ரொனால்டோவா? மெஸ்ஸியா? - 2021ல் 'உலகின் அதிக ஊதியம் பெறும் கால்பந்து வீரர்கள்' ஃபோர்ப்ஸ் பட்டியல்!

ரொனால்டோ பெறும் ஊதியம் எவ்வளவு!
15 CLAPS
0

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் இந்த ஆண்டுக்கான உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இந்தப் பட்டியலில் பிரபல வீரர் லியோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்திருந்தார்.

ஆனால், இந்த ஆண்டு மெஸ்ஸியை விஞ்சி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு, மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்ததன் காரணமாக அதிகமான தொகையை அவர் ஊதியமாக பெற்றார். அதன்காரணமாக இந்தப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ்படி,

யுனைடெட் அணிக்கு திரும்புவதற்காக சம்பளம் மற்றும் போனஸாக 70 மில்லியன் டாலர்கள் வருவாயாக பெற்றுள்ளார் ரொனால்டோ. இதேபோல் வணிக ஒப்பந்தங்கள் மூலமாக 55 மில்லியன் டாலர்கள் இந்த ஆண்டு வருவாயாக பெற்றுள்ளார்.

இதேபோல், இதில் இரண்டாம் பிடித்த லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டின் இந்த சீசனில் 110 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியிருக்கிறார். ஃபோர்ப்ஸ் படி, பார்க் டெஸ் பிரின்சஸ் அணிக்காக அவரின் ஊதியம் மற்றும் போனஸ் ஆக 5 மில்லியன் டாலரும், வணிக ஒப்பந்தங்கள் மூலம் மூலமாக 35 மில்லியன் டாலர்களும் வருவாயாக பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே பட்டியலில் எந்தவித மாற்றமுமின்றி, பிரபல வீரர் நெய்மர் இந்த ஆண்டும் மூன்றாவது இடத்தைத் தொடர்கிறார். 25 வயதாகும் நெய்மர் 95 மில்லியன் டாலர்கள் வருவாய் உடன் அதே இடத்தில் நீட்டிக்கிறார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிக வருவாய் ஈட்டும் ஐந்து வீரர்களில் மூன்று PSG அணியில் உள்ளனர். இதேபோல் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளை சேர்ந்த வீரர்கள் தலா இருவர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த அட்லெடிகோ மாட்ரிட் அணியின் கிரீஸ்மேன் மற்றும் மேன் யுனைடெட் அணியின் கோலி டேவிட் டி கியா ஆகியோர் இந்தமுறை பட்டியலில் இடம்பெறவில்லை. அதேநேரம், ஆண்ட்ரேஸ் இனியெஸ்டா என்ற வீரர் முதல்முறையாக இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். இவர் ஜப்பானிய லீக்கில் விளையாடும் வீரர் ஆவார்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 10 வீரர்கள் விவரம்!

1 கிறிஸ்டியானோ ரொனால்டோ

2 லியோனல் மெஸ்ஸி

3 நெய்மர் ஜூனியர்

4 கைலியன் மெப்பே

5 முகமது சாலா

6 ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி

7 ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா

8 பால் போக்பா

9 கரேத் பேல்

10 ஈடன் ஹசார்ட்

தகவல் உதவி: ஃபோர்ப்ஸ் | தொகுப்பு: மலையரசு