Gold Rate Chennai: இப்போ நகை வாங்க யோசிக்கனும்? 40 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!
கடந்த வார இறுதி முதலே சரசரவென சரிந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்க காத்திருந்தவர்களையும், இல்லத்தரசிகளையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வார இறுதி முதலே சரசரவென சரிந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்க காத்திருந்தவர்களையும், இல்லத்தரசிகளையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,955 ரூபாய்க்கும், சவரன் 39,640 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து 4,955 ரூபாயாகவும், சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து 40,080 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 55 ரூபாய் அதிகரித்து 5,412 ரூபாய்க்கும், சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்து 43,296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர ஆரம்பித்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு ஒரு ரூபாய் 70 காசுகள் வரை உயர்ந்து 70 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 700 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 70,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரான மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் எச். பவல், ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்வின் அளவை குறைக்க திட்டமிட்டு வருவதாகவும், ஆனால் பொருளாதாரம் நிலையான நிலைக்கு திரும்பும் வரை மக்களின் கடன் செலவுகள் அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தார். இது வரவிருக்கும் கொள்கைக் கூட்டங்களில் சிறிய கட்டண உயர்வு எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தியது.இதனால் டாலர் குறியீட்டு எண்ணின் மதிப்பு குறைந்ததை அடுத்து தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,010 (மாற்றம்: ரூ.55 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,080 (மாற்றம்: ரூ.440 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,412 (மாற்றம்: ரூ.55 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 43,296 (மாற்றம்: ரூ.440 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,925 (மாற்றம்: ரூ.50 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,400 (மாற்றம்: ரூ.400 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,373 (மாற்றம்: ரூ.55 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,984 (மாற்றம்: ரூ.440 அதிகரிப்பு)