Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

Future of Work: ‘மாற்றத்திற்குத் தயாராகுங்கள்’ -அழைப்பு விடுக்கும் யுவர்ஸ்டோரி நிறுவனர்!

பணியின் எதிர்கால மாநாட்டை முன்னிட்டு, பணி சூழலில் காத்திருக்கும் முக்கிய போக்குகளை வலியுறுத்துகிறார் யுவர்ஸ்டோரி நிறுவனர்.

Future of Work: ‘மாற்றத்திற்குத் தயாராகுங்கள்’ -அழைப்பு விடுக்கும் யுவர்ஸ்டோரி நிறுவனர்!

Friday March 05, 2021 , 2 min Read

இன்று துவங்கிய ‘Future of Work' இரண்டு நாள் மெய்நிகர் மாநாடு, பணியின் எதிர்காலம் மற்றும் வர்த்தகத்தின் மீதான அதன் தாக்கம் பற்றி விவாதிக்க, துறை தலைவர்களை ஒன்றாக கொண்டு வருகிறது.

" தொழில்நுட்ப உலகம் மற்றும் ஸ்டார்ட் அப் உலகில் அடிக்கடி கேட்கும் வார்த்தையாக இடையூறு மாற்றம் (disruption) இருக்கிறது. நாம் வாழும் உலகம் கடந்த சில மாதங்களில் இத்தகைய மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. வரும் காலத்தில் இது இன்னும் அதிகரிக்க உள்ளது. தொழில்நுட்பம் அல்லது ஸ்டார்ட் அப் அல்லது நம் வாழ்க்கையில் இத்தகைய மாற்றம் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வது நம் பொறுப்பு.”

இந்த வார்த்தைகளுடன், யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷரத்தா சர்மா, இரண்டு நாள் Future of Work 2021 மாநாட்டை துவக்கி வைத்தார்.


இன்று துவங்கிய இந்த இரண்டு நாள் மெய்நிகர் மாநாடு, துறை தலைவர்களை ஒன்றாக கொண்டு வந்து எதிர்காலப் பணி மற்றும் தொழில்நுட்பத் தாக்கம் குறித்து விவாதிக்க உள்ளது.


கடந்த ஆண்டு கோவிட்-19 இந்திய பொருளாதாரத்தில் பெரும் டிஜிட்டல் மாற்றத்தை கொண்டு வந்தது. 2019ல் நாம் மாற்றம் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தோம், ஆனால் 2020ல் பத்து மடங்கு வேகத்தில் அதை நோக்கி செலுத்தப்படுவதை உணர்ந்தோம்.

பணி

ஆனால், எதிர்கால பணி, பணியிடம் பற்றி பேசும் போது விவாதங்களும், குழப்பமும் அதிகரிக்கின்றன. இனி எல்லாமே தொலைதூர பணியாக தான் நிகழுமா? வர்த்தகங்கள் முழு அலுவலகச் சூழலுக்கு திரும்புமா? பல்வேறு வகையான பணிச் சூழல்களில் செயல்திறன் வாய்ந்தது எது?

கெண்டிக் நடத்திய ஆய்வுபடி, வீட்டில் இருந்து பணியாற்றும் போது செயல்திறனை உணர்ந்ததாக 47 சதவீத தொழில்முறை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். காட்னர் நடத்திய இன்னொரு ஆய்வு, இனி உடனடியாக வரும் காலத்தில் ஊழியர்களை முழுவதுமாக தொலைதூர பணியில் ஈடுபடுத்த 53 சதவீத வர்த்தகத் தலைவர்கள் தயாராக இல்லை என தெரிவிக்கிறது.

மேலும் 84 சதவீத நிறுவனங்கள் வேகமாக டிஜிட்டல்மயமாக்கலுக்கு தயாராகி வருவதாக வேறு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 44 சதவித பணியாளர்கள் தொலைதூர பணியில் ஈடுபடும் வகையில் இவை மாற்றங்களை செய்து வருகின்றன.


எதிர்காலப் பணி தொடர்பான தரவுகள் மற்றும் வர்த்தகங்களுக்கு சிறந்த வாய்ப்பு தொடர்பான ஆலோசனைகள் முடிவில்லாமல் இருக்கின்றன. எனினும், இந்த எதிர்கால போக்கிற்கு ஏற்ப நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு நோக்கில் தேவைப்படும் மாற்றங்கள் தொடர்பாக நிறைய கேள்விகள் இருக்கின்றன.


2021ல் நிறுவனங்கள் புதிய இயல்பை எப்படி கையாள்கின்றன என பார்க்க வேண்டும். மேலும் இணைக்கப்பட்ட எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது பற்றி யோசிக்க வேண்டும். இந்தியாவில் தற்சார்பு இந்தியா இயக்கம் வலுப்பெற்று வரும் நிலையில், நாம் கீழ்கண்ட விஷயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம்:


  • நாட்டில் அடுத்த தலைமுறை வர்த்தகங்களுக்கான வாய்ப்பு.
  • பணியிடச் சூழலை மாற்றி அமைக்கக்கூடிய போக்குகள், தொழில்நுட்பங்கள்.
  • தொழில்நுட்பம் மற்றும் சமநிலை கலாச்சாரம் மூலம் பணியிடத்தில் அனைவரும் உள்ளடக்கிய தன்மையை அதிகரிப்பது.
  • கூட்டு முயற்சியின் எதிர்காலம்.
  • டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிப்பது.
  • சிறு வேலை சூழலின் எழுச்சி, ஏ.ஐ தாக்கம் இன்னும் பல.


சிறந்த தொழில்முனைவோர், அதிகாரிகள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் நடத்தும் பயிற்சிகள் மூலம், எதிர்காலப் போக்கு குறித்த பார்வையை பெற்று, சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான தகவல்களையும் பெறலாம்.

"மாற்றத்தை உண்டாக்குங்கள் அல்லது உங்கள் வர்த்தகம் மாற்றத்திற்கு உள்ளாக நேரும். மற்றவர்கள் செய்வதற்கு முன் நீங்கள் செய்து முன்னணியில் இருங்கள்,” என ஷரத்தா சர்மா பொருத்தமாக சொல்கிறார்.

Future of Work 2021, இணை ஸ்பான்சர்கள்: Hewlett Packard Enterprise and Unique Solutions; Digital Excellence Partner, Google Cloud; Associate Sponsor HP and Intel; and Sponsors: Atlassian, Freight Tiger, Archon I Cohesity, TeamViewer, and Pocket Aces.


தொகுப்பு: சைபர் சிம்மன்