Gold Rate Chennai: தங்கம் விலை ரூ.91,000-க்கு மேலாக நீடிப்பு; 10 நாட்களில் ரூ.5000+ உயர்வு
கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.5,000-க்கு மேல் அதிகரித்துள்ளது. இன்று ரூ.120 மட்டுமே உயர்ந்தாலும் கூட சவரன் விலை ரூ.91,000-க்கு மேலாகவே நீடிக்கிறது.
ஆபரணத் தங்கம் விலை வழக்கம்போல் வரலாறு காணாத அளவில் உச்சத்தை எட்டி, சவரன் விலை ரூ.91,000-க்கு மேலாக நீடிக்கிறது. நகை வாங்க விழையும் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி தொடர்கிறது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் இரு முறை தங்கம் விலை உயர்ந்தது. 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.11,385 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.91,080 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.12,420 ஆகவும், சவரன் விலை ரூ.99,360 ஆகவும் இருந்தது.
கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.5,000-க்கு மேல் அதிகரித்துள்ளது. இன்று ரூ.120 மட்டுமே உயர்ந்தாலும் கூட சவரன் விலை ரூ.91,000-க்கு மேலாகவே நீடிக்கிறது. எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையும் இன்று வரலாற்று உச்சத்தை எட்டியிருக்கிறது.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (9.10.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.11,385 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.91,200 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.17 உயர்ந்து ரூ.12,420 ஆகவும், சவரன் விலை ரூ.136 உயர்ந்து ரூ.99,496 ஆகவும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (9.10.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.171 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1000 உயர்ந்து ரூ.1,71,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.78 என கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க அரசில் பணிமுடக்கம் காரணமாக, பாதுகாப்பு கருதி தங்கத்தின் முதலீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, புவிசார் அரசியல் தாக்கத்தின் எதிரொலியாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்தப் போக்கு தொடரலாம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,385 (ரூ.15 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.91,200 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,420 (ரூ.17 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.99,496 (ரூ.136 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.11,385 (ரூ.15 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.91,200 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.12,420 (ரூ.17 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.99,496 (ரூ.136 உயர்வு)
Edited by Induja Raghunathan






