30 ஆண்டுகளாக காண்டாமிருகங்களை பாதுகாத்து வரும் வனக் காப்பாளர்!

53 வயதான திம்பேஸ்வர் தாஸ் விலங்குங்களை பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதற்காக சமீபத்தில் ‘க்ரீன் வாரியர்’ பிரிவின்கீழ் ‘எர்த் ஹீரோ அவார்ட்’ வழங்கப்பட்டுள்ளது.

3rd Dec 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இந்தியாவில் 500-க்கும் அதிகமான வனவிலங்கு சரணாயலங்களும் 100 தேசிய பூங்காங்களும் உள்ளன. பெருகிவரும் எண்ணற்ற விலங்குகள் இங்கு வசிக்கின்றன. ஆனால் பருவநிலை மாற்றம், காடழிப்பு, மனித குறுக்கீடு போன்ற காரணங்களால் இந்த விலங்குகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

1

வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் சில தனிநபர்களும் இவற்றைப் பாதுகாப்பதில் பங்களித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் திம்பேஸ்வர் தாஸ். இவர் 30 ஆண்டுகளாக அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் இருக்கும் காண்டாமிருகங்களை பாதுகாத்து வருகிறார்.


இவரது அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் புதுடெல்லியில் உள்ள ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட் சமீபத்தில் ‘க்ரீன் வாரியர்’ பிரிவின்கீழ் இவருக்கு ‘எர்த் ஹீரோ அவார்ட்’ வழங்கியுள்ளது. 1987ம் ஆண்டு தனது 23 வயதில் பணியில் சேர்ந்த இவருக்கு 2 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டதாக ’டெலிகிராஃப் இண்டியா’ தெரிவிக்கிறது.

“காசிரங்காவில் திம்பேஸ்வர் 29 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். இவர் விலங்குகளை வேட்டையாடுபவர்களின் தோட்டாக்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளார். இவரை காண்டாமிருகங்கள், காட்டு எருமைகள், யானைகள் போன்றவை துரத்தியுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக குடும்பத்தைப் பாதுகாக்க பலமுறை இருப்பிடத்தை மாற்றியுள்ளார். தேசிய பூங்காவை பாதுகாப்பதற்காகவே அனைத்தையும் எதிர்கொண்டுள்ளார். உளவுத்துறை நெட்வொர்க்கும் சமூக ஆதரவும் பல்வேறு பயங்கர வேட்டைக்காரர்களின் ஊடுருவலைத் தடுக்க உதவியுள்ளது. கால்நடைகள் மீதான தாக்குதல்கள் உடனடியாக தீர்க்கப்பட இவரது வழிகாட்டல் பெரிதும் உதவியுள்ளது,” என அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகளில் திம்பேஸ்வர் விலங்குகளை வேட்டையாடுபவர்களை பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு திறன்களை வளர்த்துக்கொண்டுள்ளார்.  


விலங்குகளை வேட்டையாடுபவர்களை பிடிப்பதற்கான பல்வேறு தேடுதல் வேட்டைகளில் திம்பேஸ்வர் பங்களித்திருப்பதாக காசிரங்கா முன்னாள் டிஎஃப்ஓ ரோஹினி பி சைகியா தெரிவித்ததாக இண்டியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகிறது.

வனக் காப்பாளராக செயல்படுவதும் வேட்டைக்காரர்களை தடுப்பதும் எளிதான செயல் அல்ல. திம்பேஸ்வர் தனது பணிக்காலத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளார். 2013-ம் ஆண்டு அச்சுறுத்தல் காரணமாக பூங்காவிற்குள்ளேயே இடம்பெயர்ந்தார்.

“காசிரங்கா காப்பாளர்களுக்கு நிகராக யாரும் கடினமாக உழைப்பதில்லை. நாங்கள் பணிபுரியவில்லை எனில் காண்டாமிருகங்கள் உயிர்பிழைக்க முடியாது. 24/7 எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படும் சமயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். கடந்த ஆண்டு ஆற்றங்கரையில் மாட்டிக்கொண்ட பல்வேறு காண்டாமிருகங்களை நாங்கள் மீட்ட விதம் இன்றும் என் நினைவில் உள்ளது,” என்றார் திம்பேஸ்வர்.

கட்டுரை: THINK CHANGE INDIA


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Our Partner Events

Hustle across India