Gold Rate Chennai: நேத்தே தங்கம் வாங்கி இருக்கலாம் - இன்றைய விலை என்ன தெரியுமா?
நேற்று தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில், இன்று காலை முதலே அதிகரித்து விற்பனையாகி வருவது நடுத்தர குடும்பத்தினரையும், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில், இன்று காலை முதலே அதிகரித்து விற்பனையாகி வருவது நடுத்தர குடும்பத்தினரையும், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,010 ரூபாய்க்கும், சவரன் 40,080 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து 5,016 ரூபாயாகவும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 40,128 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 6 ரூபாய் அதிகரித்து 5,418 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 43,344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர ஆரம்பித்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து 71 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 71,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
டிசம்பர மாதத்தில் ஃபெடரல் வங்கி குறைந்த அளவிலான வட்டி விகிதத்தை உயர்த்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. டாலரின் மதிப்பு சரிவடைந்ததும், அமெரிக்க பண்ணை வேலை தரவுகளும் தங்கத்தின் மதிப்பு உயர காரணமாக அமைந்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,016 (மாற்றம்: ரூ.6 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,128 (மாற்றம்: ரூ.48 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,418 (மாற்றம்: ரூ.6 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 43,344 (மாற்றம்: ரூ.48அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,950 (மாற்றம்: ரூ.20 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,600 (மாற்றம்: ரூ.160 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,400 (மாற்றம்: ரூ.22 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,200 (மாற்றம்: ரூ.176 அதிகரிப்பு)