Gold Rate Chennai: மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை; எவ்வளவு குறைஞ்சியிருக்கு தெரியுமா?

வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வந்த தங்கம் விலை வாரக்கடைசி நாளில் சற்றே குறைந்துள்ளது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

Gold Rate Chennai: மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை; எவ்வளவு குறைஞ்சியிருக்கு தெரியுமா?

Saturday March 25, 2023,

2 min Read

வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வந்த தங்கம் விலை வாரக்கடைசி நாளில் சற்றே குறைந்துள்ளது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் (25/03/2023)

கடந்த சில வாரங்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலை, சவரனுக்கு 44 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பேரதிர்ச்சியில் இருந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது.

சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின்போது, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் 5,560 ரூபாய்க்கும், சவரன் 44,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,550 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 44,400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் குறைந்து 6,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 48,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளியின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் அதிகரித்து 76 ரூபாய்க்கும், ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் அதிகரித்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

gold

திடீர் சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சரிவில் இருந்த டாலர் மதிப்பு மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்திற்கு பதிலாக டாலர் மீது திரும்பியுள்ளது, அதன் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,550 (மாற்றம்: ரூ.10 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,400 (மாற்றம்: ரூ.80 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,100 (மாற்றம்: ரூ.10 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,800 (மாற்றம்: ரூ.80 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,500 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,000 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,000 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,000 (மாற்றமில்லை)