யுவர்ஸ்டோரி Exclusive | ஃபிரெஷ்வொர்க்ஸ் இணை நிறுவனர் ஷான் கிருஷ்ணசாமி சத்தமின்றி விலகல்!
இணை நிறுவனர் ஷான் கிருஷ்ணசாமி சத்தமின்றி விலகியதை அடுத்து, சவாலான சர்வதேச வர்த்தகச் சூழலில், இந்தியாவின் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட கிளவுட் சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ஃபிரெஷ்வொர்க்ஸ் ஐந்து மாதங்களாக முதன்மை தொழில்நுட்ப அதிகாரி இல்லாமல் செயல்படுகிறது.
ஃபிரெஷ்வொர்க்ஸ் (
) இணை நிறுவனர் ஷண்முகம் கிருஷ்ணசாமி நிறுவனத்தில் இருந்து அமைதியாக வெளியேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த அவரது பொறுப்புகள் குறையும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாறுதல்களை அடுத்து, அவர் வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது.ஜோஹோ நிறுவனத்தில் இருந்த காலம் முதல் சி.இ.ஓ கிரிஷ் மாத்ரூபூதத்தின் வழிகாட்டியாக இருந்த இணை நிறுவனர் ஷான் கிருஷ்ணசாமி இந்திய சாஸ் துறையின் முக்கிய நிறுவனமாக ஃபிரெஷ்வொர்க்ஸ் உருவாகும் வகையில் அதன் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கியதில் முக்கியமானவராக திகழ்கிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊழியர்கள் கூட்டத்தில் கிருஷ்ணசாமி நிறுவனத்தில் இருந்து விலகுவதாக மாத்ரூபூதம் அறிவித்தார். இந்தத் தகவல் இதுவரை ஊடகங்களில் வெளிவரவில்லை.
“3-4 மாதங்கள் முன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டது. ஷானை மேடைக்கு அழைத்த கிரிஷ் அவர் வெளியேறுவதாக கூறினார்” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஃபிரெஷ்வொர்க்ஸ் ஊழியர் ஒருவர். மேலும் சில ஊழியர்கள் இதை உறுதிப்படுத்தினர்.
வர்த்தக விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட ஆவணம் ஒன்று, கிருஷ்ணசாமி 2002 ஜூலைக்கு பிறகு நிறுவன இயக்குனராக இல்லை என்பதை தெரிவிக்கிறது.
நிறுவன இணையதளத்திலும், அவர் இணை நிறுவனர், சி.டி.ஓ என குறிப்பிடப்படவில்லை.
இணைய ஆவணக் காப்பக பக்கங்களை அலசியபோது, 2022 ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு ஃபிரெஷ்வொர்க்ஸ் தலைமை பக்கங்களில் இருந்து அவரது விவரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, நிறுவன தொழில்நுட்ப வரைபடத்தை உருவாக்கியவர் என அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
புதிய தலைவர்
அண்மையில், ஆண்டு அடிப்படையில் நிகழும் வருவாயில் 500 மில்லியன் டாலரை கடந்தது. (தற்போதைய ஒப்பந்தங்கள் அடிப்படையிலான வருவாய் கணிப்பு). மேலும், 2022 அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் 133.2 மில்லியன் வருவாயை ஈட்டியதாக தெரிவித்தது. முந்தைய இணையான காலத்தை விட இது 26 சதவீத வளர்ச்சியாகும்.
அமெரிக்க பங்குகள், குறிப்பாக தொழில்நுட்ப பங்குகள் சரிவுக்கு உள்ளாகும் நிலையில் ஃபிரெஷ்வொர்க்ஸ் பங்குகளும் விதிவிலக்கல்ல. அதன் பங்கு விலை, நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட பின் 50 டாலரை கடந்தது, அதன் அறிமுக விலையான 43.5 டாலரில் இருந்து 64 சதவீதம் சரிந்தது.
பட்டியலிடப்பட்ட பின் நிறுவன சந்தை மதிப்பீடு 13 பில்லியன் டாலரை கடந்தது. தற்போது 4.5 பில்லியன் டாலராக இருக்கிறது. பட்டியலிடப்படுவதற்கு முன் 3.5 பில்லியன் டாலராக இருந்தது.
பொருளாதார சூழலுக்கு ஏற்ப, வாடிக்கையாளர் நிறுவனங்கள் தங்கள் சாப்ட்வேர் பட்ஜெட்டை குறைக்கும் நிலையில் சாஸ் நிறுவனங்களின் வர்த்தகம் மந்தமாகி வருவதால் நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. (ஃபிரெஷ்வொர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர் குறைப்பை மேற்கொண்டுள்ளன).
