Gold Rate Chennai: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 உயர்வு!
இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தடாலடியாக அதிகரித்துள்ளது.
இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தடாலடியாக அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (06/02/2023)
கடந்த வார தொடக்கம் முதலே தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து வந்த நிலையில், வார இறுதி நாட்களாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தங்கம் விலை கணிசமான அளவு சரிந்தது. இது நகை வாங்கக் காத்திருந்த நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பாராத அளவிற்கு சவரனுக்கு 240 ரூபாய் வரை அதிகரித்துள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,335 ரூபாய்க்கும், சவரன் 42,680 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 5,365 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 42,920 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 30 ரூபாய் அதிகரித்து 5,727 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 45,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையை போல் அல்லாமல், இன்று வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் குறைந்து 76 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வேலை வாய்ப்பு தரவுகளின் படி, 517,000 புதிய வேலை வாய்ப்புகளுடன் அமெரிக்காவின் வேலையில்லா திண்டாட்டம் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதனிடையே, அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பால் டாலர் குறியீட்டு எண்ணின் மதிப்பு கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை சரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், தங்கம் 10 கிராமுக்கு ரூ. 302 அல்லது 0.53% அதிகரித்து ரூ.56,887க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. சில்வர் ஒரு கிலோவுக்கு ரூ.302 உயர்ந்து ரூ.67,696க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,365 (மாற்றம்: ரூ.30 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,920 (மாற்றம்: ரூ.240 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,727 (மாற்றம்: ரூ.30 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,816 (மாற்றம்: ரூ.240 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,265 (மாற்றம்: ரூ.25 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,120 (மாற்றம்: ரூ.200 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,744 (மாற்றம்: ரூ.28 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,952 (மாற்றம்: ரூ.224 அதிகரிப்பு)