Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

'பாலின சமத்துவம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும்' - TechSparks மும்பை நிகழ்வில் தியா மிர்சா!

'பாலின சமத்துவம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும்' - TechSparks மும்பை நிகழ்வில் தியா மிர்சா!

Monday March 27, 2023 , 2 min Read

"பாலின சமத்துவம் என்பது, பாரம்பரியமான பாலினம் சார்ந்த பாத்திரங்களை கைவிடுவதற்கு வீட்டில் குழந்தைகளுக்கு கற்றுத்தருவதில் இருந்து துவங்க வேண்டும்,” என்கிறார் நடிகையும், முதலீட்டாளரும், யுஎன்.இ.பி நல்லெண்ண தூதரும், இந்திய வனவிலங்கு அறக்கட்டளை, எஸ்.டி.ஜி., க்கான செயலர் ஆலோசகருமான தியா மிர்சா.

முதல் முறையாக மும்பையில் நடைபெற்ற யுவர்ஸ்டோரியிப் முன்னணி தொழில்நுட்ப நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் மும்பை 2023 நிகழ்ச்சியில் பேசிய தியா மிர்சா, பெண்கள் மதிக்க வேண்டும் என்றும், வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தி குழந்தைகளை வளர்க்கும் போது அவர்கள் பொறுப்புடன் வளர்வார்கள் என்று தெரிவித்தார்.

"உதாரணத்திற்கு, எனக்கு மணமான போது, பெண் பண்டிட் தலைமையில் நடைபெற்றது, ஆர்வத்தை உண்டாக்கியதோடு, பெண்கள் மத்தியில் ஊக்கமாகவும் அமைந்தது. அதோடு, அரிதாக இருந்தாலும் பெண் பண்டிட்கள் இருக்கவே செய்கின்றனர்,” என்கிறார் மிர்சா.
டெக்

ஃபிளிப்கார்ட்டிற்கு சொந்தமான மிந்த்ரா நிறுவன் சி.இ.ஓ. நந்திதா சின்ஹா பேசும் போது, பணியிடத்தில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். பெண்கள் தொழில்முனைவோர்களாகவும் முன்னேறி வந்துள்ளனர். இந்த உத்வேகம் தொடர பெண்கள் ஒருவருக்குவர் ஆதரவு அளிக்க வேண்டும், என்றார்.

"செல்வாக்கு மிக்க இடத்தில் உள்ள ஒவ்வொருவரும் அதை அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு தனிவாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் உதவுவதற்காக மிந்த்ராவில் பெண்களுக்கு ஆதரவான கொள்கைகளை உருவாக்கியிருக்கிறோம். தாய்மை எதிர்நோக்கி இருப்பவர்கள் முதல் வயதான பெற்றோர்கள் வரை எல்லோரது பொறுப்புகளும் முக்கியமானவை,” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று மிந்த்ராவின் 50 சதவீத வாடிக்கையாளர்கள் பெண்களாக இருக்கின்றனர். நிறுவன தலைமைப் பொறுப்புகளில் 40 சதவீதம் பெண்கள். 350 பெண்கள் தலைமையிலான வர்த்தகங்கள் 3 மடங்கு வேகமாக வளர நிறுவனம் உதவுகிறது என்றும் கூறுகிறார்.

உலகின் மீது தாக்கம் செலுத்தும் வகையில் பெண்களால் துவக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களில் தான் ஏஞ்சல் முதலீடு செய்வதாக மிர்சா கூறினார்.

"மக்கள் மற்றும் புவிக்கான உண்மையான அக்கறை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையே என்னை கவர்கிறது. காலநிலை மாற்றம், மாசு, காடுகள் அழிப்பு எனும் மூன்று நெருக்கடிகளில் நாம் இருப்பதை ஸ்டார்ட் அப்கள் உணர்ந்திருக்க வேண்டும்,” என்கிறார்.

மேலும், சிறப்பாக செயல்படுவதற்கான ஊக்கம் பற்றி பேசும் போது, ஒர் கலைஞராக, தயாரிப்பாளராக, முதலீட்டாளராக மாற்றத்தை ஏற்படுத்தி, தகவல் அளிப்பது, அதிகாரம் அளிப்பது, ஊக்கம் அளிப்பதே தங்கள் நோக்கம் என்கிறார்.

"முதலாலித்துவத்திற்கு மனசாட்சி இருக்க வேண்டும். நாம் எப்படி பணத்தை சம்பாதிக்கிறோம், எப்படி செலவு செய்கிறோம் என்பது நம்முடைய தேர்வு,” என்கிறார்.

தொழில்நுட்பம் மூலம், பேஷன் மற்றும் வாழ்வியலை ஜனநாயகமயமாக்குவேதே மிந்த்ராவின் நோக்கம் என்கிறார் சின்ஹா.

ஆங்கிலத்தில்: யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan