Gold Rate Chennai: மீண்டும் புதிய உச்சம் - தங்கம் விலை கிராமுக்கு ரூ.480 உயர்வு!
ஆபரணத் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் கண்டு வரும் நிலையில், சென்னையில் கிராம் விலை ரூ.7,060 ஆகவும், சவரன் விலை ரூ.56,480 ஆகவும் இருப்பது நகை வாங்குவோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.7,000 ஆகவும், சவரன் விலை ரூ.160 உயர்ந்து ரூ.56,000 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.21 உயர்ந்து ரூ.7,636 ஆகவும், சவரன் விலை ரூ.168 உயர்ந்து ரூ.61,088 ஆகவும் இருந்தது. இன்று மீண்டும் புதிய உச்சம் காணும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (25.9.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.7,060 ஆகவும், சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.56,480 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.66 உயர்ந்து ரூ.7,702 ஆகவும், சவரன் விலை ரூ.528 உயர்ந்து ரூ.61,616 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் புதன்கிழமை (25-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.101 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3000 உயர்ந்து ரூ.1,01,000 ஆகவும் விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை சமீபத்தில் குறைத்தது. இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல், உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், இந்தியாவில் இது பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கம் விலை வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்தப் போக்கு நீடிக்கலாம் என வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,060 (ரூ.60 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,480 (ரூ.480 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,702 (ரூ.66 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,616 (ரூ.528 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan