Gold Rate Chennai: சரசரவென அதிகரிக்கும் தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் என்ன?
கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவது நடுத்தர குடும்பத்தினரையும், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவது நடுத்தர குடும்பத்தினரையும், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,016 ரூபாய்க்கும், சவரன் 40,128 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து 5,023 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 40,184 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 7 ரூபாய் அதிகரித்து 5,425 ரூபாய்க்கும், சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 43,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர ஆரம்பித்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு ஒரு ரூபாய் 30 காசுகள் உயர்ந்து 71 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 71,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்காவின் டாலர் மதிப்பு மற்றும் கருவூல விளைச்சல் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. எனவே, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் நேற்று ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $1,786.92 ஆக இருந்த தங்கம் விலை $1,799.10 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,023 (மாற்றம்: ரூ.7 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,184 (மாற்றம்: ரூ.56 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,425 (மாற்றம்: ரூ.7 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 43,400 (மாற்றம்: ரூ.56 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,950 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,600 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,400 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,200 (மாற்றமில்லை)