Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

‘Freshworks நிர்வாகக் குழுவில் 33% பெண்கள் உள்ளனர்’ - கிரீஷ் மாத்ருபூதம்

ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ கிரீஷ் மாத்ருபூதம், ஃப்ரெஷ்வொர்க்ஸ் CHRO சுமன் கோபாலன் ஆகியோர் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது எப்படி சாத்தியமானது என்பது குறித்து யுவர்ஸ்டோரியிடம் பிரத்யேகமான உரையாடலில் பகிர்ந்துகொண்டார்கள்.

‘Freshworks நிர்வாகக் குழுவில் 33% பெண்கள் உள்ளனர்’ - கிரீஷ் மாத்ருபூதம்

Friday October 01, 2021 , 3 min Read

Freshworks நிறுவனம் சமீபத்தில் அதன் முதல் பொதுப் பங்கு வெளியீட்டை அறிவித்திருந்தது. உலகின் முக்கியப் பங்குச் சந்தைகளில் ஒன்றான நியூயார்க் பங்குச் சந்தையில் (NASDAQ) பட்டியலிடப்பட்ட நிகழ்வு தொழில்நுட்ப உலகையே வியக்க வைத்துள்ளது. 10 பில்லியன் டாலர் ஐபிஓ என்பது இந்திய SaaS ஸ்டார்ட் அப் சூழலின் வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.


செப்டம்பர் 24ம் தேதி நிலவரப்படி ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் #FRSH பங்குகள் மைக்ரோசாப்ட், ஷாப்பிஃபை, சேல்ஸ்ஃபோர்ஸ், அமேசான், ஆப்பிள், ஜூம், அடோப், ஃபேஸ்புக், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளைவிட அதிகம் வர்த்தம் செய்யப்பட்டுள்ளது.


லைவ் ஸ்டாக் ட்ரேடர் வெஸ்டட் ஃபைனான்ஸ் யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்துகொண்ட பிரத்யேக தரவுகள் இதனை சுட்டிக்காட்டுகின்றன.

1
மேலும், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து 2 கோடி ரூபாய்க்கும் மேல் #FRSH பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வெற்றியே வரலாற்று சிறப்புமிக்கதாகக் கருதப்படும் நிலையில், இந்த வெற்றி பெண்கள் தலைமையில் கொண்டாடப்படும் காட்சி மேலும் சிறப்புமிக்கதாகவே தோன்றுகிறது.

தற்சமயம் இந்த SaaS யூனிகார்ன் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களில் 80 சதவீதம் பேர் வெள்ளையர்கள் அல்லாத பிற இன மக்கள் மற்றும் 33 சதவீதம் பேர் பெண்கள்.

ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ கிரீஷ் மாத்ருபூதம், ஃப்ரெஷ்வொர்க்ஸ் CHRO சுமன் கோபாலன் ஆகியோர் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பது எப்படி சாத்தியமானது என்பது குறித்து யுவர்ஸ்டோரியிடம் பிரத்யேகமான உரையாடலில் பகிர்ந்துகொண்டார்கள்.


ஹெர்ஸ்டோரி: ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் கலாச்சாரத்தில் பாலின சமத்துவம் எப்படி உறுதிசெய்யப்படுகிறது?


கிரீஷ் மாத்ருபூதம்: ஃப்ரெஷ்வொர்க்ஸ் ஆரம்ப நாட்களில் இருந்தே வெவ்வேறு பின்னணி கொண்டவர்களைக் குழுவாக ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

2

வழக்கமாக பணி அனுபவம், பின்புலம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், நாங்கள் இவற்றைத் தாண்டி பணியமர்த்தப்படும் நபரின் ஆர்வம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கவனிக்கிறோம். திறன்மிக்கவர்கள் பணியமர்த்தப்படும் அதேசமயம் பாலின சமத்துவத்தையும் எங்கள் பணியிடக் கலாச்சாரம் ஊக்குவிக்கிறது.


ஹெர்ஸ்டோரி: பாலின சமநிலையைப் பேணுவதற்கு எத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன?


சுமன் கோபாலன்: ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலும் வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் அதிகளவில் பெண்களும் வெள்ளையர்கள் அல்லாத மற்ற இனத்தவர்களும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்சமயம் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள 80% பேர் வெள்ளையர்கள் அல்லாத மற்ற இனத்தவர்கள். 33% பேர் பெண்கள். எங்கள் நிறுவனத்தில் 1,300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றுகிறார்கள். சமீபத்தில் நாங்கள் சமத்துவத்திற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டுள்ளோம். 2023ம் ஆண்டில் எங்கள் பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பை குறைந்தபட்சம் 40 சதவீதமாக அதிகப்படுத்த உறுதியேற்றுள்ளோம்.

ஹெர்ஸ்டோரி: பெண் ஊழியர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் மனித வள மேம்பாட்டு அமைப்பை எப்படி சரியானபடி உருவாக்கியிருக்கிறீர்கள்?


சுமன் கோபாலன்: ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் தொடங்கிய நாள் முதல் வாடிக்கையாளர்களுக்கு சரியான பிராடக்டை உருவாக்கி மகிழ்விக்கவேண்டும் என்பதை நோக்கமாக்கக் கொண்டே செயல்பட்டு வருகிறோம். இதே முக்கியத்துவம் மனிதவள அமைப்பை உருவாக்குவதற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

எங்கள் நிறுவன கலாச்சாரத்தில், ஊழியர்களின் தேவைகளை சிறப்பாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. ஒரு நிறுவனமாக, ஊழியர்களுக்கு உதவுவதற்கான புதுமையான யோசனைகளை வரவேற்கிறோம்.

வலுவான மனித வள மேம்பாட்டு அமைப்பை நிறுவியுள்ள வெகு சில நிறுவனங்களில் நாங்களும் இடம்பெற்றிருப்பதை நினைத்து பெருமை கொள்கிறோம்.
Girish Mathrubootham, Freshworks

ஹெர்ஸ்டோரி: தொழில்நுட்பத் துறையில் பெண் தலைவர்கள் மற்றும் பெண் ஊழியர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் என்ன?


சுமன் கோபாலன்: எந்த ஒரு வணிகத்திற்கும் பன்முகத்தன்மை முக்கியம் என்பதை எத்தனையோ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணையும்போது புதுமையான சிந்தனைகள் பெருகும். இதனால் வணிகமும் வருவாயும் அதிகரிக்கும்.

ஸ்டார்ட் அப் உலகம் என்பது மாறுபட்ட பிராடக்ட் அல்லது சேவையை உருவாக்குவதற்காக படைக்கப்பட்டது. ஒரே மாதிரியான சிந்தனை கொண்ட மக்கள் உங்களைச் சுற்றியிருக்கும்போது உங்களால் எப்படி தனித்துவமான ஒன்றை உருவாக்கமுடியும்?

தொழில்முனைவுவைப் பொருத்தவரை பன்முகத்தன்மை கொண்ட சிந்தனைகள் முக்கியம். இதனால் சிறப்பான, புதுமையான யோசனைகள் பிறக்கும் என்பதால் வருங்காலத்தில் இந்தப் போக்கு வழக்கமான ஒன்றாக மாறிவிடும் என்று நம்புகிறேன்.


ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா