Gold Rate Chennai: அடடே நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்களே; இன்று தங்கம் விலை என்னத் தெரியுமா?
கடந்த வாரத்தில் இறுதி முதலே தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை, இன்று சரசரவென உயர்ந்து சவரனுக்கு 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் இறுதி முதலே தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை, இன்று சரசரவென உயர்ந்து சவரனுக்கு 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4, 675 ரூபாய்க்கும், சவரன் 37,520 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளிக் கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 4,675 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 37,400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 16 ரூபாய் அதிகரித்து 5,116 ரூபாய்க்கும், சவரனுக்கு 128 ரூபாய் வரை அதிகரித்து 40,928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 63.20 ரூபாயாகவும், கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்து 63,200 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.
காரணம்: கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 75 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,690 (மாற்றம்: ரூ.15 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,520 (மாற்றம்: ரூ.120 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,116 (மாற்றம்: ரூ. 16 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,928 (மாற்றம்: ரூ.128 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,650 (மாற்றம்: ரூ.50 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,200 (மாற்றம்: ரூ. 400 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,073 (மாற்றம்: ரூ. 53 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,584 (மாற்றம்: ரூ. 424 அதிகரிப்பு)