நிறுவன தலைமை பக்கத்தில், 2022 செப்டம்பரில் தலைவராக இணைந்த டென்னிஸ் வுட்சைட் இடம்பெற்றுள்ளார். வுட்சைட் நிறுவன தினசரி பணிகளை கவனிக்கும் நிலையில் கிரிஷ் நிறுவன தொலைநோக்கை கவனிப்பதாக விஷயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், ஷான் வெளியேறியது பற்றி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
நிறுவனம் புதிய சிடிஓ-வை நியமிக்க உள்ளதா என்று தெரியவில்லை. முதன்மை பொருள் அதிகாரி பிரகாஷ் ராமமூர்த்தி நிறுவனத்தின் மொத்த தொலைநோக்கு மற்றும் உத்திகளை கவனிக்கிறார்.
"11 ஆண்டுகள் கடினமாக உழைத்து, ஃபிரெஷ்வொர்ஸ் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்க உதவிய பிறகு, 2002 செப்டம்பரில் ஷான் தொழில் வாழ்க்கையில் இடைவெளி எடுக்க தீர்மானித்ததாக யுவர்ஸ்டோரியின் இ-மெயிலுக்கு ஃபிரெஷ்வொர்க்ஸ் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். அவரது பொறுப்புகள், பிரகாஷ் ராமமூர்த்தியால் கவனிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுள்ளது. எனினும், ஷானை தொடர்பு கொள்ள முடியவில்லை.
நிர்வாக மாற்றம்
2020-ல் நிறுவனப்பட்ட ஃபிரெஷ்வொர்க்ஸ், 2018-ல் பில்லியன் டாலர் மதிப்பை பெற்ற நிலையில், கிருஷ்ணசாமியிடன் ஆரம்ப ஊழியர்கள் உள்ளிட்ட மென்பொருள் பொறியாளர்கள் பிரிவினர் தகவல் தெரிவித்துக்கொண்டிருந்தனர். ஆனால், 2021 ஐபிஓ சூழலில், நிறுவனம் நிர்வாக மாறுதலை மேற்கொண்டது. Zuora முன்னாள் CFO டெய்லர் ஸ்லோட் நிதி தலைவராகவும், ஸ்டேசி எப்ஸ்டியன் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக, ஷான் கீழ் தகவல் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது. 40 வயதான நிலையில், கோடிங் ஆர்வம் கொண்ட ஷான் சில ஆண்டுகளாக நிறுவன தினசரி செயல்பாடுகளில் தீவிரமாக இல்லை. மேலும் அவர் பொதுவெளியில் வருவதிலும் ஆர்வம் காட்டவில்லை.
“80 முதல் 100 மில்லியன் டாலருக்கு மேல் வருவாய் உள்ள எந்த ஒரு சாஸ் நிறுவனத்திற்கும் சிடிஓ தேவை” என்கிறார் முதலீட்டு வங்கி நீதம் அண்ட் கோ நிர்வாக இயக்குனர் ஸ்காட் பெர்க்.
“எனினும், முதன்மை பொருள் அதிகாரியை பெற்றிருப்பது சில நேரங்களில் முக்கியமாக அமைகிறது. ஏனெனில் பொருட்களை நிர்வகிக்கப்பவர்கள் தான் நிறுவன வருவாய்க்கு வித்திடுகின்றனர் என்கிறார் அவர் மெய்நிகர் நேர்காணலில்.
அடுத்த கட்டம்
ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தில் ஷானின் பங்கு எவ்வளவு அல்லது அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எனத்தெரியவில்லை. எம்சிஆர் ஆவணப்படி, Skal Ventures LLP மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் பங்குதாரராக,Sassist IO India – ல் இயக்குனராக, பிரெஷ்வொர்க்சில் முதன்மை எச்.ஆராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தனியார் தரவு மேடையான
, மார்க்கெட்டிங் தீர்வு நிறுவனம் பீட்டவுட், ரியாலிட்டி நிறுவனம் பிரிக் ஸ்பேஸ், பயண தேடியந்திரம் மீ டிரிப்பிங், ஊழியர் சேவை நிறுவனம் சூப்பர் பியிங்ஸ், டிஜிட்டல் வள நிறுவனம் ஸ்கிரிப்பாக்ஸ், டெஸ்டிக்மா மற்றும் டிஜிட்டல் ஊடகம் ‘தி கென்’ ஆகியவற்றில் ஷான் முதலீடு செய்திருப்பதாக தெரிவிக்கிறது.- செய்திக் கட்டுரை: வித்யா சிவராமகிருஷ்ணன்
பொறுப்பு துறப்பு: ஃபிரெஷ்வொர்க்ஸ் முன்னாள் ஊழியர் என்ற முறையில் கட்டுரையாளர் நிறுவனத்தின் சில பங்குகளை கொண்டுள்ளார். ( ஊழியர் பங்கு வாய்ப்பு வாயிலாக). இந்தச் செய்தி சுயேட்சையான முறையில் எழுதப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan