கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ.1.70 லட்சம் கோடி நலத்திட்ட உதவிகள் அறிவிப்பு!

கொரோனா தடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், தொழிலாளர்களுக்கு உதவ மத்திய அரசு சார்பில் பல திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

26th Mar 2020
 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்படுவதாக, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செவ்வாய் கிழமை அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், ஏழைகள், தொழிலாளர்கள், விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கவலை எழுந்தது. இவர்களுக்கு உதவும் வகையில் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர்.

Finance Minister Nirmala

Union Finance Minister Nirmala Sitharaman

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நன்பகல் செய்தியாளர்களை சந்தித்து, ஏழை மக்கள் கொரோனா தடுப்பின் பாதிப்பை எதிர்கொள்வதற்கான அரசின் நிதி உதவி மற்றும் சலுகைத் திட்டங்களை அறிவித்தார்.

ஊரடங்கு காலத்தில், ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

 • ஏழைகள், தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவில் உதவி. ரொக்க உதவி மற்றும் உணவு மானியம் இதில் அடங்கும்.
 • கொரோனா சிகிச்சை, தடுப்பில் முன்னணியில் செயல்படும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு, ரூ.50 லட்சம் காப்பீடு.
 • 80 கோடி ஏழை மக்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அரிசி/கோதுமை தவிர, மூன்று மாதங்களுக்கு மாதம் 5 கிலோ இலவச அரசி/ கோதுமை வழங்கப்படும்.
 • இல்லங்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.
 • விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ரூ.6000 தொகையில் முதல் தவணை ரூ.2,000 உடனடியாக வழங்கப்படும்.
 • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுகான கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.
 • 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஊதியம், ரூ.200 ஆக உயர்த்தப்படும். தொழிலாளருக்கு ரு.2,000 உயர்வு.
 • ஜூன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ.500 வழங்கப்படும்.
 • உஜ்வாலா திட்டம் கீழ். மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். 8.3 கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடைவர்.
 • தொழிலாளர்கள் பி.எப் நிதியில் இருந்து 75 சதவீத தொகை அல்லது மூன்று மாத சம்பளத்தை முன்பணமாக எடுத்துக்கொள்ளலாம்.
 • மூத்த குடிமக்கள் 3 கோடி பேருக்கு, இரண்டு தவணையாக மூன்று மாதங்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
 • அடுத்த மூன்று மாதங்களுக்கு, ஊழியர், நிறுவன பி.எப் பங்களிப்பை அரசு செலுத்தும். 100க்கும் குறைவான ஊழியர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு, ரூ.15,000க்கும் குறைவாக சம்பளம் பெறுபவர்களுக்கு இது பொருந்தும்.
 • பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக, மாநில அரசுகள் நலத்திட்ட நிதியைக் கொண்டு கட்டுமானப் பணிகளை சமுக விலகலுடன் மேற்கொள்ளலாம்.


தொகுப்பு: சைபர்சிம்மன்

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India