Gold Rate Chennai: சரசரவென சரிந்த தங்கம் விலை; இன்று விலை என்ன தெரியுமா?
கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சரிந்து நகை வாங்க காத்திருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சரிந்து நகை வாங்க காத்திருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,935 ரூபாய்க்கும், சவரன் 39,480 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 4,925 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 39,400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் குறைந்து 5,327 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 42,616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையைப் போலவே இன்று வெள்ளியின் விலையிலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 67 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவிற்கு 500 ரூபாய் அதிகரித்து , ஒரு கிலோ 67,500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
உலகிலேயே தங்கம் நுகர்வில் மிகப்பெரிய நாடாக உள்ள சீனாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் சீனாவில் தங்கத்தின் தேவை குறைந்ததை அடுத்து விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,925 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,400 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,327 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 42,616 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,855 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,840 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,297 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,376 (மாற்றமில்லை)