Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

Gold Rate Chennai: தங்கம் வாங்க தயாரா? இன்றைய சரிவு எவ்வளவு?

கடந்த வார இறுதி முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Gold Rate Chennai: தங்கம் வாங்க தயாரா? இன்றைய சரிவு எவ்வளவு?

Monday November 28, 2022 , 2 min Read

கடந்த வார இறுதி முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,935 ரூபாய்க்கும், சவரன் 39,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 4,921 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 39,368 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
gold

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 4 ரூபாய் குறைந்து 5,323 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 42,584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 67 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ 67,500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?

உலகிலேயே தங்கம் நுகர்வில் மிகப்பெரிய நாடாக உள்ள சீனாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் சீனாவில் தங்கத்தின் தேவை குறைந்ததை அடுத்து விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விட டாலரில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,921 (மாற்றம்: ரூ.4 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,368 (மாற்றம்: ரூ.32 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,323 (மாற்றம்: ரூ.4 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 42,584 (மாற்றம்: ரூ.32 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,855 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,840 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,297 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,376 (மாற்றமில்லை)