#GadgetFreeHour: கேட்ஜெட் இல்லா 1 மணி நேரம்; குடும்பத்துடன் இணைப்பைப் புதுப்பியுங்கள்!

நவம்பர் 20ம் தேதி நடைப்பெறவுள்ள #GadgetFreeHour விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் இணைந்து டிஜிட்டல் நேரத்தை குறைத்து குடும்பத்துடன் செலவிடுங்கள்.
4 CLAPS
0

பேரண்ட் சர்க்கிள் நடத்தும் மின்னணு சாதனங்களை ஒரு மணி நேரம் தள்ளிவைக்கும் #GadgetFreeHour விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் இரண்டாம் ஆண்டு இது. கடந்த ஆண்டில் இது மாபெரும் வெற்றியை அடைந்தது. சுமார் 10 லட்சம் பெற்றோர் 58,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதில் பங்குபெற்றன.

இந்தாண்டு, தொடக்கத்திலேயே 14 லட்சம் பேரை சமூக ஊடகங்களில் இப்பிரச்சாரம் சென்றடைந்திருக்கிறது. 20.11.2020 அன்று நடத்தப்படவுள்ள இந்நிகழ்வு, 20 லட்சம் பெற்றோரைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த 2020 ஆம் ஆண்டு, கொரொனா பெருந்தொற்றின் விளைவாக எந்நேரமும் பணி செய்ய, படிக்க, பொழுதுபோக்க என்று எல்லாவற்றுக்கும் மின்னணு சாதன திரைகளின் முன்பு அமரும் சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவின்படி ஊரடங்கிலும் அதற்குப் பிந்தைய காலகட்டத்திலும் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் சராசரியாக வாரம் ஒன்றுக்கு 26 மணி நேரத்தை இணையத்தில் கழிப்பது தெரியவந்துள்ளது. எனவேதான் ஒவ்வொருவரும் ’கேட்ஜெட் இல்லா ஒரு மணி நேரம்’ என்பதைக் கடைபிடித்து, குடும்பத்துடனான உறவை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். 

பேரன்ட் சர்க்கிள் நடத்தும் #GadgetFreeHour முயற்சிக்கு தமிழக அரசின் கல்வித்துறையும் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. கேட்ஜெட்களைத் தள்ளி வைத்துவிட்டு, ஒரு மணி நேரத்தைக் குடும்பத்துக்காக செலவழிப்பதாக உறுதியேற்கும்படி பள்ளிகள் தங்களது மாணவர்களின் பெற்றொரைக் கேட்டுக் கொண்டுள்ளன.

பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோர் ஆகியோர் நவம்பர் 20ம் தேதி நடைபெற இருக்கும் இந்நிகழ்வில் பங்கேற்பதாக உறுதி பூண்டுள்ளனர்.

பெற்றோர் வீட்டிலிருந்தே கணிப்பொறியில் வேலையில் இருக்க, குழந்தைகளோ ஆன்லைன் வகுப்புகள்ளில் மும்முரமாக இருக்கிறார்கள். அதாவது அவரவர் உலகில். இந்த சூழலில் இப்படி ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது. 

எனவேதான் ‘Parent Circle' 'கேட்ஜெட் இல்லா ஒரு மணி நேரம்'-என்ற இயக்கத்தைக் கடந்த ஆண்டு தொடங்கியது. 

இந்த #GadgetFreeHour இயக்கத்தில் (சர்வதேச குழந்தைகள் தினமான நவம்பர் 20 அன்று மாலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை) அனைவரும் இணையுமாறு, பேரண்ட் சர்கிள் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வேளையில் குடும்பங்கள் அனைத்தும் தங்கள் கேட்ஜெட்களை ஒதுக்கி வைத்து விட்டு குழந்தைகளுடன் பேசி. விளையாடி, உண்டு, சிரித்து மகிழவேண்டும்.

பேரண்ட் சர்க்கிளின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான திருமதி நளினா ராமலட்சுமி

இந்தாண்டு 20 லட்சம் பெற்றோரை சென்றடைவதை இலக்காகக் கொண்டு செயல்படும். இந்த பிரச்சார இயக்கம் குறித்து பேரண்ட் சர்க்கிளின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான திருமதி நளினா ராமலட்சுமி பேசுகையில்,

“உங்கள் குழந்தையுடன் ஒரு வலுவான அன்புப் பிணைப்பை உருவாக்க நீங்கள் விரும்பினால் உங்களுக்கிடையில் சரியான தகவல் தொடர்பு , இணைப்பு இருக்கவேண்டும். அது நிகழ வேண்டுமென்றால் பெற்றோர் குழந்தைகளிடம் தரமான நேரத்தை செலவிட வேண்டும்.  அதற்கு கேட்ஜட்களை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும். எனவே இந்த இயக்கத்தில் இணைவதன் மூலமாக நாம் நம் குடும்பங்களோடு இணைந்து இருப்பதன் உன்னத மகிழ்ச்சியை நன்கு உணர முடியும்,“ என்றார்.

கேட்ஜெட் இல்லாத ஒரு மணி நேரத்தை மகிழ்ச்சியோடு கழிப்பதற்காக பல்வேறு புதிர் வேடிக்கை விளையாட்டு போட்டிகளை நாங்கள் வழங்குகிறோம். தினந்தோறும் 20 நிமிடங்கள் கேட்ஜெட்கள் இல்லாமல் இருப்பது குறித்து சவால் ஒன்றை பெற்றோருக்காக பேரண்ட் சர்க்கிள் நடத்துகிறது.

இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் நீங்களும் கலந்து கொள்ள, உறுதிமொழி ஏற்க:

www.gadgetfreehour.com

Latest

Updates from around the world