Gold Rate Chennai: சரசரவென குறைந்த தங்கம் விலை; சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

By Kani Mozhi
November 23, 2022, Updated on : Wed Nov 23 2022 06:47:11 GMT+0000
Gold Rate Chennai: சரசரவென குறைந்த தங்கம் விலை; சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
வாரத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன் படி இன்றைய தினமும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

வாரத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன் படி இன்றைய தினமும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,905 ரூபாய்க்கும், சவரன் 39,240 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4,885 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 39,080 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
gold rate

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 22 ரூபாய் குறைந்து 5,329 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 42,632 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 67 ரூபாய்க்கும், ஒரு கிலோ 67,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.


சரிவுக்கான காரணம் என்ன?


சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடுகளை தேட வைத்துள்ளது. வரும் நாட்களில் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதத்தை சற்றே உயர்த்தலாம் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். மற்றொருபுறம் சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவைப் போலவே சீனா உலக அளவில் அதிக தங்க நுகர்வு கொண்ட நாடாக உள்ளது. சீனாவில் இப்போது நிலவி வரும் கொரோனா பிரச்சனையால் தங்கத்தின் தேவை வெகுவாக குறைந்துள்ளது.


முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:


தங்கம் விலை @ சென்னை


> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,885 (மாற்றம்: ரூ.20 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,080 (மாற்றம்: ரூ.160 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,329 (மாற்றம்: ரூ.22 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 42,632 (மாற்றம்: ரூ.176 குறைவு)


தங்கம் விலை @ மும்பை


> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,825 (மாற்றம்: ரூ.10 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,600 (மாற்றம்: ரூ.80 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,264 (மாற்றம்: ரூ.11 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,112 (மாற்றம்: ரூ.88 குறைவு)