Gold Rate Chennai: மீண்டும் ஏறியது தங்கம் விலை - சவரனுக்கு ரூ.240 உயர்வு!
தங்கம் விலை இன்று ஒரே நாளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (06/06/2023)
வாரத்தின் முதல் நாளான நேற்று சரிந்த தங்கம் விலை இன்று மீண்டும் கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,570 ரூபாய்க்கும், சவரன் 44,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 5,600 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 44,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 6,057 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 48,456 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 30 காசுகள் அதிகரித்து 78 ரூபாய்க்கும், கிலோவிற்கு 300 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
ஜூன் 8ம் தேதி நிறைவடைய உள்ள கூட்டத்திற்கு பிறகு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வட்டி விகித உயர்வை இடைநிறுத்துவது தொடர்பாக அறிவிக்கக்கூடும் என்பதால் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,600 (மாற்றம்: ரூ.30 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,800 (மாற்றம்: ரூ.240 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,057 (மாற்றம்: ரூ.30 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,456 (மாற்றம்: ரூ.240 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,560 (மாற்றம்: ரூ.30 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,480 (மாற்றம்: ரூ.240 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,065 (மாற்றம்: ரூ.32 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,520 (மாற்றம்: ரூ.256 அதிகரிப்பு)