபிளிப்கார்ட் பெஹிமோத் மெட்டா மற்றும் எந்திரியம் ஸ்கேலிங் சொலியூஷன்ஸ், பாலிகோன் ஆகிய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோசியல் மீடியா பிரபலமான முகுல் ஷர்மா Flipverse குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“Flipkart விரைவில் Flipverse ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. Flipverse இன் பிரத்யேக காட்சி இதோ. தயங்காமல் ரீ-ட்வீட் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Flipverse-யில் ஷாப்பிங் செய்வது எப்படி?

டீக்ரிப்டிங் ஸ்டோரி வெளியிட்டுள்ள தகவலின் படி, ஃபிளிப்கார்ட் தீபாவளி சிறப்பு விற்பனையான 'பிக் பில்லியன் டேஸ் சேல்' தொடக்கத்தின் போது Flipverse பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

Flipverse கேம்கள், போட்டிகள், NFTகள், பிராண்ட் செயல்படுத்தல்கள், தயாரிப்பு வெளியீடுகள் போன்றவை இடம் பெற உள்ளது. எந்தவொரு செல்போன் அல்லது உலாவி மூலமாகவும் Flipverse-ஐ அணுக முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Metaverse ஷாப்பிங் அனுபவம் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்குவதை விட, 3D-ரெண்டர் செய்யப்பட்ட ஸ்டோர் காட்சிகளை அனுபவிக்கவும், மெய் நிகர் ஸ்டோருக்கு நடந்து சென்று பொருட்களை பார்வையிடவும் உதவும்.

இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டு மின்வணிக நிறுவனமானது Web3 தீர்வுகளை உருவாக்க, உள்நாட்டில் கண்டுபிடிப்பு திறன் கொண்ட Flipkart Labs ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.


Flipkart Labs அதன் குழு நிறுவனங்களுக்கு NFT தொடர்பான பயன்பாடு, விர்ச்சுவல் இம்மர்சிவ் ஸ்டோர்ஃப்ரண்ட்ஸ், ப்ளே டு ஈர்ன் மற்றும் பிற பிளாக்செயின் தொடர்பான பயன்பாட்டு வழக்குகள் உட்பட நிஜ உலக பயன்பாடுகளுடன் புதிய Web3 மற்றும் Metaverse பயன்பாட்டு நிகழ்வுகளை சோதிக்க உதவுகிறது.

Web3, Metaverse மற்றும் இ - காமர்ஸ்:

தகவல் தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஆப்பிள் ஆகியவையும் மெட்டாவில் தங்களை நிலை நிறுத்த முயற்சித்து வருகிறது. Web3 தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. மெட்டா 100 நாடுகளில் NFT டோக்கன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

meta

மைக்ரோசாப்ட் சமீபத்தில் 2022ல் தனது சொந்த நிறுவன Metaverse ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது, மேலும், பயனர்கள் MS Excel மற்றும் PowerPoint போன்ற வணிகக் கருவிகளை அணுக முடியும். டிசிஎஸ், எச்சிஎல் டெக், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா போன்ற இந்திய ஐடி நிறுவனங்கள் மெட்டாவர்ஸ் சந்தையில் ஒரு பங்கைப் பிடிக்கத் தயாராகி வருகின்றன.


சமீபத்தில், இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்கள் மெட்டாவெர்ஸ் அனுபவத்தை வழிநடத்த நிறுவனங்களுக்கு உதவும் வகையில் Infosys Metaverse Foundry ஐ அறிமுகப்படுத்தியது.


ஆங்கிலத்தில் - பிரதிக்ஷா BU | தமிழில் - கனிமொழி

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற