Gold Rate Chennai: படிப்படியாய் உயரும் தங்கம் விலை - 44,000-ஐ கடந்த சவரன் விலை!

தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gold Rate Chennai: படிப்படியாய் உயரும் தங்கம் விலை - 44,000-ஐ கடந்த சவரன் விலை!

Tuesday September 19, 2023,

2 min Read

தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் (19/09/2023):

கடந்த 3 தினங்களாகவே தங்கம் விலை கிராமிற்கு 10 ரூபாய் விதம் உயர்ந்து வருவது நகை வாங்கக் காத்திருப்போருக்கும், நடுத்தர மக்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,540 ரூபாய்க்கும், சவரன் 44,320 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (திங்கட்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் அதிகரித்து 5,550 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 44,400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் அதிகரித்து 6,020 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 48,160 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 30 காசுகள் அதிகரித்து 78 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோவிற்கு 300 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

gold

உயர்வுக்கான காரணம் என்ன?

இந்தியாவில் பண்டிகை மற்றும் திருமண சீசனை முன்னிட்டு தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,550 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,400 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,020 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.48,160 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,520 (மாற்றம்: ரூ.15 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,160 (மாற்றம்: ரூ.120 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,022 (மாற்றம்: ரூ.17 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.48,176 (மாற்றம்: ரூ.136 அதிகரிப்பு)