அப்பாடா!! நிம்மதி பெருமூச்சு விட வைத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?

- +0
- +0
வாரத்தின் முதல் நாளான நேற்று அதிகரித்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று சரிவுடன் விற்பனையாகி வருவது நகை வாங்க காத்திருந்தவர்களை நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,045 ரூபாய்க்கும், சவரன் 40,360 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை), 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் சரிந்து 5,010 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் சரிந்து 40,080 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 35 ரூபாய் குறைந்து 5,412 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 43,296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் கணிசமான அளவு சரிந்துள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை கிராமிற்கு ஒரு ரூபாய் 70 காசுகள் வரை சரிந்து 70 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,700 ரூபாய் அளவிற்கு சரிந்து 70,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
பங்குச்சந்தைகளில் குறுகிய கால முதலீடுகள் மீது அதிக லாபம் கிடைப்பதால் முதலீட்டாளர்களை கவனம் தங்கத்தில் இருந்து திரும்பியுள்ளது. இதனால் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது.
மற்றொருபுறம் உலக அளவில் மிகப்பெரிய தங்க நுகர்வோரான சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் தங்கத்தின் தேவையை குறைந்துள்ளதால், அதன் விலை நேற்றைய வர்த்தகத்தின் இறுதி முதலே சரியத் தொடங்கியுள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,010 (மாற்றம்: ரூ. 35 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,080 (மாற்றம்: ரூ.280 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,412 (மாற்றம்: ரூ.35 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 43,296 (மாற்றம்: ரூ.280 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,960 (மாற்றம்: ரூ. 30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,680 (மாற்றம்: ரூ. 240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,411 (மாற்றம்: ரூ. 33 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,288 (மாற்றம்: ரூ. 264 குறைவு)
- +0
- +0